ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

சுவற்றுமுள்ளங்கிஇலை (மூலிகை எண்.336.).


  • சுவற்றுமுள்ளங்கிஇலையானது நீர்க்கட்டையும்,
  • மார்புநோயையும்,
  • வாத சோபையையும் போக்கும்.

சுரையிலை.(சுரைக்காயின் இலை) (மூலிகை எண்.335.).


  • சுரையிலையின் கொழுந்து சோபை ரோகம்,
  • தேகபாரிப்பு,
  • நீங்கா முத்தோஷங்கள் போகும்,
  • வீக்கத்தையும்,
  • மூத்திரக் கட்டையும் நீக்கும்,
  • மலம் இளகி இறங்கும்.

சுரக்காய்.(மூலிகை எண்.334.).


  • தீயகுணமுள்ள சுரக்காயினால் வாதபித்த அரோசகம்,
  • பீலிகரோகம்,
  • ஆமம்,
  • மார்பு நோய் இவைகளை உண்டாக்கும்.
  • உடம்பின் உட்சூடு நீங்கும்..

சுண்டைக்காய் வற்றல்.(மூலிகை எண்.333.).


  • சுண்டைக்காய் வற்றலால் பித்த அரோசகம்,
  • மலக்கிருமி,
  • கிரகணி ,
  • ஆசனத்துவாரச் சீதகட்டு,இவைகள் போகும்,
  • பசியுண்டாகும். 

சுண்டைக்காய்.(மூலிகை எண்.332.).


  • கசப்புசுவையுடைய மலைச்சுண்டைக்காயால் மார்புசளி,
  • கிருமிரோகம்,
  • வாதாதிக்கம் ,ஆகியன போகும்.