வியாழன், 4 ஜனவரி, 2018

செங்கற்றாழை.(மூலிகை எண்.342.).


  • செங்கற்றாழையினால் உட்சூடு அகலும்.
  • நித்திரை பங்கம் நீங்கும்.
  • நல்ல தேஐசை உண்டாக்கும்.
  • இரும்பை தங்கமாக்கும்.(இரும்பு ஊசி சொருகி வைத்து மறுநாள் எடுத்து பார்க்க தங்க மூலாம் பூசியது போல தங்க வர்ணமாய் இருக்கும்).
  • குறிப்பு :சாதாரண கற்றாழையை சாயத்தில் ஊறவைத்து ஏமாற்றுக்காரர்கள் விற்கிறார்கள்.அசல் மூலிகை பெற வேண்டின் அது இருக்கும் மலைகளில் சென்று நேரடியாக எடுத்துக்கொள்ள நன்மையாம்.

செங்கழுநீர்க்கிழங்கு.(மூலிகை எண்.341.).


  • செங்கழுநீர்க்கிழங்கால் இருமல்,
  • பித்தநோய்,
  • சர்வ மேகம்,
  • புணர்ச்சியின் வெப்பம்,
  • தாகரோகம்,
  • சிலேத்தும அரோசகம் இவைகள் நீங்கும்.
  • விழிக்கும் ,உடலுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும்.

புதன், 3 ஜனவரி, 2018

செங்கத்தாரி வேர்ப்பட்டை.(மூலிகை எண்.340.).






  • செங்கத்தாரி வேர் பிரமேகநீர்,
  • ஓட்டுப்புண் (கிரந்தி),
  • புண் புரைகள்,
  • கீல்களில் வீங்கச் செய்கின்ற கப மகா வாதம் இவைகள் போகும். 

சூரைப்பழம்.(மூலிகை எண்.339.).

சூரைப்பழம்.(மூலிகை எண்.339.).


  • காரைப் பழத்தின் ஓர் இனமாகிய சூரைப்பழத்திற்கு அதிமந்தமும்,
  • கப தோஷமும் ,
  • குடல் நோயும் உண்டாகும். 

சூரியகாந்தி.(மூலிகை எண்.338.).



  • சூரியகாந்தியால் சகானவர்த்த வாதம் (பாரிச வாதம் ),
  • உடற்கடுப்பு ,
  • கணுச்சூலை,
  • நீரேற்றம், முதலியன தீரும்,
  • இந்த செடி  அசுத்த காற்றை சுத்தமாகும் .
  • இதன் வித்திலிருந்து எடுக்கும் தைலம் உணவில் சேர்க்க மலத்தை இளக்கும்.

சூரணத்தண்டு.(மூலிகை எண்.337.).



  • கருணைத்தண்டு  பத்தியத்திற்கு ஆகும் ,
  • மூலம் போகும் .
  • கப பிரோகம் ,
  • மேகதாதுவிருத்தி ஆகும்.
  • சீரணமும் ,பசியும் உண்டாகும்.