செவ்வாய், 30 டிசம்பர், 2014
வியாழன், 11 செப்டம்பர், 2014
காஞ்சொறி.(மூலிகை எண்:168.)
- காஞ்சொறியினால் சுர வெப்பம்,மேகம்,சொறிசிரங்கு,கபம்,வாதம்,முதலியன நீங்கும்.
- இந்த இனத்தில் பச்சை நிறத்தில் சிறுகாஞ்சொறி,பெருங்காஞ்சொறி என இரு விதங்கள் உண்டு.
- சிவப்பு ,கறுப்பு என இரண்டு விதங்கள் உண்டு.
- சிறுகாஞ்சொறி வேரானது சுவாச காசம்,திரிதோஷ சுரங்கள்,கரப்பான்,புண்,தாகம்.முதலிய வற்றை நீக்கும்.
- பெருங் காஞ்சொறி வேரானது இருமல்,இறைப்பு,சீதசுரம்,ஆகியன போகும்.
- செந்தொட்டிவேரினால் கீழ் வாதம்,விதாகம்,ரூட்சை,கடுவன்,இறைப்பு,கோழை ஆகியன போகும்.
- கருஞ்காஞ்சொறி வேருக்கு பொடி இருமல்,ஜலஸ்ராவம்,சிலேத்துமரூட் சை,அன்கு ரோகம்.ஆகியன நீங்கும்.
வெள்ளி, 5 செப்டம்பர், 2014
வியாழன், 4 செப்டம்பர், 2014
களாக்காய்.(மூலிகை எண்:154.)
களாக்காய் :
புளிப்பு உள்ள களாக்காய்க்குக் காதடைப்பு,தாகம்,பித்த தோஷம்,வமனம்,அருசி,ரத்த பித்தம், போகும்.இன்னும் இதனால் தீவிரமான பசி உண்டாகும்.
களாப்பழம்:
நிலக்களாப்பழத்தை மிகு பசியில் தின்றால் சீதரத்தமும்,அதிமந்தத்தில் தின்றால் நல்ல பசியையும் உண்டாக்கும்.தொண்டை வலியும்,தலைக்கனமும் நீங்கும்.
களாப்பூ :
நேத்திரத்தில் உண்டான கரும்படலம்,வெண்படலம்,ரத்தப் படலம்.சதை படலம் முதலிய ரோகங்களும் விலக்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)