திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சிறுகட்டுக்கொடி.(மூலிகை எண்.300.).


  • சிறுகட்டுக்கொடியால் ,சீதரத்த பேதியும்,
  • மேகநீரும் கட்டு படும். 
  • சரீரத்திற்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

சிறு அம்மான் பச்சரிசி.(மூலிகை எண்.299.).


  • பாலுள்ள சிறு அம்மான் பச்சரிசியால்  சாதிலிங்கம் மெழுகு ஆகும்.
  • மேக உஷ்ணம் நீங்கும்.
  • இது பசுவின் பாலுக்கு சமம்,எனவே உதய காலத்தில் சாப்பிட வேண்டும்.

சிறியாநங்கை(மூலிகை எண்.298.).




  • சிறியாநங்கை என்னும் மூலிகை முறைப்படி காப்பு கட்டி எடுக்க பெண் வசியம் செய்யும்.
  • வெங்காரத்தை பஸ்பமாக்கும்.
  • தேகத்தில் வனப்பை உண்டாக்கும்.

சிவனார்வேம்பு.(மூலிகை எண்.297.).




  • சிவனார்வேம்பினால், ஆகந்துக விரணம்,
  • நாட்பட்ட புண்,
  • சர்மதல குட்டம்,
  • ராஜ பிளவை,
  • கர்ப்ப விஷம்,
  • மகாவாதம்,
  • குஷ்டம் ,
  • அக்கினி மந்தம் தீரும்.
  • சரீரம் அழகாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி.(மூலிகை எண்.295.).


  • சிவப்பு அம்மான் பச்சரிசிக்கு வாதம்,
  • பிரமேகம் போகும்.
  • சுக்கில தாது விருத்தியாகும்.
  • வெள்ளியை பஸ்பிக்கும்.

வெண்சிவதைவேர்.(மூலிகை எண்.295.).


  • கசப்பும்,துவர்ப்புமுள்ள வெண்சிவதைவேரால் பித்த கோபம்,
  • மலாசயக் கிருமியையும் போக்கும்,
  • விரோசனத்தை தரும்.

கருஞ்சிவதைவேர்.(மூலிகை எண்.294.).

  • காரமும்,கசப்புமுள்ள கருஞ்சிவதைவேரால் அறிவதற்கரிய எலி விஷத்தையும்,
  • பித்த குன்மத்தையும் நீக்கும்.
  • பேதியை உண்டாக்கும்.

சிவதைவேர்.(மூலிகை எண்.293.).

  • குற்றமற்ற சிவதைக்கு பழையமலம்,
  • உதாவர்த்த வாதம்,
  • பித்தவாத தொந்தம்,
  • பாலகிரகதோஷம் ஆகியன விலகும்.  

சிவகரந்தை.(மூலிகை எண்.292.).


  • மணமுள்ள சிவகரந்தை வமனம்,
  • அருசி,
  • விந்து நஷ்டம்,
  • மந்த வாதம்,
  • கரப்பான்,
  • வாதாதி தொந்தம்,
  • காசம்,
  • அக்கினி மந்தம் இவைகளை நீக்கும்.
  • சடராக்கிகனியும்,வனப்பையும் உண்டாக்கும்.


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

சிலாரசம்.(மூலிகை எண்.291.).


  • மலின மேகநிறமும் மணமுள்ள சிலாரசத்தால் சிரஸ்த்தாபம்,
  • ஜலதோஷம்,
  • தனுர் வாதம்,
  • சந்நி,
  • அதி தும்மற் பீனிசம்,இவைகள் போகும்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

சிங்கடாப் பருப்பு.(மூலிகை எண்.290.).


  • சிங்கடாப் பருப்பால் தாது பலப்படும்.
  • கபம் ,
  • பித்தம்,
  • பயித்தியம்,
  • அக்கினி மந்தம் இவைகள் நீங்கும்.

சிகைக்காய் or (சீயக்காய்) .(மூலிகை எண்.289.).


  • சிகைக் காயானது நாசியுட் புரிகின்ற ஆக்கிரான நசியச் சிகிச்சைகளுக்கு முக்கிய மருந்தாகும்.
  • பேதியும்,
  • வாந்தியும் உண்டாக்கும்,
  • பலவித நெய் சிக்குகளை நீக்கும்.   

சாறுவேளை.(மூலிகை எண்.288.).


  • கவலை தரா நின்ற காமாலை ,
  • மலஜலக்கட்டு,
  • வீக்கத்தை முதலாக கொண்ட பாண்டு ரோகம்,
  • அதிகரித்த கபம் முதலியன தீரும்.

சாலாமிசிரி.(மூலிகை எண்.287.).


  • சாலாமிசிரியினால் விந்து தடிப்பாகும்.
  • போகத்தில் அளவு கடந்த சக்தியை உண்டாக்கும்.

சாரப்பருப்பு.(மூலிகை எண்.286.).


  • சாரப்பருப்பால் சிறுநீரைப்பற்றிய கடுஞ் சுருக்கு.
  • மூத்திரக்கடுப்பு,
  • சலப் பிரமேகம்,நீங்கும்.
  • நீற்ற சுக்கிலம் இருக்கும்.
  • ரசகெந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும். 

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சாம்பிராணி.(மூலிகை எண்.285.).



  • சாம்பிராணி வேம்பைப் போல் கசப்புள்ளது.
  • வாதகபம்,
  • விழிநோய்,
  • நீங்காத சிரநோய்,
  • சல பீனிசம்,இவற்றை நீக்கும். 

சாமை அரிசி.(மூலிகை எண்.284.).


  • சாமை அரிசிக்குத் தாகசுரம்,
  • பிரமேகம்,
  • மகாவாதம், 
  • சோபாரோகம்,இவைகள் நீங்கும்.
  • தேக புஷ்டியுண்டாகும்.

சாத்துக்குடிப் பழம்.(மூலிகை எண்.283.).


  • சாத்துக்குடிப் பழம் எல்லா நோயாளிகளும்  உபயோகப்படுத்தலாம்.
  • இதயம் பலமாகும்.
  • சுத்த ரத்தம் உண்டாகும்,
  • நாவின் ருசி முதலியன உண்டாகும்.

சாதிப்பூ.(மூலிகை எண்.282.).


  • சாதிப்பூவுக்கு திரிதோஷம்,
  • தலைநோய்,
  • தேக உஷ்ணம்,
  • கண் படலம்,இவைகள் நீங்கும்.
  • நீங்காத ஒளியும்,
  • மணமும் உண்டாகும்.

சாதிப்பத்திரி (மூலிகை எண்.281.).





  • சாதிப்பத்திரிக்கு அழற்சுரம்,
  • கிரகணி,
  • சலமந்த பேதி,இவைகள் நீங்கும்.
  • பித்தமும்,
  • சுக்கில பெருக்கமுண்டாகும்.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

சாதிநார்த்தம் பழம்.(மூலிகை எண்.280.).



  • சாதிநார்த்தம்பழத்தால் தாகம்,
  • வாய்க்கசப்பு,நீங்கும்.
  • உப்பிட்ட காயால் வாதரோகங்கள் போகும்.

சாதிக்காய் அல்லது ஜாதிக்காய்.(மூலிகை எண்.279.)


  • சாதிக்காய்க்கு  விந்து நஷ்டம் ,
  • அதிசாரம் ,
  • வாதங்கள் ,
  • தலைநோய்,
  • இரைப்பு,
  • இருமல்,
  • உஷ்ணவாதகிரகணி,முதலியன விலகும்.
  • மயக்கமும்,பித்தமும் அதிகரிக்கும்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

சன்ன லவங்கப்பட்டை,(மூலிகை எண்.278.)



  • சன்ன லவங்கப்பட்டை,
  • இரத்தக்கிராணி,
  • வயிற்றுப் பிடுங்கல்,
  • மூன்றாம்வலைய மூலவிரணம்.இவற்றை நீக்கும்.
  • தேகத்திற்கு குளிர்ச்சியைத் தரும்.