- சீமைத்தக்காளிப்பழத்தினால் ரத்தத்திலும் குடலிலும் பற்றியுள்ள மாசுக்களை நீக்கி சுத்தப்படும்.
- ஐம்புலன் அறிவு விஷேசப்படும்.
- வயிற்றிலுள்ள விரணம்,
- மலச்சிக்கல்,
- பித்த உபரி முதலியன நீங்கும்.
- சீமைச்சோம்பால் வயிற்றுவலி.
- அக்கினி மந்தம்.
- வயிற்றுப்பிசம். முதலியவை நீங்கும்.
- சீமைச் செவ்வந்திப்பூ அல்லது சாமந்திப்பூவால் ஸ்திரிகளுக்கு தங்கிஉள்ள உதிர அழுக்கு வெளியாகும்.
- சீதசுரம்,
- அக்கினி மந்தம்,
- மூர்ச்சை முதலிய பிணிகள் நீங்கும்.
- சீந்திற் சர்க்கரையால் இடைவிடாத பெரும் தாகம்,
- எலும்புருக்கி ரோகம்,
- ரத்தவாந்தி ரோகம்,
- மதுமேகம்,
- தேககாங்கை இவைகள் போகும்.
- இது கசக்கும்,
- சீந்திற் கிழங்கு.or சீந்தில் கொடிக்கு சர்வ மேகம்,
- ரத்த பித்தரோகம்,
- சுரம்,
- மாந்தசுரம்,
- பேதி,
- பித்தகணம்,
- ஆம்பில பித்த ரோகம்,
- சர்ப்ப விஷம்,இவற்றைப் போக்கும்.
- பசிதீபனம் உண்டாகும்.
- சீத்தாப்பழத்தால் பித்த சிலேத்தும தொந்தம்,
- அக்கினி மந்தம்
- சித்த பிரம்மை உண்டாகும்.
- சீதள உடம்புக்கு ஆகாது.
- சிற்றுழா இலையால் இரத்தமூலம்.
- சீழ் மூலம்,
- வெட்டை,முதலிய ரோகங்கள் நீங்கும்.
- சிற்றீச்சம்பழத்திற்கு சீதபேதி,
- உழலை நோய்,
- விரணம்,இவைகள் போகும்.
- புத்திக்கு மலினம்(மழுங்கும்)
உண்டாகும்.
- சிற்றீச்சங்குருத்தால் ஸ்த்ரீகளுக்கு வயிற்றில் கட்டுப்பட்ட ரத்தவாத குன்மம் போகும்.
- இன்னும் நல்ல பசியும் தேஜஸும் உண்டாகும்.
- சிற்றாமுட்டி வேரினால் அஸ்திசுரம்.முதலிய பலவகை சுரங்களும்.
- பித்த நோயும்,நீங்கும்,
- கண்ணுக்கு ஒளியாம்.
- இது தைலங்களுக்கு உதவும்.
- சிற்றாமணக்கு நெய் பற்பல ஓளஷதங்களின் வெப்பங்களையும்,
- வாயுவினால் மூலத்தில் உண்டாகின்ற உஷ்ணங்களையும்,நீக்கும்.
- சிசுக்களை தாய் வளர்ப்பது போல் உடலை வளர்ப்பிக்கும்.
- சிற்றரத்தையால் சரத்தி.
- பித்தம்.
- கரப்பான்,
- வாயு.
- சிரரோகம்,
- சிலேத்துமம்,
- திரிதோஷம்,
- சீதளம்,
- பல சுரம்,
- காசம் இவைகள் போகும்.
- சிறு வள்ளிக்கிழங்கால் மந்தம் ,
- கரப்பான்,
- சிலேத்துமவிருத்தி,
- முளைமூலம் ஆகியன உண்டாகும்.
- உதராக்கினி கெடும்.
- சிறுபுள்ளடியால், எண்வகை மாந்தம்.
- சீதக்கட்டு,
- வாதாலசகம்,ஆகியன நீங்கும்.
- வற்றிய முலைப்பாலும் பெருகும்.
- சிறுபீளைச் செடிக்குத் தேகம் வெளிறல்,
- அசிர்க்கா ரோகம்,
- வாதமூத்திரக்கிரிச்சரம்,
- முத்தோஷம்,
- மூத்திரச் சிக்கல்,
- அஸ்மரி,
- அந்திர பித்தவாதம்,
- சோணிதவாதங்கள்,ஆகியன போகும்.
- அதிக சுவையுள்ள சிறுபசலை,புணர்ச்சியில் இச்சையும்,
- கபத்தை பெருக்கும்,
- தாகத்தையும்,
- சூட்டையும் தணிக்கும்,
- மலத்தை இளகச் செய்யும்.
- சிறுநாகப்பூவானது ஆண்குறியில் விழுகிற வெள்ளை,
- மார்க்கந்தப்பிய ஆவிருதவாதம்,
- காச ரோகம், இவற்றை விலக்கும்.
- சிறுதேட்கொடுக்கால் நமைச்சிரங்கு,
- விரணக் கரப்பான்,
- கீல் வீக்கம்,
- கொறுக்குமாந்தை,
- ஒழுக்குப் பிரமேகம்,
- பித்த வெள்ளை,
- அஸ்திர சிராவம், ஆகியன நீங்கும்.
- சிறுசின்னி இலைக்கு வண்டு கடி ,முதலிய கடி விஷங்கள் ,
- இன்னதென்று தெரியக்கூடாத செந்துக்களின் விஷங்கள்,
- இடுமருந்து,
- பிரமேகம்,
- கணச்சுரம்,
- அக்கினி மந்தம்,ஆகியன போகும்.
- சிறுகுறிஞ்சா வேரானது அற்பசெந்துக்களின் நஞ்சு,
- வாத சுரம்,
- வாத தோஷம்,
- காசம்,
- சுவாச காசம், இவற்றை போக்கும்.
- சிறுகுறிஞ்சாக்கொடி வாதநோய்,
- சீதபேதி,
- மாதாந்த உதிரச்சிக்கல்,
- அஸ்திதகசுரம்,
- காணாகடி விஷம்,
- வாத சுரம்,
- சந்நி பாதசுரம்,
- கப சுரம்,
- பித்த ஜிக்வாகண்டகம்,
- சந்ததசுரம்,
- தாக ரோகம்,முதலியவை நீக்கும்.
- பித்த குணமுள்ள சிறுகுறிஞ்சா இலை,அரை கடுவன்,
- சிரங்கு,
- காசம்,
- விஷ பாகம்,
- நாப்புண்,இவற்றை நீக்கும்.
- சிறுகீரையால் தூம்பிரநோய்,
- காசம் ,
- படலம்,
- பாதரச மருந்துகளின் வேகம்,
- விரணம்,
- மூத்திரகிரிச்சரம்,
- வீக்கம்,
- பித்த நோய்கள்,
- நாவி,மற்றும் பாஷாண விஷங்கள் போகும்.
- அழகு உண்டாகும்.