ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

சுவற்றுமுள்ளங்கிஇலை (மூலிகை எண்.336.).


  • சுவற்றுமுள்ளங்கிஇலையானது நீர்க்கட்டையும்,
  • மார்புநோயையும்,
  • வாத சோபையையும் போக்கும்.

சுரையிலை.(சுரைக்காயின் இலை) (மூலிகை எண்.335.).


  • சுரையிலையின் கொழுந்து சோபை ரோகம்,
  • தேகபாரிப்பு,
  • நீங்கா முத்தோஷங்கள் போகும்,
  • வீக்கத்தையும்,
  • மூத்திரக் கட்டையும் நீக்கும்,
  • மலம் இளகி இறங்கும்.

சுரக்காய்.(மூலிகை எண்.334.).


  • தீயகுணமுள்ள சுரக்காயினால் வாதபித்த அரோசகம்,
  • பீலிகரோகம்,
  • ஆமம்,
  • மார்பு நோய் இவைகளை உண்டாக்கும்.
  • உடம்பின் உட்சூடு நீங்கும்..

சுண்டைக்காய் வற்றல்.(மூலிகை எண்.333.).


  • சுண்டைக்காய் வற்றலால் பித்த அரோசகம்,
  • மலக்கிருமி,
  • கிரகணி ,
  • ஆசனத்துவாரச் சீதகட்டு,இவைகள் போகும்,
  • பசியுண்டாகும். 

சுண்டைக்காய்.(மூலிகை எண்.332.).


  • கசப்புசுவையுடைய மலைச்சுண்டைக்காயால் மார்புசளி,
  • கிருமிரோகம்,
  • வாதாதிக்கம் ,ஆகியன போகும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

சுக்கு.(மூலிகை எண்.331.).


  • சுக்கினால் விலாக்குத்தல்,
  • அஜிரணம்,
  • மார்பு எரித்தல்,
  • தோஷகுணம்,
  • புளியேப்பம்,
  • வெப்பம்,
  • ஆசனநோய்,
  • சுவாசம்,
  • ஜலபீனிசம்,
  • நீரேற்றம்,
  • பேதி,
  • வாத குன்மம்,
  • ஜலதோஷம்,
  • சீதகிரணி,
  • வாதநோய்,
  • வயிற்று உப்பிசம்,
  • செவிக்குத்தல்,
  • முக நோய்,
  • சிரநோய்,
  • குலை வலி,
  • கபஸ்ராவம்,
  • சீதபேதி,
  • பலவித அரோசிகம்,
  • அலிமுகப்பாண்டு,
  • வயிற்றுக்குத்தல் ,
  • கபசீதசுரம்,
  • பலவகை சுரங்கள் தீரும்,
  • சகல நோய்களையும் நீக்கும்.

சுக்கான்கீரை விதை.(மூலிகை எண்.330.).


  • சுக்கான்கீரை விதையால் தீபனமும்,
  • அரோசகம்,
  • சீதபேதியும்,
  • தேள் விஷமும் நீங்கும்.

சுக்காங் கீரை.(மூலிகை எண்.329.).


  • சுக்காங் கீரையால் குன்மம்,
  • பித்த ஊறல்,
  • தேக வெப்பம்,
  • கண்டமாலை முதலியன நீங்கும்.

சுக்கான்னிகாய்.(மூலிகை எண்.328.).


  • சுக்கான்னிகாயினால் வாததோஷம் நீங்கும்.
  • பித்தம் என்பர்.
  • இதன் வற்றல்,வாதகோபத்தையும்,அரோசகத்தையும் நீக்கும்.   

சீனிச்சருக்கரை.(மூலிகை எண்.327.).


  • சீனிச்சருக்கரைக்கு வாதசுரம் ,
  • கூன் வாதம்,
  • வமனம்,
  • கிருமி ரோகம்,
  • நீங்காத விக்கல்,ஆகியன போகும்.

சீரகம்.(மூலிகை எண்.326.).



  • சீரகத்தினால் வாந்தி ,
  • அரோஷிகம்,
  • வயிற்று வலி .
  • முகரோகம்,
  • பீலிகநோய்,
  • சுவாசம்,
  • காசம்,
  • அஸ்மரி,
  • மச்சம் சுக்கினம்,
  • சீதரத்த கிரகணி,
  • வாதாதிக்கம்,
  • பீநிசம்,
  • பித்தம் விலகும்.
  • இது சரீரத்திற்கு  உறுதியும்,
  • கண்களுக்கு குளிர்ச்சியையும் உண்டாக்கும்.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

சீமையகத்தி.(மூலிகை எண்.325.).




  • பேயகத்தி என்னும் சீமையகத்தியால் ரசத்தாதுக்கிருமிகளும்,
  • உஷ்ண சொறியும்,
  • தினவும் நீங்கும்.
  • ரத்தநரம்பு பிரகாசிக்கும்

சீமை மாதுளம் விரை.(மூலிகை எண்.324.).


  • சீமை மாதுளம் பழத்தின் வித்தால் தேக உஷ்ணம்,
  • உஷ்ண இருமல்,
  • சீதபேதி,
  • வயிற்றிலுண்டான விரணம்,
  • குலைஎரிவு,
  • தொண்டைக்கம்மல்,
  • நுரையீரல் வறட்சி,முதலியன நீங்கும்.