செவ்வாய், 14 ஜனவரி, 2014

75.உதிரமரம்.(odina wodier)



  • உதிர மர வேரினால் விரணம், புரை,கிராணி,ரத்த பேதி,சீத கடுப்பு ,

தாகம்,மூர்ச்சை,பித்த சீதளம் முதலியன விலகும். 




74.உசிலமரம் (mimosa ammara)







  • இலைப் பொடியை எண்ணெய்க் குளியலின் பொது சிகைக்காய்க்குப் பதிலாகப் பயன்படுத்த உடல் குளிர்ச்சி பெறும்.

  •  உசிலைப் பட்டை, வெங்காயம், கரியாக்கிய வசம்பு வகைக்கு 10 கிராம் எடுத்து இடித்து 360 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு 50 மி.லி. யாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 to 30 மில்லி லிட்டர் ஒரு நாளைக்கு மூன்று வேலையாகக் கொடுக்க குழந்தைகளுக்கு வரும் அள்ளு மாந்தம், சுழிக் கணை ஆகியவை குணமாகும்.

  • இதன் பிசின் பித்த மேகத்திற்கு உரித்தான லேகியங்களில் கூட்டலாம்.

  • குளிர்ச்சியான குடித்தைலம் (உள்ளுக்கு சாப்பிடும் தைலம் )காய்ச்சும் பொழுது இதன் கட்டையைக் கொண்டு எரித்தல் மிகவும் சிறந்தது.


வெள்ளி, 10 ஜனவரி, 2014

73.உகா மரம்





  • உகா விதை திரிதோஷத்தால் வந்த நோய்களைச் சந்தமாக்கும்.

  • இதன் பட்டையைக் கொண்டு தந்த சுத்தி செய்ய பல்லீறுகும்,பற்களுக்கு பலத்தை கொடுக்கும்.

  • இதன் வேர்ப்பட்டை கிழாயம் சூதக வாயுவிற்கும்,சாதாரண சுரங்களுக்கும் கொடுக்கலாம்.

  • இலைச்சாற்றை உள்ளுக்கு கொடுக்க சொறி ,சிரங்குகள் ,குணமாகும்.
 

72.ஈச்சுர மூலி.

ஈஸ்வர  மூலி,உரிக்கொடி,தலை சுருளி,பெரு மருந்து,



  • இம் மூலிகையால் விஷ சோபை,வீககம்,சந்நி,பல விஷங்களும்,நீங்கும்.உரத்த வார்த்தை உண்டாக்கும்.


  • உடல் வெளுப்பு,புண்டரீக குஷ்டம்,இருதய நோய்,ஆகந்துக சோபை இவற்றை போக்கும்.



  • இவ்வேர்  பித்த சோபம்,சுவாசம்,இருமல்,சுர ரோகம்,சரீர குத்தல் ,வாத தோஷம்,அற்ப விஷகடிகள்,ஆகியவை போவதுமின்றி கோ (மாட்டு நோய்கள் )சிகிச்சைக்கு உதவும்.



  • வாதாதிமுத்தோஷம்,நமைக்கிரந்தி,தினவுத்தேமல்,மேகப்புடை நீங்கும்.



  • இதன் வேர் சீதள ரோகத்தையும்,பெண்களுக்கு ஏற்படும் உதிர சிக்கலையும் நீக்கும்.   





புதன், 8 ஜனவரி, 2014

71.ஈச்சமரம் (பேரீச்ச மரம் ).







ஈச்சங் கள்ளு:



  •  உள் அழலை,பிரமேகம்,மூத்திர கிரிச்சரம்,அரோசகம்,புத்தி ஆகியன தீரும்.

  • தேகத்தில் குளிர்ச்சி,பித்த கோபம்,வீக்கம்,திமிர் வாதம் ஆகியன உண்டாகும்.



ஈச்சங்கற்கண்டு: 

  • மருந்துகளையும்,புத்தியையும் கெடுக்கும்.



  • காச சுவாச சயங்களையும் காணற்கரிய பல பிணிகளையும் தரும். 

ஈச்சம் வெல்லம்:
  • கரும்பு வெல்லத்தை காட்டிலும் ருசிகரமானது.இதை பழக்கமாக உபயோகிக்கக் கூடாது.இதனால் பாரிச வாதம்,திமிர் வாதம் முதலியவை சம்பவிக்கும்.
  • புத்தி மந்தம்,சிலேஷ்ம வாதம்,உள்ளீர் சீதளம்,பித்த கோபம்.திமிர் வாயு இவைகள் உண்டாக்கும்.