செவ்வாய், 29 ஜூலை, 2014

கருவேலமரம்(மூலிகை எண்:145.)





 கருவேலமர வேர் :

கருவேலமர வேரினால் இரத்தகடுப்பு,அக்கினி மந்தம்,மஹா வாதம்,கரப்பான்,வாதாதிசாரம்.ஆகியன போகும்.




கருவேலங் கொழுந்து :

கருவேலங் கொழுந்தைத் தயிரில் அரைத்து குடிக்கில் பாஷாண வேகம் நீங்கும்.முலைப் பாலில் அரைத்து அடை தட்டிக் காய்ந்த சட்டியிலிட்டு வெதுப்பி அற்ப சூடாக ஒற்றடமிடில் கண் சிவப்பு மாறும். 





கருவேலம் பட்டை :

கருவேலன் பட்டைக்கு ரசவேகத்தின் வாய் வேக்காடு முதலிய விரணங்களும்,சுரமும்,பித்த நோயும்,ஒழியும்.பல்லிறுகும்.






கருவேலன்பிசின் :

  கருவேலன்பிசினானது நீர்த்து போன சுக்கிலத்தை இறுகச் செய்யுவதுமின்றி எரிச்சலோடு விழுகின்ற சீழ் பிரமேகத்தையும்,நீக்கும்.அழகையும் பலத்தையும் உண்டாக்கும்.

கருவேப்பிலை.(மூலிகை எண்:144.)






கருவேப்பிலையால் அரோசிகம், சீதபேதியால் வரும் வயிறளைவு,புராண சுரம்,பைத்திய தோஷம்.ஆகியன போகும்.

கருஊமத்தை.(மூலிகை எண்:143.)



















கசப்பையுடைய கருஊமத்தையால் சுக்கிலத்தையும்,பாதரசத்தை கட்டும்.
உடலுக்கு அழகை உண்டாக்கும்.
பெருவியாதி,வியர்வைத்தினவு,பயித்திய சுரம் முதலிய வற்றை நீக்கும். 


 http://youtu.be/ijj83NQreAE

கருவாகை.(மூலிகை எண்:142.)


கருவாகை  மரத்திற்கு புண்,வெப்பம் ,வாத கோபம்,சன்ன கிருமி,சய ரோகம்,நீங்கும்.

கரும்பு (மூலிகை எண்:141.)












கரும்பை துண்டு துண்டாக வெட்டி கரி நெருப்பனலில் வெதுப்பி,சிறிது வெந்தபின் எடுத்து அம்மியில் வைத்து நைய விடித்துப் பிழிந்தெடுத்த சாற்றை வடிகட்டிக் கொடுக்க வாய்குமட்டல்,விக்கல் முதலிய பித்த ரோகங்கள் தீரும். இது செங்கரும்பு,ரசதாளிக் கரும்பு,புல்லங்கண்டங் கரும்பு,மூன்று வகைப்படும்.


1.செங்கரும்பின் ரசம் பித்த தோஷத்தை நீக்கும்.


2.ரசதாளிக் கரும்பின் ரசம் தாக வெப்பம் போகும்.

3.புல்லங்கண்டங் கரும் பின் ரசம் வாத தோஷத்தை நீக்கும்.

திங்கள், 28 ஜூலை, 2014

கரும்பயறு (மூலிகை எண்:140.)




கரும்பயறினால்  சிலேத்தும வாதம்,பங்கு வாத ரோகம்,முதலியவை நீங்கும்.

கருப்பூரவள்ளி.(மூலிகை எண்:139.)


கருப்பூரவள்ளியினால் காசம்,என்கிற பொடி இருமல்,அம்மை கொப்பளம்,சிலேத்தும தோஷம்,புறநீர்க்கோவை,ரூட்சை,மார்புச் சளி,வாத கடுப்பு ,ஆகியன போகும். 

கருப்பூரப்புல்(மூலிகை எண்:138.)





 கருப்பூரப்புல்,தடைபட்டுள்ள மாத விலக்கம்,சூதக வாயு,வாந்தி,பேதி,குளிர் சுரம்,ஊறலுடைய படைகளும்,இன்னும் வாத பித்தம்,தொந்த சுரம்,கோழை,அருசி,ஆகியவற்றைப் போக்கும்.பசி தீபனத்தை உண்டாக்கும்.

கருநொச்சி இலை (மூலிகை எண்:137.)






கருநொச்சி இலையால் வாத வலி,நாசி காரோகம்,கப ரோகம்,மண்டைக் குடைச்சல்,ஆகியன நீங்கும்.இம்மூலிகையால் ரசவாதம் கிட்டும்.  

கருநெல்லி மரம் (மூலிகை எண்:136.)





கருநெல்லி மரதினால் பதினைந்து வகை சந்நிபதங்களும்,மயக்கமும்,மனோவியாதியும் நீங்கும்,காய சித்தியுண்டாக்கும்.

கருநெய்தற் பூ.(மூலிகை எண்:135.)





கருநெய்தற் பூவால்,பிரசவித்த மாதர்களை தேற்றும்.பெரும் பட்டை போக்கும்.
கபநோயையும் ,விஷபாகத்தையும் போக்கும்

கருடன் கிழங்கு. (கொல்லங்கோவை ).மூலிகை எண்:134.)






கருடன் கிழங்குக்கு அரையாப்புகட்டி,வெள்ளை,கொருக்கு மாந்தை,அற்புத விரணம்,நீங்கும்.விஷத்தை உடைய சர்பங்களும் இதனை கண்டால் நடுங்கும்.
மகா விஷம்,தேக வெளுப்பு,சுரம்,வாதசூலை,சிரங்கு,பெருவியாதி,நமைச்சல்,வக்கிர நேத்திரம்,குடல் வலி,கண்டமாலை,திரிதோஷம் நீங்கும்.

கருஞ்செம்பைப்பூ.(மூலிகை எண்:133.)







கருஞ்செம்பைப்பூவால் கபால சூலை,சிலேத்தும கோபம்,நீரேற்றம்,வாததோஷம், பீநிசம் நீங்கும். 

கருஞ்செம்பை இலையால்,
வித்திரிதிக்கட்டி,கரப்பான்,பிரமேகம்,கபரோகங்கள் போகும். 

புதன், 23 ஜூலை, 2014

கண்டு பரங்கி (சிறு தேக்கு).(மூலிகை எண்:132.)







சிறு தேக்கினால் திரி தோஷவிகுணம்,சுவாச காசம்,சுரம்,பைத்தியம்,சுர சாதம்,நாசி நோய்கள்,ஜல தோஷம்,முன்நீர்க் கோர்வை,பின் நீர்க் கோர்வை,புச்சா வர்த்த வாதம்,குளிர் சுரம்,உடல்வலி,உட் காந்தல்,மனச் சங்கடம் இவைகள் போகும். 

கருஞ்சீரகம் (மூலிகை எண்:131.)




மண்டை கரப்பான்,விரணம்,சிராய்ப் பீனிசம்,உட்சூடு,சிர நோவு ,கண் நோய் இவற்றை நீக்கும்.

126.கம்பு அரிசி.



கம்பு அரிசியால் நெருங்கிய நமைச்சலையும்,சிரங்குகளையும்,வீரியத்தையும் செய்யும்.சரீர வெப்பத்தையும் நீக்கும்.குளிர்ச்சி உண்டாகும்.  

131.கருங்காலி மரம்






கருங்காலி மரப் பிசினால்:
கருங் கரப்பான்,மேக மூத்திரம்,பெரும்பாடு,ஆகியவை நீங்கும்.

கருங்காலி மரத்தின் வேர் :

கருங்காலி மரத்தின் வேருக்கு ,மலாசய கிருமி,பாகுபடும் மது மூத்திரம்,குஷ்டம்,இரத்த பேதி,போகும்.  

கருங்காலி மரத்தின் பட்டை :

கருங்காலி மரத்தின் பட்டையானது பிர மேக மூத்திரம்,தந்த மூல ரோகம்,இருமல்,சுவாசம் ஆகியவற்றை நீக்கும். 

130.கருங் காக்கட்டான்.




கருங் காக்கட்டான் வேருக்கு மாந்தம்,மலக்கிருமி,வாதாதிக்கம்,சிலேத்தும ரோகம்,மலக்கட்டு நீங்கும்.

129.கரிய போளம் (மூசாம்பரம்)


கரிய போளத்தினால் இருதய வாதம்,சோபை,குன்மம்,முடம் ,மேகப் பிடகம், மனவாதரோகம், கைகால் குத்தல்.இவைகள் போகும்.

வியாழன், 17 ஜூலை, 2014

128.கரசானாங்கண்ணி






கரசானாங்கண்ணி என்னும் கையான்தகரையால் தொண்டை கம்மல்,காமாலை,குட்ட வீக்கம்,பாண்டு ,தந்த ரோகம்,இவைகள் போகும்.
தேகத்திற்கு பொற்சாயலையும்,யாளிக்கு சமமான பலத்தையும் உண்டாகும்

127.கம்மாறு வெற்றிலை




கம்மாறு வெற்றிலையால் சலதோஷம் ,சிரோபாரம்,ஜன்னி,மந்தாக்கினி,தொண்டைக்  கம்மல்,வயிற்று வலி,உப்பிசம் தீரும்.