கருவேலமர வேர் :
கருவேலமர வேரினால் இரத்தகடுப்பு,அக்கினி மந்தம்,மஹா வாதம்,கரப்பான்,வாதாதிசாரம்.ஆகியன போகும்.
கருவேலங் கொழுந்து :
கருவேலங் கொழுந்தைத் தயிரில் அரைத்து குடிக்கில் பாஷாண வேகம் நீங்கும்.முலைப் பாலில் அரைத்து அடை தட்டிக் காய்ந்த சட்டியிலிட்டு வெதுப்பி அற்ப சூடாக ஒற்றடமிடில் கண் சிவப்பு மாறும்.
கருவேலம் பட்டை :
கருவேலன் பட்டைக்கு ரசவேகத்தின் வாய் வேக்காடு முதலிய விரணங்களும்,சுரமும்,பித்த நோயும்,ஒழியும்.பல்லிறுகும்.
கருவேலன்பிசின் :
கருவேலன்பிசினானது நீர்த்து போன சுக்கிலத்தை இறுகச் செய்யுவதுமின்றி எரிச்சலோடு விழுகின்ற சீழ் பிரமேகத்தையும்,நீக்கும்.அழகையும் பலத்தையும் உண்டாக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக