முள்முருக்கமரம் என்கிற கலியாண முருக்கமரத்தினால் வாந்தி,வயிற்று வலி,பித்த சுரம்,பித்தஜிக்வாகண்டகம்அட்ட (அட்டசரம் ) ஆகியவற்றை நீக்கும்.மிக்க வலிமையைக் கொடுக்கும்.
கலியாணப் பூசணிக்காய்க்கு பித்த ரோகம். உட்காய்ச்சல், சாரமேகமூத்திரகிரிச்சரம், இடுமருந்து, பித்த சுரம், அஸ்திதாதுகதசுரம், பேய்ச்சொறி, பிரமேகம், ஆகியன போகும்.
வாததாதிக்கம் உண்டாகும்.
கலப்பைக் கிழங்கால் பாம்பின் விஷமிறங்கும்.
இன்னும் தலைவலி,கழுத்து வலி,குட்டம்,வயிற்று வலி,சன்னி,கரப்பான்,முதலியவை நீங்கும்.
பேரீச்சம் பழத்தால் நீரைச் சுரப்பிக்கிற பித்த ரோகம்.மத ரோகம்,மூர்சை ரோகம்,சுரம்,கபம்,நீர்க் கோவை,தாகம்,ரத்த பித்தம்,மேக மூத்திரம்,வாயுலைப்பு,அருசி,மல பந்தம்,ஆகியன நீங்கும்.
- கர்சூர்க்காய் (பேரீச்சங்காய்) உமிழ்நீரைப் பெருக்கையும்,மது நீரையும் போக்கும்.
- பசியையும் புணர்ச்சியில் நிர்வாகத்தையும் உண்டாக்கும்.
தினம் 2 வேளை மென்று தின்றபின் பசுவின் பாலை அருந்தி வர நுரையீரலில் சேர்ந்துள்ள கபத்தையறுக்கும்.பசி தீபனத்தையும் தாது விருத்தியும் உண்டாக்கும்.