வியாழன், 11 செப்டம்பர், 2014

கடலைக்காடி(மூலிகை எண்:170.)






கடலைப் புளிப்பு என்கிற காடி பசி தீபனத்தை அதிகப்படுத்தும்,தவிர தேக அழலையையும் அதிகதாகம்,வாந்தி விக்கல் முதலியவற்றை பரிகரிக்கும்.

காடி நீர் (மூலிகை எண்:169.)



பழமையாகிய காடி சலத்தினால் பித்த மயக்கம்,சோபா ரோகம்,முதலிய சிற்சில ரோகங்களும்,அசீரணமும்,வாதாதி சாரமும் போகும்.உயர்ந்த மருந்துகளின் வேகத்தையும் தணித்துவிடும். 

காஞ்சொறி.(மூலிகை எண்:168.)




  • காஞ்சொறியினால் சுர வெப்பம்,மேகம்,சொறிசிரங்கு,கபம்,வாதம்,முதலியன நீங்கும்.
  • இந்த இனத்தில் பச்சை நிறத்தில் சிறுகாஞ்சொறி,பெருங்காஞ்சொறி என இரு விதங்கள் உண்டு.
  • சிவப்பு ,கறுப்பு என இரண்டு விதங்கள் உண்டு.

  • சிறுகாஞ்சொறி வேரானது சுவாச காசம்,திரிதோஷ சுரங்கள்,கரப்பான்,புண்,தாகம்.முதலிய வற்றை நீக்கும்.

  • பெருங் காஞ்சொறி வேரானது இருமல்,இறைப்பு,சீதசுரம்,ஆகியன போகும்.

  • செந்தொட்டிவேரினால் கீழ் வாதம்,விதாகம்,ரூட்சை,கடுவன்,இறைப்பு,கோழை ஆகியன போகும்.

  • கருஞ்காஞ்சொறி வேருக்கு பொடி இருமல்,ஜலஸ்ராவம்,சிலேத்துமரூட் சை,அன்கு ரோகம்.ஆகியன நீங்கும்.



காசினிக்கீரை (மூலிகை எண்:167.)



காசினிக்கீரை அஸ்தி தாதுகதசுரத்தையும் உதிரத்தழுக்கையும் வீக்கத்தையும் நீக்கும்.ரத்த விருத்தி செய்யும்.

காசாமரம்.(மூலிகை எண்:166.)




காசாமரப் பட்டையினால் உஷ்ணத்தினால் உண்டான நீர்சுருக்கு,வெள்ளை,பிரமேகம்,பேதி,சீதபேதி குணமாகும்.

வெள்ளி, 5 செப்டம்பர், 2014

காக்கை கொல்லி விதை.(மூலிகை எண்:165.)

  • காக்கை கொல்லி வித்தால் பேன்கள் நாசமாகும்.ஆனால் புண்களுள்ள இடங்களுக்கு பூசக்  கூடாது.அப்படி செய்தல் புண் வழியாக விஷமேறும். 

காக்கட்டான்,மாமூலி என்னும் வெள்ளை காக்கட்டான்.(மூலிகை எண்:164.)






  • காக்கட்டானை உட்கொள்ளப் பெருவயறு புரைக்குழல்,மலசலக் கட்டு,மாந்தம்,மலக்கிருமி சேர்க்கை ஆகியன நீங்கும்.

  • மாமூலி என்னும் வெள்ளை காக்கட்டான் வேருக்கு வெள்ளை,பிரமேகம்,தலை நோய்,சுரம்,கண்நோய் போகும்.

கஸ்துரி மஞ்சள்.(மூலிகை எண்:163.)




  • கஸ்துரி மஞ்சளுக்குப் பெருவிரணம்,கரப்பான்,கிருமிரோகம்,அக்னிமந்தம் போகும்.
  • வீரியமும் அறிவும் விருத்தியாகும்.


கற்பூர மணி அல்லது ககருபா.(கஹரூபா).(மூலிகை எண்:162.)







  • கற்பூர மணியால் மார்பு துடிப்பு,சயம்,வாந்தி,காமாலை,மேக சுரம்,வீக்கம் முதலியன நீங்கும்.
  • இன்னும் மூளைக்கு நல்ல பலமுண்டாகும். 


கற்பாசி (மூலிகை எண்:161.)



  • மழையால் பிறந்த கற்பாசியினால் நீடித்த மேகத்தையும்,அதிசாரத்தையும்,நீக்கும்.
  • வாசனை திரவியங்களில் ஒன்றாகும்.

கற்கண்டு (மூலிகை எண்:160.)


கற்கண்டினால் பல்லரணை,காசம் பற்பலசர்த்தி,அதிகரித்த சிலத்துமதோஷம்,வெப்பம்,ஆகியவை தீரும்.

கறுப்புப் பூலா (மூலிகை எண்:159.)








  • கறுப்புப் பூலாங் குச்சியினால் பல்துலக்க வீரிய விருத்தியுண்டாகும்.
  • இலை மூல ரத்தப் பெருக்கத்தைத் தடுக்கும்.
  • பழமானது உதிருகின்ற ரோமங்களை உதிர வொட்டாமல் செய்யும்.

கறிமுள்ளி (மூலிகை எண்:158.)




  • கறிமுள்ளியால் நெஞ்சிற் கோழைகட்டு காசம்,தமக சுவாசம்,சிலேஷ்ம சுரம்.ஆகியன நீக்கும்.
  • கறிக்கு உதவாத முள்ளிக் காயானது வாத பித்த கப தோஷங்களையும்,சுரம்,சுவாச ரோகம்  ஆகியவற்றை நீக்கும்.

கள்ளி முளையான் அல்லது சீமை எருக்கு.(மூலிகை எண்:157.)









புளிப்புச்சுவை உடைய கள்ளி முளையான் தீபனத்தை யுண்டாகும்.வாத விகுணத்தையும் பித்த தோஷத்தையும் மாற்றும்.
 

கள்ளிமரம் (மூலிகை எண்:156.)






கள்ளிமரத்தின் கொம்புகளால் வாதத்தில் உண்டான குடைச்சல்,சுவாச காசம்,சூலைப் பிடிப்பு,குடல் வாதம்,அண்ட வாதம்,முதலியன நீங்கும். 

கள்ளி மரப்பட்டை :



கள்ளி மரப்பட்டையினால் நரம்புச் சிலந்தியும்,கப வாத தொந்த சந்நிபாதமும் வாதப்பிரகோபமும் நீங்கும்.  

களிப்பாக்கு(மூலிகை எண்:155.)







களிபாக்கைத் தின்றால் நெஞ்சிற் கோழையும் அதிசாரமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும் பித்த அருசி ஒழியும்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

களாக்காய்.(மூலிகை எண்:154.)





களாக்காய் :
புளிப்பு உள்ள களாக்காய்க்குக் காதடைப்பு,தாகம்,பித்த தோஷம்,வமனம்,அருசி,ரத்த பித்தம், போகும்.இன்னும் இதனால் தீவிரமான பசி உண்டாகும்.

களாப்பழம்:
நிலக்களாப்பழத்தை மிகு பசியில் தின்றால் சீதரத்தமும்,அதிமந்தத்தில் தின்றால் நல்ல பசியையும் உண்டாக்கும்.தொண்டை வலியும்,தலைக்கனமும்  நீங்கும்.


களாப்பூ :

நேத்திரத்தில் உண்டான கரும்படலம்,வெண்படலம்,ரத்தப் படலம்.சதை படலம் முதலிய ரோகங்களும் விலக்கும்.