புதன், 9 செப்டம்பர், 2015

குழிப் பறங்கிக்காய் (மூலிகை எண்:214.).




குழிப்பறங்கிக்காய்க்கு
  • வாதக்கடுப்பு,
  • கப விருத்தி,
  • வாதசூலை,
  • அக்கினி மந்தம் இவைகள் உண்டாகும்.
  • இது குளிர்ச்சியானது.   

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

குரோசானி ஓமம் (மூலிகை எண்:213).



குரோசானி  ஓமத்தால் 
  • அதிமூத்திரம்,
  • வாதாதிக்கம்,
  • விந்து நட்டம்,
  • விரணம்,
  • வாதாதிசாரம்,
  • உடற்கடுப்பு,
  • கரப்பான்,
  • நீங்கா கப நிறைவு,ஆகியன நீங்கும். 
  • அதிக மயக்கத்தை உண்டாக்கும்.

குருவிச்சிப்பூண்டு. (மூலிகை எண்:212).

குருவிச்சிப்பூண்டினால் 

  •  பெரும் வியாதி 
  • மலடு 
  • சிலேத்தும மேகம்,
  • கரப்பான்,
  • விஷ மாந்தம்,
  • சீதரத்தக்கிரகணி முதலியவை தீரும்.

குமரி . (மூலிகை எண்:211).

நாறும் கற்றாழைக்கு 

  • வாத மேகம்.
  • கபகோபம்,
  • கிருமிக்குத்தல்,
  • பெரும் வியாதி,
  • மூலம்,
  • உன்மாதம்,
  • பகந்தரம்,
  • வயிற்றுநோய்,
  • தினவுள்ள பித்த கிரிச்சரம் ஆகியன போகும். 

குப்பை மேனி (மூலிகை எண்:210).

குப்பை மேனி இலையால் 

  • தந்த மூலரோகம்,
  • தீச்சுட்ட புண்,
  • தவர சங்கம விஷங்கள்,
  • வயிற்று வலி,
  • வாத ரோகம்,
  • ரத்த மூலம்,
  • நமைச்சல்,
  • குத்தல்,
  • இரைப்பு ,
  • பீனிசம்,
  • கபாதிக்கம்,ஆகியவை நீங்கும். 

குந்திரிக்கம். (மூலிகை எண்:209).

குந்திரிக்கதினால் 

  • இருமல் ,
  • இரைப்பு ,
  • கிருஷ்ண குட்டம்,
  • மேக கட்டி,
  • தினவுடன் படருகின்ற படை,
  • சிரங்கு,
  • நீடித்த ரணங்கள் யாவும் நீங்கும்.

குத்துக்காற்சம்மட்டி வேர் (மூலிகை எண்:208)

பச்சையாய் உள்ள  குத்துக்காற்சம்மட்டி வேரினால் 

  • மகா வாதம் 24 ம் 
  • மேக கட்டிகளும்,
  • திமிர் வாதமும், 
  • மூர்ச்சையின் அயர்வும் போகும்.

குதிரைவாலி(மூலிகை எண்:207.)


குதிரைவாலியால்,

  • மூலக்கடுப்பு ,
  • அதிசாரம் ,
  • சுர வேகத்தால் வந்த நாவறட்சி,
  • சகனா விருத வாதம்,
  • வாதநோய்,
  • பிரமேகம்,
  • இருமல்,
  • கட்டி,
  • படுவன்,
  • நேத்திர மங்கல்,
  • கோழை,
  • அக்னிமந்தம்,
  • வாத கப தொந்தம்,
  • தினவு,ஆகியவை போம்.   

குதிரைக்குளம்படி இலை.(மூலிகை எண்:206.)

குதிரைக்குளம்படி இலையால் 

  • அசுவ வாதம்,
  • சன்னி,
  • தினவு,முதலியன நீங்கும்.  

குசும்பாச் செடி (மூலிகை எண்:205.)



குசும்பாச் செடியினால் 

  • சிறு நீர்க்கட்டு,
  • சொறி ,
  • வீக்கம் ,
  • சூலை ,
  • பிடிப்பு இவைகள் போகும். 

குங்குமப்பூ (மூலிகை எண்:204.)

குங்குமப்பூவினால்  
  • தாது நட்டம்,
  • நாவறட்சி,
  • குடல் வாதம்,
  • மேகநீர்,
  • கீழ் பிடிப்பு,
  • கபாதிக்கம்,
  • அதிக சுரம், 
  • பத்தியம்,
  • விகுண வாதம், 
  • மண்டைவலி,
  • கரு விழியில் படருகின்ற பூ,
  • கண்நோய்,
  • வாந்தி,
  • சலபீனிசம்,
  • காது மந்தம்,
  • நீர் ஏற்றம்,
  • வாயினிப்பு,
  • பிரசவ மலினம்,ஆகியவை நீங்கும்.   

வெள்ளைக் குங்கிலியம் .(மூலிகை எண்:203).


வெள்ளைக் குங்கிலியத்தால் 

  • மேகத்தால் பிறந்த நாளப்புண்,
  • உந்திக் கமல விரணம்,
  • சீழ் மேகம்,
  • உள்மூலவிரணம் இவைகள் நீங்கும்.

(இந்த இனத்தில் தூய வெண்மை நிறமுடையது (வெண் குங்கிலியம்) உள் மருந்துகளுக்கும்,அழுக்கு படிந்த பழுப்பு நிறமுடையது (கருங் குங்கிலியம்)  வெளி மருந்துகளுக்கு உபயோகப்படுத்தவும்.) 

புதன், 1 ஜூலை, 2015

குங்கிலியம் (மூலிகை எண்:202.)

நீரை இழுக்கின்ற  குங்கிலியத்தால் 
  • பெரும்பாடு 
  • தந்து மேகம் 
  • விரணங்கள் 
  • எலும்புருக்கி 
  • சீழ் விரணம் இவைகள் நீங்கும் . 

குக்கில்.(மூலிகை எண்:201.)

செடி  

கருப்பு 
சிவப்பு 

  • கருமை செம்மை என்னும் இருவகை குக்கில்களால்,

  1. கர்ண பூதி,
  2. திரிதோஷஓஷ்டம்,
  3. கிராணபாகம்,
  4. பிடகம்,
  5. காணாவிஷம்,
  6. மேகரணம்,
  7. வாத வித்திரிதி,
  8. கீல்பிடிப்பு,
  9. நகங்களை பற்றிய விரணம் ஆகியன போகும்.

சனி, 28 மார்ச், 2015

கீழ்வாய்நெல்லி.(மூலிகை எண்:200)



  • கீழ்வாய்நெல்லிக்கு ஆமக்கட்டு,
  • அக்கினி  கீடவிஷம்.
  • நேத்திர ரோகம்,
  • பூத முதலிய சங்கைதோஷம்,, 
  • ரத்தாதிசாரம் .
  • மதுப்பிரமேகமூத்திரம்.
  • காமாலை .
  • சப்த தாதுகதசுரம்   
  • சரும தாது வெப்பம்.
  • நாட்பட்ட மேகப் புண்.

வெள்ளி, 27 மார்ச், 2015

கீரைத்தண்டு.(மூலிகை எண்:199.)



  • கீரைத்தண்டால் பித்தக் கிரிச்சரம்.
  • பிரமேகச் சூடு 
  • வயிற்று கடுப்பு 
  • இரத்த பேதி  முதலிய நோய்கள் போகும்.
வெண்கீரைத்தண்டு, செங்கீரைத்தண்டு முதலிய இரு வகைகள் உள்ளன.  

வெண்கீரைத்தண்டு, :
  • நோயற்றற நல்ல வெண்கீரைத்தண்டினால்,வெப்பமும்,
  • வெளி மூல ரோகமும்.
  • பித்த எரிச்சலும் நீங்கும்.
செங்கீரைத்தண்டு:

  • பெருங்கறியாகிய செங்கீரைத் தண்டு தீராத பித்த நோய்யையும்,
  • பெரும்பாட்டையும்.
  • தேக வெப்பத்தையும் நீக்கும்.

கீரிப் பூண்டு.(மூலிகை எண்:198.)



  • கீரிப் பூண்டால் பாம்பின் விஷம் நீங்கும்.
  • பேதியாகும்.
  • பலம் கொடுக்கும்.
  • உறக்கத்தை உண்டாக்கும்.

கிளியூரம்பட்டை(மூலிகை எண்:197.)


  •  கிளியூரம்பட்டையால் சுர ரோகம்,
  • தேக கொதிப்பும் நீங்கும்.
  • பரிமள வர்க்கங்களில் சேர்த்து உபயோகப்படும்.
  • கூந்தல் தைலங்களில் சேர்க்க வாசனை உண்டாக்கும்.

கிரந்தி நாயகம்.(மூலிகை எண்:196.)



  •  கிரந்தி நாயகத்தால் சீதளம்.
  • சர்ப்ப விஷம் 
  • கண்நோய் 
  • பைசாசம் சங்கை தோஷம் 
  • விரணம் 
  • சிரங்கு முதலியவை நீங்கும்.

கிரந்தி தகரம்.(மூலிகை எண்:195)


  • கிரந்தி தகரத்தால் பயித்திய ரோகம் .
  • சுவாச ரோகம்.
  • வட்ட வட்டமாக எழும் படைகள்,புண்கள் ஒழியும்.

கிட்டி கிழங்கு.(மூலிகை எண்:194.)





  • கிட்டி கிழங்கால் நாட்பட்ட பிரமேகம் போகும்.
  • கப நோய்களும் போகும்.
  • மிகு பசியும் பித்தசாந்தியும் உண்டாகும் என்க.

ஞாயிறு, 22 மார்ச், 2015

கிச்சிலி க் கிழங்கு (பூலா,பூலாங்கிழங்கு,கச்சோலம்,கச்சோரம்,கர்ச்சூரம்)(மூலிகை எண்:193.)






  • கிச்சிலி க் கிழங்குக்கு சிலேத்தும நோயும்,கீழ் பிடிப்பும்,
  • விரணமும் நீங்கும்.
  • கை கால் கீல்களில் முடக்கு,
  • வாய் நாற்றம்,
  • ஈரல் நோய்கள்,
  • இருமல், 
  • குன்மம்,
  • காமாலை முதலிய நோய்களை நீக்கும்.

கிச்சிலிக்காய் (கொழுஞ்சிப் பழம்,போஜன கஸ்துரி,)(மூலிகை எண்:192.)




  • கிச்சிலிக்காயால் வாந்தி,
  • மயக்கம்,
  • வயிற்றிலுள்ள கிருமிகள் முதலியவைகள் போகும்.
குறிப்பு :
கடார நாரத்தை,துருஞ்சி நாரத்தை ,பப்பிளி மாசு,கமலா,சாத்துக்குடி என பிரிவுகளும் உண்டு.

கானாம் வாழை.(மூலிகை எண்:191.)






  • கானாம் வாழைக்கு ஸ்தன விருத்திரிதி,
  • வெப்பசுரம்,
  • இரத்த பேதி இவை நீங்கும்.
  • சுக்கில விருத்தியாகும்,
  • கப பெருக்கம் உண்டாகும்.

காறும் கருணைக் கிழங்கு.(மூலிகை எண்:190.)








  • காறும் கருணைக் கிழங்கால் கரப்பான், 
  • பொடி ச் சிரங்கு,
  • சொறி, 
  • உட்கிரந்தி ,
  • மந்தக்கினி, 
  • கபக்கோழை ,
  • நமைச்சல் ஆகியவற்றை உண்டாகும்.
  • மூல ரோகத்தை நீக்கும்.