- கோஷ்டத்தினால் கண்,தாடை,வயிறு,கழுத்து,சிரசு,நாக்கு,வாய்,இவற்றில் உண்டாகும் நோய்கள்,
- தோஷ சுரம்,
- வீக்கம்,
- உதரவர்தம்,
- கம்ப வாதம்,
- முலை மூலம்,
- ஈளை இருமல்,
- எலி,சர்ப்பம் முதலிய விஷங்கள்,
- 18 வகை பூத கணங்கள்,
- தாவர சங்கம விஷங்கள்,
- பால கிரக தோஷம்,
- வீரிய நஷ்டம் தீரும் .
- சுக பிரசவம் உண்டுபண்ணும்.
- பைத்தியம் நீங்கும்.
- வெள்ளை விழல் நீங்கும்.
- கோழியவரை இலைக்கு வயிற்றில் காண்கிற பருத்த ஆமைக் கட்டியும் ,
- வயிற்று நோயும்,
- ஆசன கடுப்பும்,
- பித்த வாதமும் போகும் .
- சிறுநீரை அதிகப்படுத்தும் .
- ஈரல்களின் வீக்கத்தை கரைக்கும்.
- கோழிக்கீரையால் புடையும்.
- கரப்பானும்.
- கிருமியும் மிகும்.
- கோவையிலைக்கு இருமல் ,
- வாதகோபம்,
- பெரு விரணம்.
- சிறு சிரங்கு ,
- தேக சூடு,
- நீரடைப்பு ,போகும்.
- கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.
- சீதளத்தையும், உறைப்பையும் உடைய கோவைக்கிழங்கால் திரிதோஷம் ,
- சந்துகளில் குத்தல்,
- பித்த கோபம்.
- சருமதல குட்டம்,
- ஜிக்குவா ரோகம்,
- இரைப்பு ,
- கோழை,
- மதுப்பிரமேகம் நீங்கும் .
- கோவைக்காயால் அருசி ,
- நீங்காத வெப்பம்,
- சுர கப தோஷம், போகும்.
- இதன் வற்றலால் அரோசகமும்,கரப்பானும் நீங்கும்.
- கோரைக்கிழங்கால், அதிசாரபேதி ,
- பித்தம் ,
- தேக எரிச்சல் .
- தாகம் ,
- கபம் ,
- குதிங்கால் வாதம்,
- மூர்ச்சை ,
- குளிர் சுரம் ,
- வாத சுரம் ,
- திரிதோட வாந்தி போகும் ,
- கோபுரந்தாங்கியினால் புழுவெட்டு,
- மண்டை கரப்பான் நீங்கும்.
- கோதுமை அரிசியால் நல்ல பலம்.
- சுக்கிலம்,
- பித்தம் இவற்றை விருத்தி செய்யும்.
- தனி வாத கோபத்தையும்,
- பிரமேகத்தையும் நீக்கும்.
- கோடகசாலை பூண்டால்,சுரம் .
- வாத பிரமேகம்.
- சிரங்கு ,
- குஷ்டம்,
- விரணம்,
- பித்தவாத தொந்தம்,
- எலும்பு முறிவு,
- வெட்டுக்காயம்,
- ரத்தம் சொரிதல் ,
- கொள்ளுக்காய்வேளையினால் வாதாதிக்கமும்,
- நாவறட்சியும் ,
- தந்த மூல நோயும்,
- சொள்ளுவடியச் செய்கின்ற கபமும்,போகும் .
- நல்ல கொள்ளுக்கு பீஜாவாயுவும்,
- பித்த குன்மமும்,
- பயித்தியமும் உண்டாக்கும்.
- வாதவலி,
- நீரேற்றம் ,
- நளிர்சுரம்.
- மருந்தின் வீரியம் போகும் .
- கொளுஞ்சி நாரத்தங்காயால் இருமல் ,
- ஆம தோஷம்,
- வாதவிகுணம்,
- கபாதிக்கம் ,
- தாகம் இவற்றை நீக்கும் .
- கொழுக்கட்டை மரத்தினால் அர்ச்சிக்கரமும்,
- வாதத்தினால் மூலாக்கினி தள்ள விழா நின்ற ரத்த சீதமும் நீங்கும்.
- ரத்த மூலமும்,பெரும்பாடு இதன் பட்டை (துவர்ப்பு சுவை பட்டையால் )சூரணம் ,அல்லது குடிநீரால் குணமாகும் .
- கொய்யாப் பழத்தினால் முத்தோஷம்,
- தலை மயக்கம்,
- அருசி
- மந்தம்
- வயிற்று உப்பிசம் ,
- கரப்பான் ,
- வீரியம் இவைகள் உண்டாம்,
- நன்றாக மலம் கழியும்.
- சிவப்பு ,வெள்ளை இரு நிறங்களுடைய பழத்திற்கும் ஒரே பலன்தான் .
- கொம்புப் பாகாயானது பத்தியத்திற்கு ஆகாது.
- நல்ல மருந்துகளை முறிக்கும்.
- வாதம், பித்தங்களை கூட்டும்.
- கொமட்டிமாதுளம் பழத்தினால் அரோசகம் ,
- பித்த கோபம் ,
- சிலேத்தும தோஷம் ,இவைகள் நீங்கும் .
- உருசியையுண்டாக்கும் .
- இதை உப்பிட்டு ஊறுகாய் செய்து அன்னத்துடன் உட்கொள்ளவது வழக்கம்.
- பத்தியத்திற்கு ஆகாது .
- கபம் ,
- வாத கடுப்பை உண்டாக்கும் .
- வயிற்றில் வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் ,
- பித்தவாயு ,மார்பு வலியை உண்டாக்கும்.
- மருந்தை முறிக்கும் .
- கொத்தமல்லி விதையால் உட்சூடு,
- நளிர் சுரம் ,
- பைத்திய வேகம்.
- அசீரணம்,
- வாந்தி,
- விக்கல்,
- நாவறட்சி ,
- சுக்கில பலவீனம்,
- பெரும் ஏப்பம் ,
- கறுத்த விரணம் போகும்.
- கொத்தமல்லிக்கீரையால் அரோசகம் ,
- பித்த வர்க்கமும் ,
- பித்த சுரமும் ,பித்த வன்மையும் போகும்.
- சுக்கிலம் விருத்தியாகும் .
- அதிக குளிர்ச்சியான கொத்தானுக்கு ஒழுக்குப் பிரமேகம்,
- மூத்திரக்கிரிச்சரம்,
- பித்தநோய் ,
- அயர்ச்சி ஆகியன நீங்கும் .
- கொட்டைமுந்திரிப்பழத்தால் தாகமும்,சரீர வெப்பமும் நீங்கும்.
- கரப்பான்,
- துஷ்ட விரணம்,
- கிரந்தி ,
- தொண்டை க் கரகரப்பு இவற்றை உண்டாக்கும்.
- தொடர்ந்து சாப்பிட உடம்புக்கு கெடுதலாகும்.
- கொட்டைப் பாக்கினால் கோழை மலம்,
- மலப்பையில் அடித்தட்டிலிருக்கும் கிருமியை நீக்கும்.
- சுரம் உள்ளவர்களும்,பாஷாண மருந்து சாப்பிட்டவர்களுக்கும் வாயில் போட்டுக் கொள்ள உதவும்.
- இதை அதிகமாக சாப்பிட்டால் ரத்த சோபை உண்டாக்கும் .
- கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை,
- ஒழுக்குப் பிரமேகம்,
- சினைப்பு,
- கிரந்தி,
- கரப்பான்,இவைகள் நீங்கும்.
- வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும்.
- கொட்டிக் கிழங்கு தேமல்,
- பிரமேகம்,
- தேகக்கடுப்பு ,
- உட்சூடு, நீக்கும் .
- உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.
- கொடிவேலி வேரானது வித்திரிதி கட்டி,
- புண் ,
- சொறி ,
- சிரங்கு ,
- வாத ரோகம்,
- குதஸ்தான வித்திரிதி கட்டி ,
- குத்தல் ,
- சோபை ,
- மூல ரோகம்,
- உத்திரக்கட்டு,
- ஜலஸ்ராவம் ,
- மகோதரம் , முதலியவை தீரும் ..
இது கத்தரிக்காய் வகைகளில் ஒன்று .
கொடி வழுதுணைக்காய் வாத முதலிய மூன்று தேகிகளுக்கும் பொருந்தும்,
கபத்தை கரைக்கும். பத்தியத்திற்கு ஆகும்.
- கறுப்பு வழுதுணைக்காய்,(இதன் இலை நீர்கட்டை போக்கும்.)
- பருவ வழுதுணைக்காய்,(இதன் வேர் வாத நோயையும் போக்கும்.)
- சிறு வழுதுணைக்காய்,(இதன் வேர் பல நோய்களை தீர்க்கும்.)
- பெருங் கொடிமுந்திரிப்பழத்தினால் சோம நோய்,
- தாவரவிஷம்,
- உன்மத்தம் ,
- மூத்திரதோஷம் ,
- சாம சுரம் ,ஆகியன நீங்கும் .
- உடல் குளிர்ச்சியும்,கண் பார்வையும்,சுக்கில விருத்தியும் உண்டாகும்.
- சிறு கொடிமுந்திரிப் பழத்திற்குச் சுரம்,
- அரோசிகம்,
- தாகம்,
- புண்,
- இரைப்பு,
- சயம்,
- பித்தம்,
- ரத்த பித்தம்,
- பிரமேகம்,
- மதரோகம் ஆகியன போகும்.
- கொடிக்கள்ளிப்பாலால் கரப்பான்,
- புடை ,
- சிரங்கு ,
- பெருவிரணம்,
- அக்கினிகீடக்கடி,
- குஷ்டம்,
- குன்மம், இவைகள் போகும் .
- பஞ்சந்தாங்கி என்கிற கேழ்வரகு சுத்த வாதத்தை அல்லது பித்த வாதத்தை வருவிக்கும்.
- மது மேகத்தையுடையவர்களுக்கு அதிக நன்மையை தரும் .
- கொடிக்கள்ளியால் சொறி,
- சிரங்கு ,
- அரையாப்பு ,
- கணுச்சூலை,
- புண்,
- கிரந்தி முதலியன குணமாகும் .