சனி, 28 மார்ச், 2015
வெள்ளி, 27 மார்ச், 2015
கீரைத்தண்டு.(மூலிகை எண்:199.)
- கீரைத்தண்டால் பித்தக் கிரிச்சரம்.
- பிரமேகச் சூடு
- வயிற்று கடுப்பு
- இரத்த பேதி முதலிய நோய்கள் போகும்.
வெண்கீரைத்தண்டு, செங்கீரைத்தண்டு முதலிய இரு வகைகள் உள்ளன.
வெண்கீரைத்தண்டு, :
- நோயற்றற நல்ல வெண்கீரைத்தண்டினால்,வெப்பமும்,
- வெளி மூல ரோகமும்.
- பித்த எரிச்சலும் நீங்கும்.
செங்கீரைத்தண்டு:
- பெருங்கறியாகிய செங்கீரைத் தண்டு தீராத பித்த நோய்யையும்,
- பெரும்பாட்டையும்.
- தேக வெப்பத்தையும் நீக்கும்.
கிளியூரம்பட்டை(மூலிகை எண்:197.)
- கிளியூரம்பட்டையால் சுர ரோகம்,
- தேக கொதிப்பும் நீங்கும்.
- பரிமள வர்க்கங்களில் சேர்த்து உபயோகப்படும்.
- கூந்தல் தைலங்களில் சேர்க்க வாசனை உண்டாக்கும்.
கிரந்தி தகரம்.(மூலிகை எண்:195)
- கிரந்தி தகரத்தால் பயித்திய ரோகம் .
- சுவாச ரோகம்.
- வட்ட வட்டமாக எழும் படைகள்,புண்கள் ஒழியும்.
ஞாயிறு, 22 மார்ச், 2015
காரைப் பழம் (மூலிகை எண்:186.)
- காரைப் பழத்தால் சீதரத்தக்கடுப்பும்,அதிசார பேதியும் போம்.
- இப் பழத்தை தினம் ஒருவேளை அல்லது இருவேளை காலை ,மாலை சாப்பிட்டு வர சரீரம் குளிர்ச்சி பெறும்.
- இதற்கு துவர்ப்பு குணமுண்டு.இந்த பழமானது குடலிற்கும்,இரைப்பைக்கும் வலுவைக் கொடுப்பதுடன் உள் வெப்பத்தை யாற்றித் தாது விருத்தியைச் செய்யும்.
- காரை இலைக்குத் தக்கவாறு புளியைச் சிறிது அதிகமாகக் கூட்டிக் கறி சமைத்து உண்பதினால் கடுப்பும்,ரத்தம் விழுதலும் குணமாகும்.
வெள்ளி, 20 மார்ச், 2015
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)