வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

121.கண்டதிப்பிலி (திப்பலி மூலம்).


திப்பலி மூலத்திற்கு பித்த தாகம்,
மூர்ச்சை
சந்ததசுரம்,
காசம்,
பிரமேகம்,
சுரக்கின ரோகம்
சரிர நோவு,போக்கும்.  குணமுண்டு.

புதன், 26 பிப்ரவரி, 2014

120.கண்டங்கத்திரி.



வெப்பமும்,காரமும் உள்ள கண்டங்கத்திரி செடியினால் காசம் 
,சுவாசம்,
சயம்,
அக்னி மந்தம்,
தீ சுரம்,
சன்னி பாதம்,
ஏழு வகை தோஷங்கள்,
வாத ரோகம்,
சல பீனிசம்,
ஈளை இவைகள் போகும்.

119. கடுக்காய்ப் பூ.(கர்க்கடக சிங்கி.)








கடுக்காய்ப் பூவினால் முக்கல்,

ஆமம் ,
இருமல்,
சயம்,
கிரகணி,
மூலமுளை,
ரத்தபித்தம்,
ரத்தபேதி,
குடலிரைச்சல், 
மேக விரணம்,
சுரம்,
விஷ சுரம்,ஆகியவை போகும்.
வீரியம் உண்டாகும். 

118.பிஞ்சு கடுக்காய்.


பிஞ்சு கடுக்காயை ஆமணக்கு எண்ணெய் தடவி தீயில் வறுத்துத் தூள் செய்து அப்போதே உண்டால் மலச்சிக்கலும்,எலும்பை போல் வெளுத்த சீதமும் போகும்.மூல வாயுவினால் பிறந்த முக்கலும்,ஆசனக்கடுப்பும் இருக்காது. 

117.கடுக்காய் .



கடுக்காயினால் தாவிர சங்கம விஷங்கள்,
கன்னம்,நாக்கு,ஆண்குறி இவ்விடத்தில் தோன்றும் நோய்கள்,
அதிசாரம்,
பங்குவாதம்,
அதிதூலம்,
இடிப்புண்,
வாத சோணித வாதம்,
காமிலம்,இவைகள் போகும். 





116.கடுகு ரோகிணி


கடுகு ரோகிணிக்கு மாந்தம்,
சுரம்,
ஐயம்,
வாயு,
கரப்பான்,
சீத பேதி,
கண சுரம்,
முத்தோஷம்,
வயிற்று வலி,இவைகள் விலகும்.
விரோசனம் உண்டாக்கும்.

115.கடுகு நெய்.



சூடுள்ள கடுகு நெய்யால் குன்மம்.ரத்த பித்தம்,குஷ்டம்,மகா வாதம்,சயம்,மூலமுளை விரணம்,குத்தல் முதலிய பிணிகள் போகும். 

114.கடுகு.(சிறு கடுகு,செங்கடுகு,வெண்கடுகு )


கடுகு அக்கினி மந்தம், 
சோபம்,
வாத தோஷம்,
குழம்பிய உமிழ்நீர்,
கிராணி,
வயிற்று வலி,
திரிதோஷம் இவற்றை விலக்கும்.

சுக பிரசவத்தை தரும். 


சிறு கடுகு :



சிறிய கடுகினால் விஷம்,சிலேத்தும நோய்,மூச்செரியச் செய்கின்ற வயிற்று விம்பல்,நீங்கும்.
இது சருமம்,ரசம்,ரத்தம்,மாமிசம்,மேதையாகிய தாதுக்களில் பிறக்கின்ற பிணிக்கு விரணம் உண்டாகும் படி  பூசுகிற  லேபனச் சிகிச்சைகளுக்கும்  ஆகும்.

செங்கடுகு:


தலைஇடிப்பைப் தராநின்ற இருமல்.பீனிசம்,கோழை கபம்,பயித்தியம்,காண கடிவிஷம்,வாத கபம்,குடைச்சல்,முடம் முதலியன தீரும்.

வெண்கடுகு :



வெண் கடுகினால் கந்தகிரகம் முதலிய 12 பால கிரக தோஷங்கள்,தேவ கிரக பூத முதலிய 18 வகைப் பூதங்கள்,மகா சர்ப்ப விஷங்கள்,வண்டுகடி முதலிய பூச்சி கடிகள்,பங்கு வாதம் நீங்கும்.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

113.கடற் தேங்காய்.







கடற் தேங்காயினால் கட்டி,அரையாப்பு,கண்டமாலை,மேகம்,நீரிழிவு,ஊரற் படை,முதலியவை தீரும்.

112.கடற்பாலை (இலை,வேர்).


கடற்பாலை இலையின் அடி பாகத்தைக் கட்டிகளின் மேல் வைத்து கட்ட உடைத்து கொள்ளும்.இந்த இலையின் மேல் பாகத்தை கட்டிகளின் மேல் வைத்து கட்ட ஆறும்.

கடற்பாலை வேர் :


கடற்பாலை வேரால் கிரந்தி,மேக வாயுவின்,பிடிப்பு,பலக்குறைவு,பல வாத ரோகங்கள்  நீங்கும்.



111.கடல்பாசி.







கடல் பாசியினால் பெரும்பாடு,நீரெரிச்சல்,வெள்ளை,பேதி முதலியவை தீரும்.

110.கடலை





கடலை வயிற்றுப்பிசம்,
பித்த தாகம்,
குடல் நோயுடன்  கூடிய கிரகணி, 
மயக்கம்,
மூல வாயு,இவற்றை உண்டாக்கும்.

மருந்தின் நற்குணத்தை முறிக்கும்.

109.கடலழிஞ்சில்.




கடலழிஞ்சில் மரமானது மதுநீர்,
வாத பித்த கப முதலிய தோஷங்களினால் உண்டான நீர் போக்குகள்,
தாகத்தைத் தரா நின்ற தொந்த நீர்போக்கு,
படர் தாமரை,
சொட்டு மூத்திரம்,
தனிச்சுரம்,
அதிசாரம்,
சீத மேகம் இவற்றை போக்கும். 

108.கடப்பம் வித்து.




கடப்பம் வித்துக்கு,விஷக்கடி,சிரஸ்தாப ரோகம்,வாதரோகம்,அக்னிமாந்தம் போகும்.


திங்கள், 24 பிப்ரவரி, 2014

107.கோரக்கர் மூலி



இதனால் மூல வாயு,
நீடித்த அதிசாரம் 
அதி தூலம்,
கபாதிக்கம்,
கரப்பான் போகும்.
மிகுந்த மயக்கமும்,அதி தீபனமும் உண்டாகும்.  

106.கசப்பு வாதுமை.


கசப்பு வாதுமைபால் இருமல்,
படை,
சொறி,
புண்,
தலையில் உள்ள பேன் முதலியவை நீங்கும்.

105.கசகசாதோல்,(போஸ்தக்காய்.)





கசகசா தோலைச் தண்ணீரிலிட்டுக்  காய்ச்சி ஒற்றடம் கொடுக்க கணுக்களில் உண்டான வலி,வீக்கம்,கண் வியாதி,வயிற்று வலி தீரும்.







104.கசகசா



கசகசாவினால் ரசதாது கிருமி,
தினவு,
சீத ரத்த கழிச்சல்,
மலபேதி,
ஜலதோஷம்,
நித்திரை பங்கம் போகும்.
தேகத்தில் சௌந்தரியம்,
தேஜஸ்,
சுக்கிலம்,விருத்தி யாகும்.

103.கக்கரிக்காய்



கக்கரிக்காய் பித்ததோஷம்,
மூலச்சூடு,
ரத்த பித்தம்,
இவற்றைநீக்கும்.
கோழையையும்,
குளிர்ச்சியையும் உண்டாக்கும். 

102.ஓரிலைத் தாமரை.



ஓரிலைத் தாமரையை அரைத்துப் பசுவின் மோரில் கலக்கி ஸ்திரிகள் உட்கொள்ளப் பால் சுரப்பு உண்டாகும்.கடுமையான மேக ரோகங்கள் போகும். 

101.ஓரிதழ்த்தாமரை.



ஓரிதழ்த்தாமரை சுக்கிலத்தையும்,சௌந்தரியத்தையும்,உண்டாக்கும்.மேக ரோகங்களையும்,   கிராணியையும் நீக்கும்.

100.ஓமவள்ளி


ஓமவள்ளியால் குழந்தைகளுக்கு உண்டாகின்ற மாந்தம்,தொண்டை,மார்பு,முதலிய ஸ்தானங்களில் சேர்ந்துள்ள கபக்கட்டு,சுரம் முதலியன நீங்கும்

99.ஓமம்







ஓமத்தினால் குளிர்சுரம்,
இருமல்,
அசீரணம்,
வயிற்று உப்பிசம்,
அதிசாரம்,
குடலிரைச்சல்,
ஆசனக்கடுப்பு,
சீத பேதி,
சுவாச காசம்,
தந்த ரோகம்,
பல் வேரில் வலி,
குய்ய ரோகம் முதலியவைகள் தீரும்.

98.ஐவேலி.






ஐவேலியினால் தாது பலவீனம்,
மலடு,
வீக்கம்,
வயிற்றில் உள்ள கிருமிகள்,
மேக வாயு,
பிடிப்பு,
சிரங்கு,
கரப்பான் முதலியன குணமாகும்.

97.ஏழிலைப் பாலை




ஏழிலைப் பாலையால் 
சீத பேதி 
காது வலி 
காதில் சீழ் வடிதல்,
கணுச் சூலை,
சிரங்கு முதலியவை நீங்கும்.



96.ஏலக்காய்.


ஏலக்காயினால் விக்கல்,
வாந்தி 
மேக காங்கை 
நீர்பேதி 
பித்த மயக்கம் 
மந்தம் 
வயிற்று வலி முதலியன நீங்கும்.




95.எள்ளு.



எள்ளு இது பத்தியத்திற்கு ஆகாது.
உஷ்ணம் 
பலம் 
கபம் 
காசரோகம் 
பித்த நோய்கள் 
இவற்றை வருவிக்கும்.
குரலின் தொனியைக் கெடுக்கும்.
ஸ்திரிகளின் வயிற்றில் கட்டுப்பட்ட உதிரத்தை வெளிப்படுத்தும் . 


எள்ளின் நெய் 

எள்ளின் நெய்யால் 
புத்திக்கு தெளிவு 
விழிக்கு குளிர்ச்சி
மன மகிழ்ச்சி 
தேக புஷ்டி 
பலம் 
தேஜசு 
வாலிப தன்மை ஆகியன உண்டாகும்.
நேத்திர நோய் 
கர்ண ரோகம் 
கபால உஷ்ணம்.
காசம்.
விரணம்.ஆகியன நீங்கும்.



94.எழுத்தாணிப் பூண்டு.








எழுத்தாணிப் பூண்டுக்கு 
பழ மலக்கட்டு
குடலின் சீதளம் 
கிரகணி 
கரப்பான் 
புடை 
கிரந்தி இவைகள் போகும்.