கடுகு அக்கினி மந்தம்,
சோபம்,
வாத தோஷம்,
குழம்பிய உமிழ்நீர்,
கிராணி,
வயிற்று வலி,
திரிதோஷம் இவற்றை விலக்கும்.
சுக பிரசவத்தை தரும்.
சிறு கடுகு :
சிறிய கடுகினால் விஷம்,சிலேத்தும நோய்,மூச்செரியச் செய்கின்ற வயிற்று விம்பல்,நீங்கும்.
இது சருமம்,ரசம்,ரத்தம்,மாமிசம்,மேதையாகிய தாதுக்களில் பிறக்கின்ற பிணிக்கு விரணம் உண்டாகும் படி பூசுகிற லேபனச் சிகிச்சைகளுக்கும் ஆகும்.
செங்கடுகு:
தலைஇடிப்பைப் தராநின்ற இருமல்.பீனிசம்,கோழை கபம்,பயித்தியம்,காண கடிவிஷம்,வாத கபம்,குடைச்சல்,முடம் முதலியன தீரும்.
வெண்கடுகு :
வெண் கடுகினால் கந்தகிரகம் முதலிய 12 பால கிரக தோஷங்கள்,தேவ கிரக பூத முதலிய 18 வகைப் பூதங்கள்,மகா சர்ப்ப விஷங்கள்,வண்டுகடி முதலிய பூச்சி கடிகள்,பங்கு வாதம் நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக