வெள்ளி, 21 மார்ச், 2014

125.கமலா பழம்



1.இனிப்புள்ள கமலா பழத்தால்,பித்தம் தணியும்.
2.தினவு போகும்.
3.கரப்பான் போகும்.
4.சொறி போகும்.
5.சிரங்கு போகும்.
6.நீடித்துச் சாப்பிட தாது பலமுண்டாகும்.

குறிப்பு :உணவிற்கு பின்பு சாப்பிட்டால் முன் சொல்லிய பலன்கள் கிடைக்கும்.
இந்த வகையில் புளிப்பு சுவை உடைய பழத்தை சாப்பிட்டால் முற்றிலும் மாறுபட்ட குணம்  உண்டாகும்.

ஞாயிறு, 2 மார்ச், 2014

124.கத்திரிக்காய்.

கத்திரிக்காய்.


பித்தத்தினால் வந்த கபத்தை நீக்கும்.
புடையையும்,
கிரந்தியையும் அதிகப்படுத்தும்.





கத்திரிபிஞ்சு 

திரி தோஷத்தை விலக்கும்.
சுரமும்,பித்த தோஷமும்,கபமும் நீங்கும்.
மலம் இளகி இறங்கும்.
குரல் ஒலி பலக்கும்.




கத்திரி பழத்தினால்

பித்த ரோகம்,
கரப்பான்,
பெரு விரணம்,
குஷ்டம்,
தேக வெப்பம்,
சுக்கில நட்டம்,ஆகியன உண்டாகும். 

கோழையும்,வாத தோஷமும்,இரைப்பும் நீங்கும். 

123.கத்தகாம்பு.



இது ஓதலை மரத்தின் இலைகளில் இருந்து எடுக்கபடும் ஒருவித சத்து,கீழ்த்தீவுகளில் ஏராளமாய் உண்டு.இது காசுகட்டி இனத்தை சேர்ந்த்தது.இவ்வினத்தில் கறுப்பு,சிவப்பு,வெளுப்பு என 3 வகை உண்டு.இதில் வெளுப்பு என்பதே கத்தகாம்பு எனப்பெயர்.

1.இதனால் செரியாக்கழிச்சல்,
2.சீதக்கழிச்சல்,
3.ஈறு வீக்கம் ,
4.பல்லரணை,
5.பல்வலி,
6.ரச வேக்காடு,
7.தொண்டைப்புண்,
8.தொண்டைகம்மல்,
9.நாட்பட்ட புண்கள் 
தீரும்.