வியாழன், 30 ஜூன், 2016

கோஷ்டம்.(மூலிகை எண்.253.).


  • கோஷ்டத்தினால் கண்,தாடை,வயிறு,கழுத்து,சிரசு,நாக்கு,வாய்,இவற்றில் உண்டாகும் நோய்கள்,
  • தோஷ சுரம்,
  • வீக்கம்,
  • உதரவர்தம்,
  • கம்ப வாதம்,
  • முலை மூலம்,
  • ஈளை இருமல்,
  • எலி,சர்ப்பம் முதலிய விஷங்கள்,
  • 18 வகை பூத கணங்கள்,
  • தாவர சங்கம விஷங்கள்,
  • பால கிரக தோஷம்,
  • வீரிய நஷ்டம் தீரும் .
  • சுக பிரசவம் உண்டுபண்ணும்.
  • பைத்தியம் நீங்கும்.
  • வெள்ளை விழல் நீங்கும். 

கோழியவரை இலை.(மூலிகை எண்.252.).


  • கோழியவரை இலைக்கு வயிற்றில் காண்கிற பருத்த ஆமைக் கட்டியும் ,
  • வயிற்று நோயும்,
  • ஆசன கடுப்பும்,
  • பித்த வாதமும் போகும் .
  • சிறுநீரை அதிகப்படுத்தும் .
  • ஈரல்களின் வீக்கத்தை கரைக்கும்.

கோழிக்கீரை.(மூலிகை எண்.251.).





  • கோழிக்கீரையால் புடையும்.
  • கரப்பானும்.
  • கிருமியும் மிகும்.

கோவையிலை (மூலிகை எண் 250.).


  • கோவையிலைக்கு இருமல் ,
  • வாதகோபம்,
  • பெரு விரணம்.
  • சிறு சிரங்கு ,
  • தேக சூடு,
  • நீரடைப்பு ,போகும்.
  • கண்களுக்கு குளிர்ச்சி உண்டாக்கும்.

கோவைக்கிழங்கு (மூலிகை எண் 249.).




  • சீதளத்தையும், உறைப்பையும் உடைய  கோவைக்கிழங்கால் திரிதோஷம் ,
  • சந்துகளில் குத்தல்,
  • பித்த கோபம்.
  • சருமதல குட்டம்,
  • ஜிக்குவா ரோகம்,
  • இரைப்பு ,
  • கோழை,
  • மதுப்பிரமேகம் நீங்கும்  .  

கோவைக்காய்.(மூலிகை எண் 248.).


  • கோவைக்காயால் அருசி ,
  • நீங்காத வெப்பம்,
  • சுர கப தோஷம், போகும்.
  • இதன் வற்றலால் அரோசகமும்,கரப்பானும்  நீங்கும்.

கோரைக்கிழங்கு.(மூலிகை எண் 247.).



  • கோரைக்கிழங்கால், அதிசாரபேதி ,
  • பித்தம் ,
  • தேக எரிச்சல் .
  • தாகம் ,
  • கபம் ,
  • குதிங்கால் வாதம்,
  • மூர்ச்சை ,
  • குளிர் சுரம் ,
  • வாத சுரம் ,
  • திரிதோட வாந்தி போகும் ,

கோபுரந்தாங்கி.(மூலிகை எண் 246.).






  • கோபுரந்தாங்கியினால் புழுவெட்டு,
  • மண்டை  கரப்பான் நீங்கும்.

கோதுமை அரிசி.(மூலிகை எண் 245.).




  • கோதுமை அரிசியால் நல்ல பலம்.
  • சுக்கிலம்,
  • பித்தம் இவற்றை விருத்தி செய்யும்.
  • தனி வாத கோபத்தையும்,
  • பிரமேகத்தையும் நீக்கும்.

புதன், 29 ஜூன், 2016

கோடகசாலை.(மூலிகை எண்.244.)




  • கோடகசாலை பூண்டால்,சுரம் .
  • வாத பிரமேகம்.
  • சிரங்கு ,
  • குஷ்டம்,
  • விரணம்,
  • பித்தவாத தொந்தம்,
  •  எலும்பு முறிவு,
  • வெட்டுக்காயம்,
  • ரத்தம் சொரிதல் , 

கொள்ளுக்காய்வேளை.(மூலிகை எண்.243.).


  • கொள்ளுக்காய்வேளையினால் வாதாதிக்கமும்,
  • நாவறட்சியும் ,
  • தந்த மூல நோயும்,
  • சொள்ளுவடியச் செய்கின்ற கபமும்,போகும் .

கொள்ளு (மூலிகை எண்.242.)

  • நல்ல கொள்ளுக்கு பீஜாவாயுவும்,
  • பித்த குன்மமும்,
  • பயித்தியமும் உண்டாக்கும்.
  • வாதவலி,
  • நீரேற்றம் ,
  • நளிர்சுரம்.
  • மருந்தின் வீரியம் போகும் .



கொளுஞ்சி நாரத்தங்காய்.(மூலிகை எண்.241.).




  • கொளுஞ்சி நாரத்தங்காயால் இருமல் ,
  • ஆம தோஷம்,
  • வாதவிகுணம்,
  • கபாதிக்கம் ,
  • தாகம்  இவற்றை நீக்கும் .

கொழுக்கட்டை மரம். அல்லது மோதகவல்லி மரம். (மூலிகை எண் .240.).






  • கொழுக்கட்டை மரத்தினால் அர்ச்சிக்கரமும்,
  • வாதத்தினால் மூலாக்கினி தள்ள விழா நின்ற ரத்த சீதமும் நீங்கும்.
  • ரத்த மூலமும்,பெரும்பாடு இதன் பட்டை (துவர்ப்பு சுவை பட்டையால் )சூரணம் ,அல்லது குடிநீரால் குணமாகும் .

கொய்யாப் பழம். (மூலிகை எண் 239.)



  • கொய்யாப் பழத்தினால் முத்தோஷம்,
  • தலை மயக்கம்,
  • அருசி 
  • மந்தம் 
  • வயிற்று உப்பிசம் ,
  • கரப்பான் ,
  • வீரியம் இவைகள் உண்டாம்,
  • நன்றாக மலம் கழியும்.
  • சிவப்பு ,வெள்ளை இரு நிறங்களுடைய பழத்திற்கும் ஒரே பலன்தான் .

கொம்புப் பாகல்.(மூலிகை எண் 238.)



  • கொம்புப் பாகாயானது பத்தியத்திற்கு ஆகாது. 
  • நல்ல மருந்துகளை முறிக்கும்.
  • வாதம், பித்தங்களை கூட்டும்.

கொமட்டிமாதுளம் பழம்.(மூலிகை எண் 237.)




  • கொமட்டிமாதுளம்  பழத்தினால் அரோசகம் ,
  • பித்த கோபம் ,
  • சிலேத்தும தோஷம் ,இவைகள் நீங்கும் .
  • உருசியையுண்டாக்கும் .
  • இதை உப்பிட்டு ஊறுகாய் செய்து அன்னத்துடன் உட்கொள்ளவது வழக்கம்.  

கொத்தவரைக்காய் (மூலிகை எண் 236.)




  • பத்தியத்திற்கு ஆகாது .
  • கபம் ,
  • வாத கடுப்பை உண்டாக்கும் .
  • வயிற்றில் வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் ,
  • பித்தவாயு ,மார்பு வலியை உண்டாக்கும்.
  • மருந்தை முறிக்கும் .

கொத்தமல்லி விதை (மூலிகை எண் 235.)




  • கொத்தமல்லி விதையால்  உட்சூடு,
  • நளிர் சுரம் ,
  • பைத்திய வேகம்.
  • அசீரணம்,
  • வாந்தி,
  • விக்கல்,
  • நாவறட்சி ,
  • சுக்கில பலவீனம்,
  • பெரும் ஏப்பம் ,
  • கறுத்த விரணம் போகும். 

கொத்தமல்லிக்கீரை . (மூலிகை எண் 234.)


  • கொத்தமல்லிக்கீரையால் அரோசகம் ,
  • பித்த வர்க்கமும் ,
  • பித்த சுரமும் ,பித்த வன்மையும் போகும்.
  • சுக்கிலம் விருத்தியாகும்  .

கொத்தான். (மூலிகை எண் 233.)





  • அதிக குளிர்ச்சியான கொத்தானுக்கு ஒழுக்குப் பிரமேகம்,
  • மூத்திரக்கிரிச்சரம்,
  • பித்தநோய் ,
  • அயர்ச்சி ஆகியன நீங்கும் . 

கொட்டைமுந்திரிப்பழம். (மூலிகை எண் 232.)


  • கொட்டைமுந்திரிப்பழத்தால் தாகமும்,சரீர வெப்பமும் நீங்கும்.
  • கரப்பான்,
  • துஷ்ட விரணம்,
  • கிரந்தி ,
  • தொண்டை க் கரகரப்பு  இவற்றை உண்டாக்கும்.
  • தொடர்ந்து சாப்பிட உடம்புக்கு கெடுதலாகும்.

கொட்டைப் பாக்கு .(மூலிகை எண் 231.)




  • கொட்டைப் பாக்கினால் கோழை மலம்,
  • மலப்பையில் அடித்தட்டிலிருக்கும் கிருமியை நீக்கும்.
  • சுரம் உள்ளவர்களும்,பாஷாண மருந்து சாப்பிட்டவர்களுக்கும் வாயில் போட்டுக் கொள்ள உதவும்.
  • இதை அதிகமாக சாப்பிட்டால் ரத்த சோபை உண்டாக்கும் . 


செவ்வாய், 28 ஜூன், 2016

கொட்டைக் கரந்தை.(மூலிகை எண் 230.)

  • கொட்டைக் கரந்தைக்கு வெள்ளை,
  • ஒழுக்குப் பிரமேகம்,
  • சினைப்பு,
  • கிரந்தி,
  • கரப்பான்,இவைகள் நீங்கும்.
  • வெளிவராமல் தங்கிய மலத்தைப் போக்கும். 

கொட்டிக் கிழங்கு .(மூலிகை எண் 229.)




  •  கொட்டிக் கிழங்கு தேமல்,
  • பிரமேகம்,
  • தேகக்கடுப்பு ,
  • உட்சூடு, நீக்கும் .
  • உடல் குளிர்ச்சி உண்டாக்கும்.

கொடிவேலி வேர்.(மூலிகை எண் 228.)



  • கொடிவேலி வேரானது வித்திரிதி கட்டி,
  • புண் ,
  • சொறி ,
  • சிரங்கு ,
  • வாத ரோகம்,
  • குதஸ்தான வித்திரிதி கட்டி ,
  • குத்தல் ,
  • சோபை ,
  • மூல ரோகம்,
  • உத்திரக்கட்டு,
  • ஜலஸ்ராவம் ,
  • மகோதரம் , முதலியவை தீரும்  ..


புதன், 8 ஜூன், 2016

கொடி வழுதுணைக்காய் (மூலிகை எண் 227.)


இது கத்தரிக்காய் வகைகளில் ஒன்று .
கொடி வழுதுணைக்காய் வாத முதலிய மூன்று தேகிகளுக்கும் பொருந்தும்,
கபத்தை கரைக்கும். பத்தியத்திற்கு ஆகும்.

  1. கறுப்பு  வழுதுணைக்காய்,(இதன் இலை நீர்கட்டை போக்கும்.)
  2. பருவ வழுதுணைக்காய்,(இதன் வேர் வாத நோயையும் போக்கும்.) 
  3. சிறு வழுதுணைக்காய்,(இதன் வேர் பல நோய்களை தீர்க்கும்.)

பெருங் கொடிமுந்திரிப் பழம்,(பெரியது)(மூலிகை எண் 226.)


  • பெருங் கொடிமுந்திரிப்பழத்தினால் சோம நோய்,
  • தாவரவிஷம்,
  • உன்மத்தம் ,
  • மூத்திரதோஷம் ,
  • சாம சுரம் ,ஆகியன நீங்கும் .
  • உடல் குளிர்ச்சியும்,கண் பார்வையும்,சுக்கில விருத்தியும் உண்டாகும்.  

கொடிமுந்திரிப் பழம்,(சிறியது)(மூலிகை எண் 225.)




  • சிறு கொடிமுந்திரிப் பழத்திற்குச் சுரம்,
  • அரோசிகம், 
  • தாகம்,
  • புண், 
  • இரைப்பு,
  • சயம்,
  • பித்தம்,
  • ரத்த பித்தம், 
  • பிரமேகம்,
  • மதரோகம்  ஆகியன போகும். 

கொடிக்கள்ளிப்பால் (மூலிகை எண் 224.)



  • கொடிக்கள்ளிப்பாலால் கரப்பான்,
  • புடை ,
  • சிரங்கு ,
  • பெருவிரணம்,
  • அக்கினிகீடக்கடி,
  • குஷ்டம், 
  • குன்மம், இவைகள் போகும் .  


கேழ்வரகு அல்லது பஞ்சந்தாங்கி,(மூலிகை எண் 223.)



  • பஞ்சந்தாங்கி  என்கிற கேழ்வரகு சுத்த வாதத்தை அல்லது பித்த வாதத்தை  வருவிக்கும்.
  • மது மேகத்தையுடையவர்களுக்கு அதிக நன்மையை தரும் .

கொடிக்கள்ளி (மூலிகை எண் 222.)





  • கொடிக்கள்ளியால் சொறி,
  • சிரங்கு ,
  • அரையாப்பு , 
  • கணுச்சூலை,
  • புண்,
  • கிரந்தி முதலியன குணமாகும்  .

செவ்வாய், 7 ஜூன், 2016

கொடி எலுமிச்சங்காய்.(மூலிகை எண் 221.)







  • காட்டில் உள்ள கொடி எலுமிச்சங்காய்க்கு வமணம்(வாந்தி ),
  • பித்த மயக்கம் ,
  • மலபேதி ,
  • பித்த அரோசகம் ஆகியவை நீங்கும்.