வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சீமைத்தக்காளிப்பழம்.(மூலிகை எண்.323.).


  • சீமைத்தக்காளிப்பழத்தினால் ரத்தத்திலும் குடலிலும் பற்றியுள்ள மாசுக்களை நீக்கி சுத்தப்படும்.
  • ஐம்புலன் அறிவு விஷேசப்படும்.
  • வயிற்றிலுள்ள விரணம்,
  • மலச்சிக்கல்,
  • பித்த உபரி முதலியன நீங்கும். 

சீமைச்சோம்பு.(மூலிகை எண்.322.).


  • சீமைச்சோம்பால் வயிற்றுவலி.
  • அக்கினி மந்தம்.
  • வயிற்றுப்பிசம். முதலியவை நீங்கும்.

சீமைச் செவ்வந்திப்பூ or சாமந்திப்பூ .(மூலிகை எண்.321.).


  • சீமைச் செவ்வந்திப்பூ அல்லது சாமந்திப்பூவால் ஸ்திரிகளுக்கு  தங்கிஉள்ள உதிர அழுக்கு வெளியாகும்.
  • சீதசுரம்,
  • அக்கினி மந்தம்,
  • மூர்ச்சை முதலிய பிணிகள் நீங்கும்.

சீந்திற் சர்க்கரை.(மூலிகை எண்.320.).


  • சீந்திற் சர்க்கரையால் இடைவிடாத பெரும் தாகம்,
  • எலும்புருக்கி ரோகம்,
  • ரத்தவாந்தி ரோகம்,
  • மதுமேகம்,
  • தேககாங்கை இவைகள் போகும்.
  • இது கசக்கும்,


சீந்திற் கிழங்கு.(மூலிகை எண்.319.).


  • சீந்திற் கிழங்கு.or சீந்தில் கொடிக்கு சர்வ மேகம்,
  • ரத்த பித்தரோகம்,
  • சுரம்,
  • மாந்தசுரம்,
  • பேதி,
  • பித்தகணம்,
  • ஆம்பில பித்த ரோகம்,
  • சர்ப்ப விஷம்,இவற்றைப் போக்கும்.
  • பசிதீபனம் உண்டாகும்.  

சீத்தாப்பழம்.(மூலிகை எண்.318.).


  • சீத்தாப்பழத்தால் பித்த சிலேத்தும தொந்தம்,
  • அக்கினி மந்தம் 
  • சித்த பிரம்மை உண்டாகும்.
  • சீதள உடம்புக்கு ஆகாது.

சிற்றுழா இலை.(மூலிகை எண்.317.).


  • சிற்றுழா இலையால் இரத்தமூலம்.
  • சீழ் மூலம்,
  • வெட்டை,முதலிய ரோகங்கள் நீங்கும்.

சிற்றீச்சம்பழம்.(மூலிகை எண்.316.).


  • சிற்றீச்சம்பழத்திற்கு சீதபேதி,
  • உழலை நோய்,
  • விரணம்,இவைகள் போகும்.
  • புத்திக்கு மலினம்(மழுங்கும்)
      உண்டாகும்.

வியாழன், 29 செப்டம்பர், 2016

சிற்றீச்சங்குருத்து.(மூலிகை எண்.315.).



  • சிற்றீச்சங்குருத்தால் ஸ்த்ரீகளுக்கு வயிற்றில் கட்டுப்பட்ட ரத்தவாத குன்மம் போகும்.
  • இன்னும் நல்ல பசியும் தேஜஸும் உண்டாகும்.

சிற்றாமுட்டி வேர்.(மூலிகை எண்.314.).



  • சிற்றாமுட்டி வேரினால் அஸ்திசுரம்.முதலிய பலவகை சுரங்களும்.
  • பித்த நோயும்,நீங்கும்,
  • கண்ணுக்கு ஒளியாம்.
  • இது தைலங்களுக்கு உதவும். 

சிற்றாமணக்கு நெய்.(சிறிய ஆமணக்கு எண்ணெய்).(மூலிகை எண்.313.).





  • சிற்றாமணக்கு நெய் பற்பல ஓளஷதங்களின் வெப்பங்களையும்,
  • வாயுவினால் மூலத்தில் உண்டாகின்ற உஷ்ணங்களையும்,நீக்கும்.
  • சிசுக்களை தாய் வளர்ப்பது போல் உடலை வளர்ப்பிக்கும்.

சிற்றரத்தை.(சிறிய அரத்தை).(மூலிகை எண்.312.).


  • சிற்றரத்தையால் சரத்தி.
  • பித்தம்.
  • கரப்பான்,
  • வாயு.
  • சிரரோகம்,
  • சிலேத்துமம்,
  • திரிதோஷம்,
  • சீதளம்,
  • பல சுரம்,
  • காசம் இவைகள் போகும்.

சிறு வள்ளிக்கிழங்கு.(மூலிகை எண்.311.).



  • சிறு வள்ளிக்கிழங்கால் மந்தம் ,
  • கரப்பான்,
  • சிலேத்துமவிருத்தி,
  • முளைமூலம் ஆகியன உண்டாகும்.
  • உதராக்கினி கெடும். 


ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிறுபுள்ளடி.(மூலிகை எண்.310.).


  • சிறுபுள்ளடியால், எண்வகை மாந்தம்.
  • சீதக்கட்டு,
  • வாதாலசகம்,ஆகியன நீங்கும்.
  • வற்றிய முலைப்பாலும் பெருகும். 

சிறுபீளை.(மூலிகை எண்.309.).

  • சிறுபீளைச் செடிக்குத் தேகம் வெளிறல்,
  • அசிர்க்கா ரோகம்,
  • வாதமூத்திரக்கிரிச்சரம்,
  • முத்தோஷம்,
  • மூத்திரச் சிக்கல்,
  • அஸ்மரி,
  • அந்திர பித்தவாதம்,
  • சோணிதவாதங்கள்,ஆகியன போகும். 

சிறுபசலைக்கீரை.(மூலிகை எண்.308.).


  • அதிக சுவையுள்ள சிறுபசலை,புணர்ச்சியில் இச்சையும்,
  • கபத்தை பெருக்கும்,
  • தாகத்தையும்,
  • சூட்டையும் தணிக்கும்,
  • மலத்தை இளகச் செய்யும்.

சிறுநாகப்பூ.(மூலிகை எண்.307.).



  • சிறுநாகப்பூவானது ஆண்குறியில் விழுகிற வெள்ளை,
  • மார்க்கந்தப்பிய ஆவிருதவாதம்,
  • காச ரோகம், இவற்றை விலக்கும்.

சிறுதேட்கொடுக்கு.or சிறுதேள்கொடுக்கு.(மூலிகை எண்.306.).


  • சிறுதேட்கொடுக்கால் நமைச்சிரங்கு,
  • விரணக் கரப்பான்,
  • கீல் வீக்கம்,
  • கொறுக்குமாந்தை,
  • ஒழுக்குப் பிரமேகம்,
  • பித்த வெள்ளை,
  • அஸ்திர சிராவம், ஆகியன நீங்கும்.  

சிறுசின்னி.(மூலிகை எண்.305.).


  • சிறுசின்னி இலைக்கு வண்டு கடி ,முதலிய கடி விஷங்கள் ,
  • இன்னதென்று தெரியக்கூடாத செந்துக்களின் விஷங்கள்,
  • இடுமருந்து,
  • பிரமேகம்,
  • கணச்சுரம்,
  • அக்கினி மந்தம்,ஆகியன போகும்.

சிறுகுறிஞ்சா வேர்.(மூலிகை எண்.304.).


  • சிறுகுறிஞ்சா வேரானது அற்பசெந்துக்களின் நஞ்சு,
  • வாத சுரம்,
  • வாத தோஷம்,
  • காசம்,
  • சுவாச காசம், இவற்றை போக்கும்.

சிறுகுறிஞ்சாக்கொடி.(மூலிகை எண்.303.).





  • சிறுகுறிஞ்சாக்கொடி வாதநோய்,
  • சீதபேதி,
  • மாதாந்த உதிரச்சிக்கல்,
  • அஸ்திதகசுரம்,
  • காணாகடி விஷம்,
  • வாத சுரம்,
  • சந்நி பாதசுரம்,
  • கப சுரம்,
  • பித்த ஜிக்வாகண்டகம்,
  • சந்ததசுரம்,
  • தாக ரோகம்,முதலியவை நீக்கும்.  

சிறுகுறிஞ்சா இலை.(மூலிகை எண்.302.).


  • பித்த குணமுள்ள சிறுகுறிஞ்சா இலை,அரை கடுவன்,
  • சிரங்கு,
  • காசம்,
  • விஷ பாகம்,
  • நாப்புண்,இவற்றை நீக்கும்.

சிறுகீரை.(மூலிகை எண்.301.).




  • சிறுகீரையால் தூம்பிரநோய்,
  • காசம் ,
  • படலம்,
  • பாதரச மருந்துகளின் வேகம்,
  • விரணம்,
  • மூத்திரகிரிச்சரம்,
  • வீக்கம்,
  • பித்த நோய்கள்,
  • நாவி,மற்றும் பாஷாண விஷங்கள் போகும்.
  • அழகு உண்டாகும்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

சிறுகட்டுக்கொடி.(மூலிகை எண்.300.).


  • சிறுகட்டுக்கொடியால் ,சீதரத்த பேதியும்,
  • மேகநீரும் கட்டு படும். 
  • சரீரத்திற்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

சிறு அம்மான் பச்சரிசி.(மூலிகை எண்.299.).


  • பாலுள்ள சிறு அம்மான் பச்சரிசியால்  சாதிலிங்கம் மெழுகு ஆகும்.
  • மேக உஷ்ணம் நீங்கும்.
  • இது பசுவின் பாலுக்கு சமம்,எனவே உதய காலத்தில் சாப்பிட வேண்டும்.

சிறியாநங்கை(மூலிகை எண்.298.).




  • சிறியாநங்கை என்னும் மூலிகை முறைப்படி காப்பு கட்டி எடுக்க பெண் வசியம் செய்யும்.
  • வெங்காரத்தை பஸ்பமாக்கும்.
  • தேகத்தில் வனப்பை உண்டாக்கும்.

சிவனார்வேம்பு.(மூலிகை எண்.297.).




  • சிவனார்வேம்பினால், ஆகந்துக விரணம்,
  • நாட்பட்ட புண்,
  • சர்மதல குட்டம்,
  • ராஜ பிளவை,
  • கர்ப்ப விஷம்,
  • மகாவாதம்,
  • குஷ்டம் ,
  • அக்கினி மந்தம் தீரும்.
  • சரீரம் அழகாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி.(மூலிகை எண்.295.).


  • சிவப்பு அம்மான் பச்சரிசிக்கு வாதம்,
  • பிரமேகம் போகும்.
  • சுக்கில தாது விருத்தியாகும்.
  • வெள்ளியை பஸ்பிக்கும்.

வெண்சிவதைவேர்.(மூலிகை எண்.295.).


  • கசப்பும்,துவர்ப்புமுள்ள வெண்சிவதைவேரால் பித்த கோபம்,
  • மலாசயக் கிருமியையும் போக்கும்,
  • விரோசனத்தை தரும்.

கருஞ்சிவதைவேர்.(மூலிகை எண்.294.).

  • காரமும்,கசப்புமுள்ள கருஞ்சிவதைவேரால் அறிவதற்கரிய எலி விஷத்தையும்,
  • பித்த குன்மத்தையும் நீக்கும்.
  • பேதியை உண்டாக்கும்.

சிவதைவேர்.(மூலிகை எண்.293.).

  • குற்றமற்ற சிவதைக்கு பழையமலம்,
  • உதாவர்த்த வாதம்,
  • பித்தவாத தொந்தம்,
  • பாலகிரகதோஷம் ஆகியன விலகும்.  

சிவகரந்தை.(மூலிகை எண்.292.).


  • மணமுள்ள சிவகரந்தை வமனம்,
  • அருசி,
  • விந்து நஷ்டம்,
  • மந்த வாதம்,
  • கரப்பான்,
  • வாதாதி தொந்தம்,
  • காசம்,
  • அக்கினி மந்தம் இவைகளை நீக்கும்.
  • சடராக்கிகனியும்,வனப்பையும் உண்டாக்கும்.


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

சிலாரசம்.(மூலிகை எண்.291.).


  • மலின மேகநிறமும் மணமுள்ள சிலாரசத்தால் சிரஸ்த்தாபம்,
  • ஜலதோஷம்,
  • தனுர் வாதம்,
  • சந்நி,
  • அதி தும்மற் பீனிசம்,இவைகள் போகும்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

சிங்கடாப் பருப்பு.(மூலிகை எண்.290.).


  • சிங்கடாப் பருப்பால் தாது பலப்படும்.
  • கபம் ,
  • பித்தம்,
  • பயித்தியம்,
  • அக்கினி மந்தம் இவைகள் நீங்கும்.

சிகைக்காய் or (சீயக்காய்) .(மூலிகை எண்.289.).


  • சிகைக் காயானது நாசியுட் புரிகின்ற ஆக்கிரான நசியச் சிகிச்சைகளுக்கு முக்கிய மருந்தாகும்.
  • பேதியும்,
  • வாந்தியும் உண்டாக்கும்,
  • பலவித நெய் சிக்குகளை நீக்கும்.   

சாறுவேளை.(மூலிகை எண்.288.).


  • கவலை தரா நின்ற காமாலை ,
  • மலஜலக்கட்டு,
  • வீக்கத்தை முதலாக கொண்ட பாண்டு ரோகம்,
  • அதிகரித்த கபம் முதலியன தீரும்.

சாலாமிசிரி.(மூலிகை எண்.287.).


  • சாலாமிசிரியினால் விந்து தடிப்பாகும்.
  • போகத்தில் அளவு கடந்த சக்தியை உண்டாக்கும்.

சாரப்பருப்பு.(மூலிகை எண்.286.).


  • சாரப்பருப்பால் சிறுநீரைப்பற்றிய கடுஞ் சுருக்கு.
  • மூத்திரக்கடுப்பு,
  • சலப் பிரமேகம்,நீங்கும்.
  • நீற்ற சுக்கிலம் இருக்கும்.
  • ரசகெந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும். 

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

சாம்பிராணி.(மூலிகை எண்.285.).



  • சாம்பிராணி வேம்பைப் போல் கசப்புள்ளது.
  • வாதகபம்,
  • விழிநோய்,
  • நீங்காத சிரநோய்,
  • சல பீனிசம்,இவற்றை நீக்கும். 

சாமை அரிசி.(மூலிகை எண்.284.).


  • சாமை அரிசிக்குத் தாகசுரம்,
  • பிரமேகம்,
  • மகாவாதம், 
  • சோபாரோகம்,இவைகள் நீங்கும்.
  • தேக புஷ்டியுண்டாகும்.

சாத்துக்குடிப் பழம்.(மூலிகை எண்.283.).


  • சாத்துக்குடிப் பழம் எல்லா நோயாளிகளும்  உபயோகப்படுத்தலாம்.
  • இதயம் பலமாகும்.
  • சுத்த ரத்தம் உண்டாகும்,
  • நாவின் ருசி முதலியன உண்டாகும்.

சாதிப்பூ.(மூலிகை எண்.282.).


  • சாதிப்பூவுக்கு திரிதோஷம்,
  • தலைநோய்,
  • தேக உஷ்ணம்,
  • கண் படலம்,இவைகள் நீங்கும்.
  • நீங்காத ஒளியும்,
  • மணமும் உண்டாகும்.

சாதிப்பத்திரி (மூலிகை எண்.281.).





  • சாதிப்பத்திரிக்கு அழற்சுரம்,
  • கிரகணி,
  • சலமந்த பேதி,இவைகள் நீங்கும்.
  • பித்தமும்,
  • சுக்கில பெருக்கமுண்டாகும்.