ஞாயிறு, 31 ஜூலை, 2016

சவ்வியம்.(செவ்வியம்).மிளகு வேர்,(மூலிகை எண்.277.).


  • சவ்வியம்.(செவ்வியம்) மிளகு வேரால் குத்தல் ,
  • அரோசகம்,
  • சந்நி பாதசுரம்,
  • நீடித்த காசம்,
  • கோழை,
  • பைத்தியம்,
  • தொண்டைக்கம்மல்,
  • பழைய சுரம்,
  • எலும்பைப்பற்றி ஏறுகின்ற தாவிர விஷம் போகும். 

வியாழன், 28 ஜூலை, 2016

சவ்வரிசி.(மூலிகை எண்.276.)





  • சவ்வரிசியால் சீழ் பிரமேகம்,
  • ரத்த பிரப்மேகம்,நீங்கும்.
  •  சுக்கிலமும்,கபமும் விளையும்.

சவுரிப் பழம்.(மூலிகை எண்.275.)





  • சவுரிப் பழத்தினால் சிரசு நோயும்,
  • உட்றக்கடுப்பும்.
  • நீர்ப் பினிசமும் நீங்கும்.

சர்க்கரை வேப்பமரம்.(மூலிகை எண்.274.)



  • இலையில் மதுரமுள்ள சர்க்கரை வேம்பினால் காயசித்தியும்,
  • சுக்கில சுரோணித சுத்தியும் உண்டாம்.
  • கபரோகம் நீங்கும்
  • இதன் வேர்ப்பட்டை சூரணம் ஆயுள் விருத்தி உண்டாக்கும் .

சர்க்கரை வள்ளிக்கிழங்கு.(மூலிகை எண்.273.)



  • சர்க்கரை வள்ளிக்கிழங்கு திவ்விய அவிழ்த குணங்களை கெடுக்கும்.
  • மூல முளையை உண்டாக்கும்.
  • குடலிரைச்சல்  உண்டாகும்.
  • கிராணியையும்  விளைவிக்கும்.

சர்க்கரை,(சருக்கரை )(மூலிகை எண்.272.).


  • சர்க்கரையானது மருந்துகளுக்கு அனுபானமாக இருக்கிறது.
  • வாத வமனத்தை (காற்றினால் உண்டான வாந்தி) நிறுத்தும்.
  • பித்த தோஷம் போகும்.
  • அரோசிகம் போக்கும்.
  • கெட்டிப்பட்ட கபத்தை இளக்கி மகிழ்ச்சியை தரும். 

புதன், 27 ஜூலை, 2016

சரளதேவதாரு மரம்.(மூலிகை எண்.271.).





  • சரளதேவதாரு மரக்கட்டையில் கபஸ்ராவ ரோகம்,
  • சிலேத்தும தோஷம்,
  • தந்தநோய்,
  • இரைப்பு,
  • ஐவகை வலி,
  • கர்ணநாத ரோகம்.
  • நடுக்கு வாதம்,
  • கபச்சுரம் இவைகள் நீங்கும்.  

சரக்கொன்றை மரம்.(மூலிகை எண்.270.).






  • சரக்கொன்றை மரத்தால் பெருவியாதி,
  • கிருமி ரோகம்,
  • கீல்பிடிப்பு,
  • வாதகப தொந்தம்,
  • விஷ மலம்,
  • அரோசகம்,ஆகியன போகும்.
  • இது துவர்ப்பு சுவை உண்டு,
  • விரோசனம் (பேதி ) ஆகும்.

சரக்கொன்றைப் பூ.(மூலிகை எண்.269.).






  • சரக்கொன்றைப் பூவால், மலாசய கிருமி,
  •  மது மேகம்,
  • குடலைப் பற்றிய ரோகங்கள் ஆகியன நீங்கும்.

சரக்கொன்றைப் புளி.(மூலிகை எண்.268.).






  •  சரக்கொன்றைப் புளி வாதப்பிரமேகம்.
  • மலபந்தம்,
  • குடல்வலி,
  • அக்குடலைப் பற்றிய அழுக்கு,
  • உஷ்ணம் இவற்றை போக்கும்.


சம்புநாவற்பழம்.(மூலிகை எண்.267.).

  • சம்புநாவற்பழத்தினால் வாத உஷ்ணம்,
  • பித்த உஷ்ணம்,
  • ஒரு தோஷத்தால் பிறந்த தாகரோகம் இவைகள் நீங்கும்.

சமுத்திரப் பழம். (மூலிகை எண்.266.).





  • சமுத்திரப் பழத்தினால் தலைவலி,
  • சுரம்,
  • மூர்ச்சை,
  • இருமல்,
  • அதிசார பேதி,
  • கபத்தை விருத்தி செய்யும் நீர்ப்பீநசம்,முதலியன தீரும். 

சமுத்திரசோஷி விதை (மூலிகை எண்.265.).



  • சமுத்திரசோஷி விதையானது கபதோஷம்.
  • அருசி,
  • சோணிதவாதம்,
  • அதிமூத்திரம்,
  • வாதாதிக்கம் இவைகள் போக்கும். 

சந்தனமரம்.(மூலிகை எண்.264.).




  • சாதிச் சந்தனமரக் கட்டையைக் முறைப்படி அனுபவிப்பவர்களுக்கு நல்ல விவேகமும்,
  • மன மகிழ்ச்சியும்,
  • லட்சுமி விலாசமும்,
  • சரும தாது ஒளியும்,
  • மாதரிடத்திச்சையும் உண்டாகும்.
  • சீழ் பிரமியம் நீங்கும்.
  • இம்மரம் குளிர்ச்சியும்,வெப்பமும் உடையது.
  • சித்தப்பிரமை,
  • ரூட்சை,
  • நாவறட்சி,
  • உட்சூடு,
  • நமைச்சல் போக்கும்.
  • சரீரத்திற்கு பலத்தை கொடுக்கும்.

  • இதில் 3 வகை உண்டு.(சிவப்பு,மஞ்சள்,வெள்ளை நிறங்கள்)
  •   செந் சந்தனம்            =  மருத்துவத்திற்கு உத்தமம்,
  •   மஞ்சள் சந்தனம்      = மருத்துவத்திற்கு மத்திமம் ,
  •   வெள்ளை சந்தனம் =  மருத்துவத்திற்கு அதமம்.

சதுரக்கள்ளிப் பால் .(மூலிகை எண் 263.)

  • சதுரக்கள்ளிப் பாலால் ,குட்டம்,
  • காணாக்கடி,
  • கீல் வீக்கம்,
  • வாத குன்மம்,
  • வாதப் பிரமேகம்,
  • வாதாதிக்கம்,
  • கிருமி நெளிகின்ற துஷ்டவிரணம்,
  • கரப்பான் முதலியவை போகும்.

செவ்வாய், 19 ஜூலை, 2016

சதுரக்கள்ளி .(மூலிகை எண் 262.)




சதுரக்கள்ளி என்பது கணுக்களின் இடையில் உள்ள துண்டானது நான்கு மூலையையுடையதாக  இருத்தல் வேண்டும்.

  • சதுரக்கள்ளியால் கரப்பான்,
  • நமைச்சல் ,
  • காணாக்கடி,
  • கபநோய்,
  • வாத குன்மம்,இவற்றை நீக்கும்.
  • விரோசனத்தைத் தரும்.




சதாப்பு இலை அல்லது சதாபலை .(மூலிகை எண் 261.)



  • சதாப்பு இலை அல்லது சதாபலையால் பால் மாந்தம்,
  • மாந்த சுரம்.
  • கண பேதி,
  • கபவமனம்,
  • பிரசவ மாதர்களின் வேதனை இவைகள் நீங்கும்.
  • தீபனம் உண்டாகும் . 


சதகுப்பை.(மூலிகை எண் 260.)





  • சதகுப்பை வாத ரோகம்,
  • அசிர்க்கரம்,
  • தலைவலி,
  • கர்ண சூலை,
  • ஜலதோஷம்,
  • கப ரூட்சை,
  • ஆசனக்கடுப்பு,
  • சூதக வாய்வு ,
  •                      ஜல பீனிசம் ஆகியவற்றை நீக்கும். 



சண்பகமரத்தின் வேர்,(மூலிகை எண் 259.)


சண்பகமரத்தின் வேர்:


  • சண்பகமரத்தின் வேரானது உஷ்ணம் ,
  • சுரம்,
  • நேத்திர தோஷம்,ஆகியன நீங்கும்.
  • பசியை உண்டாக்கும்.

சண்பகப்பூ.(மூலிகை எண் 258.)



சண்பகப்பூ:

  • நல்ல மணமும்,சூடும் உள்ள சண்பகப்பூவிற்கு வாத பித்த தொந்தம்,
  • அஸ்தி சுரம்,
  • பிரமேகம்,
  • தனி தோஷ சுரம்.
  •  சுக்கில நஷ்டம்,
  • நேத்திர அழலை ஆகியன போகும் .
  • மனக்களிப்பு உண்டாகும்.

திங்கள், 18 ஜூலை, 2016

சணப்பச் செடி.(புளிவஞ்சி) (மூலிகை எண்.257.).





  • புளிவஞ்சி என்னும் சணப்பச் செடியால் ஸ்திரீகளுக்கு கட்டுப்பட்டிருக்கும் சூதகத்தை வெளிப்படுத்தும்.
  • தாகம் ,
  • தேகவெப்பம் ,
  • பித்த சுரம் முதலியன போகும்.
  • சில வாத ரோகங்களும் தீரும்.
  • இளம் கர்ப்பத்தை கரைக்கும்.(கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது).





வெள்ளி, 15 ஜூலை, 2016

சடாமாஞ்சில்.(மூலிகை எண்.256.).




  • சடாமாஞ்சியால் குஷ்டம்,
  • சிலந்தி விஷம் ,
  • பழைய சுரம் ,
  • உட்சூடு,
  • வாயுபேதி,
  • விழி நோய் ,
  • காசம் ,
  • ரத்த பித்தம்,
  • சுவாசம். போகும் . 


வியாழன், 14 ஜூலை, 2016

சங்கஞ்செடி.முட்சங்கன்,(மூலிகை எண்.255.).






  • சங்கஞ்செடி.அல்லது முட்சங்கன் வேருக்கும்,இலைக்கும்,சோபை ,
  • கரப்பான் ,
  • விதாகம் ,
  • விரணம்,
  • குன்மம் ,
  • கீல் வீக்கம்,
  • வாத கோபம்,
  • பித்த நோய் ,
  • பல வகை நஞ்சு இவைகள் விலகும்.
  • கண் துலக்கமும்,மிகு பசியும்,ரத்த விருத்தியும் உண்டாகும் .



சங்கஞ்செடி.அல்லது முட்சங்கன் பாலால் 
  • வீக்கம் ,சுரம் நீங்கும் .
  • காந்தம் ,அயம் ,முதலிய செந்தூரங்கள் சாப்பிடும் போது இதன் பாலை சேர்த்து சாப்பிட்டால் நன்மை உண்டாக்கும் .