வெள்ளி, 23 நவம்பர், 2018

வேர்க்கடலை.(மூலிகை எண்.810.).



  • வேர்க்கடலையால் ரத்தமூலம் போகும்.,
  • தாதுபுஷ்டி உண்டாகும்.,
  • தேகம் பெருக்கும் ,
  • பித்தவாயுவை உண்டாக்கும்.

வேப்பம் இலை.(மூலிகை எண்.809.).


  • வேப்பம் இலையால் மாந்தம் ,
  • பொருமல் ,
  • பேதி ,
  • கிராணி ,
  • கீல்களில் வீக்கம் ,
  • வயிற்றிலுண்டான கிருமிகள் ஒழியும்.

வேப்பம் வித்து.(மூலிகை எண்.808.).


  • வேப்பம் வித்தினால் குட்டம் ,
  • சர்ப்ப விஷங்கள்,
  • சந்நி ,
  • சொறி ,
  • சிரங்கு ,
  • மூலம் ,
  • ஏப்பம் ,
  • மலத்திலுள்ள கிருமி முதலியவை போகும். 

வேப்பம்பூ.(மூலிகை எண்.807.).



  • நாட்சென்ற வேப்பம்பூவுக்குச் சந்நி ,
  • மூர்ச்சை ,
  • ஜிம்மக தோசம் ,
  • வாந்தி ,
  • அரோசிகம் ,
  • நீடித்தவாதம் ,
  • ஏப்பம் ,
  • மலக்கிருமி போகும் .

வேப்பம் பிண்ணாக்கு.(மூலிகை எண்.806.).


  • வேப்பம் பிண்ணாக்கினால் சந்நிபாதம் ,
  • வாத சிரஸ்தாபம் ,
  • வாதரோகம் ,
  • திரிதோஷம் ,
  • கபாதிக்கம் போகும்.

வேப்பமரம்.(மூலிகை எண்.805.).



  • வேப்பமரத்திற்கு (பட்டைக்கு )ரூட்சை ,
  • வாதகோபம் ,
  • மூலக்கணமாந்தம் ,
  • எரிகிருமி ,
  • வயிற்றுநோய் ,
  • சிதறுகின்ற மலப்பேதி நீங்கும்.

வேப்பநெய்.(மூலிகை எண்.804.).


  • வேப்பஎண்ணெய் என்கிற வேப்பநெய்க்கு மகாவாதரோகம் ,
  • கிரந்தி ,
  • கரப்பான் ,
  • சிரங்கு ,
  • ஆகிர்ஷ்ணஸ்தம்பன வாதம் ,
  • சுரம் ,
  • சந்நி நீங்கும்.
  • பித்தம் கூடும் .
வேப்பநெய்யால் தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவர ,

  1. சந்நி ,
  2. கழுத்துநரம்பு இசிவு ,
  3. நீர்ப்பீனிசம் ,
  4. வாதரோகங்கள் போகும் .,
  5. மற்றும் ஆறாத ரணங்களும் ஆறும் .

வியாழன், 22 நவம்பர், 2018

வேங்கைமரம்.(மூலிகை எண்.803.).






  • வேங்கைமரத்தால் பொடிஇருமல் ,
  • வெள்ளைவீழல் ,
  • உள்மாந்தை ,
  • விரணம் ,
  • காசம் ,
  • சீழ்ப்பிரமேகம் ,முதலியவை நீங்கும்.
  • கண்ணுக்கு ஒளி உண்டாகும்.
  • மலவிரேசனம் உண்டாகும்.


வெற்றிலை.(மூலிகை எண்.802.).


  • காரமுள்ள வெற்றிலையின் ரசத்தை பருகில் கபம் ,
  • சீதளம் ,
  • காணாக்கடியின் துர்க்குணம் ,
  • திரிதோஷ கோபம் ,இவைகள் போகும்.

வெள்ளைமிளகு.(மூலிகை எண்.801.).



  • வெள்ளை மிளகுகினால் கிராணி ,
  • சிலேத்துமவாதம் ,
  • ரூட்சை ,
  • சீழ்ப்பிரமேகம் இவைகள் நீங்கும்.
  • ஜடராக்கினி அதிகரிக்கும்.

வெள்ளைப்பூண்டு.(மூலிகை எண்.800.).



  • வெள்ளைப்பூண்டால் சந்நி,
  • வாதரோகம்,
  • தலைவலி ,
  • நீர்க்கோவை,
  • மூலரோகம் ,
  • சீதபேதி ,
  • வாய்ப்பூட்டு ரோகம் ,
  • அரசம் முதலியன நீங்கும்.

வெள்ளை நாவற்பழம்.(மூலிகை எண்.799.).




  • வெள்ளை நாவற்பழத்தால் ரத்ததாதுவும் ,
  • சுக்கிலத்தாதுவும் பெருகும் .
  • உள்வெப்பத்தை நீக்கும்.
  • சாதாரண நாவல் பழத்தை விட வெள்ளை நாவல் பழத்திற்கே குணமதிகம்.

வெள்ளைத் தாமரைப்பூ.(மூலிகை எண்.798.).



  • வெள்ளைத் தாமரைப்பூவால் ஈரலில் அதிகரிக்கின்ற உஷ்ணமும் ,
  • வெப்பமுள்ள மருந்துகளால் உண்டான வீறும்,
  • உட்சூடும் நீங்கும்.

வெள்ளைச்சாறடைக் கிழங்கு.(மூலிகை எண்.797.).


  • வெள்ளைச்சாறடைக் கிழங்கால் சீதளம் ,
  • நீரேற்றம் ,
  • தேமல் ,
  • தடிப்பு ,
  • குன்மம் ,
  • வாதவலி ,
  • சிறு சிரங்கு ,
  • பிரமேகம் ,
  • இருமல் ,ஆகியன போகும்.

வெள்ளைச் சாறடை.(மூலிகை எண்.796.).


  • விருச்சிகம் என்கிற வெள்ளைச் சாறடையால் வித்திரிதிக்கட்டி ,
  • மூலவாயு,
  • கண்படல ரோகம் ,
  • நெஞ்சுநோய் ,
  • சுவாசரோகம் ,
  • கர்ப்பத்தை சின்னப்படுத்துகிற சூதிகாவாதம் போகும்.

வெள்ளை அல்லிவித்து.(மூலிகை எண்.795.).



  • வெள்ளை அல்லிவித்து ஈரல் ,பீலிகம் இவற்றிற்கு பலம் கொடுக்கும்.
  • மதுமேகத்தை நீக்கும்.

வெள்ளெருக்கம்பால்.(மூலிகை எண்.794.).




  • வெள்ளை எருக்கம் பாலால் ஐவகை வலியின் வன்மை ,
  • சுளுக்கு ,
  • மகாவாதம் ,
  • சந்நிபாதம் ,
  • எலிவிஷம் ,
  • குளிர்சுரம் முதலியவை நீங்கும் .

வெள்ளிலோத்திரம்.(மூலிகை எண்.793.).





  • வெள்ளிலோத்திரத்தினால் விஷ விருட்ஷங்களின் நஞ்சு ,
  • எலும்புருக்கி ,
  • பெருவயிறு ,
  • குரற்கம்மல் ,
  • வியங்க ரோகம் ,
  • உதாவர்த்தம் முதலியவை நீங்கும்.

வெள்ளறுகு.(மூலிகை எண்.792.).


  • வெள்ளறுகினால் குன்மம் ,
  • வாதப்பிணி ,
  • வாதக்குடல் விருத்தி ,
  • கீல்பிடிப்பு ,
  • நரம்புகளை பற்றிய கிரந்தி ,
  • தினவு ,
  • சிறு சிரங்கு முதலியவை போகும்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

வெள்ளரி வித்து.(மூலிகை எண்.791.).


  • வெள்ளரி வித்துக்கு கட்டுகின்ற நீரடைப்பு ,
  • கல்லடைப்பு ,
  • நீர்த்துவார வெடிப்பு ,
  • சதையடைப்பு ,
  • பிரமேகம் ,
  • கிரிச்சரம் முதலியவை நீங்கும்.

வெள்ளரிப்பழம்.(மூலிகை எண்.790.).


  • வெள்ளரிப்பழத்தை உண்ணத்தாகம் அடங்கும்.
  • இது நல்ல பசியையும் ,
  • கபத்தையும் உண்டுபண்ணும்.

வெள்ளரிக்காய்.(மூலிகை எண்.789.).


  • வெள்ளரிக்காயால்  கரப்பான்,
  • நீர்த் துவாரத்தினவு ,
  • நீர்ச்சுருக்கு ,இவற்றை நீக்கும்.
  • ஆகாரத்திற்குப் பின் உண்ண பசிக்கும் .
  • இது மருந்தை முறிக்கும்.

வெள்வேலமரம்.(மூலிகை எண்.788.).


  • வெள்வேல மரத்திற்குப் பித்தமயக்கம்,
  • வாதசுரம் ,
  • இடுப்புவலி ,
  • சர்வாங்கவாதரோகம் நீங்கும்.

வெந்தயம்.(மூலிகை எண்.787.).


  • வெந்தயமானது கணமாந்தம் ,
  • அஷ்திசுரம் ,
  • பிரமேகம் ,
  • சயம் ,
  • சீதக்கழிச்சல் ,
  • பேதி ,
  • ரத்தபித்தம் ,
  • காசம் ,
  • உட்சூடு ,முதலிய பிணிகளை நீக்கும்.
  • நிரந்திரமாகக் சுக்கிலத்தை விளைவிக்கும் .

வெந்தையக்கீரை.(மூலிகை எண்.786.).


  • வெந்தையக்கீரையால் வயிற்றுப்பிசம் ,
  • அக்கினி மந்தம் ,
  • வாதகோபம் ,
  • சிலேத்துமதோஷம் ,
  • காசம் ,
  • அரோசகம் முதலியவை நீங்கும்.

வெண்பயறு.(மூலிகை எண்.785.).


  • வெண்பயற்றால் நித்திரையில் திடீரென எழுப்பும் வாயு ,
  • ஓடியோடிக் கட்டுகின்ற வாதமும் விலகும்.

வெண்டுக்காய்.(மூலிகை எண்.784.).


  • வற்றலுக்குதவியான வெண்டுக்காய்க்குக் கிராணி ,
  • பேதி ,
  • சீதரத்தாதி சாரம் ,
  • சிலேஷ்ம வாதம் ,
  • நாவுக்குரிசை உண்டாம்.

வெண்குன்றி.(மூலிகை எண்.783.).


  • வெண்குன்றி விதை சுக்கிலத்தை விருத்திக்கும்,
  • வெண்குன்றி வேர் தாகத்தை நீக்கும் .,
  • வெண்குன்றி இலை பூத பைசாசங்களை நீக்கும்.

வெண்காலி மரவேர்.(மூலிகை எண்.782.).



  • கசப்புள்ள வெண்காலி மரவேருக்குப் பெருவயிறு ,
  • ஏருபித்தம்,
  • கிருஷ்ண ஜிம்மகதோடம்,
  • கருமேகம் நீங்கும்.

வெட்பாலை யரிசி.(மூலிகை எண்.781.).




  • வெட்பாலை யரிசியால் பித்தவாத தொந்தம் ,
  • கடுவன் ,
  • குடல் சம்பந்தமான ரோகம் ,
  • வயிற்று பொருமல் நீங்கும்.

வெட்பாலை மரம்.(மூலிகை எண்.780.).



  • அக்கினிக் குணத்தையுடைய வெட்பாலை மரமானது வாதவலியையும் ,
  • திரிதோஷ கோபத்தையும் நீக்கும்.

வெட்டிவேர்.(மூலிகை எண்.779.).


  • வெட்டிவேருக்குப் பித்தத்தால் அகாலத்திலுண்டாகிற தாகம்,
  • சோமரோகம் ,
  • காமாலை ,
  • ரத்தபித்தம் ,
  • சுரம் ,
  • பரவுகின்ற குட்டம்,
  • தலைநோய் ,
  • கழுத்துநோய் ,
  • சுக்கிலநஷ்டம் ,
  • உன்மத்தம் ,
  • தீயால் வந்த புண் ,
  • முலைச்சிலந்தி,
  • திரிதோஷம் ,
  • மூர்ச்சை ,
  • நேத்திர ரோகம் .
  • வித்திரிக்கட்டி ,
  • மேகக்கட்டி ஆகியன நீங்கும்.

திங்கள், 19 நவம்பர், 2018

வெட்சிச்செடி.(மூலிகை எண்.778.).


  • பரிமளத்தையுடைய வெட்சிபூவால் மேகச்சூடு ,
  • சுரரோகம் ,
  • தாகம் ,
  • சரீர ஆயாசம் ஆகியன நீங்கும்.

வெங்காயவிதை.(மூலிகை எண்.777.).


  • வெங்காயவிதையை முறைப்படி அவிழ்த முறைகளில் கூட்டி உண்பவர்களுக்கு உட்சூடு ,
  • குன்மம் ,
  • நீரைப்பற்றிய தோஷங்கள் விலகும்.

வெங்காயம்.(மூலிகை எண்.776.).


  • வெங்காயத்தால் தேக உஷ்ணம் ,
  • மூலம் ,
  • சிரங்கு ,
  • ரத்தபித்தரோகம் ,
  • பித்த ஜிக்வாகண்டகம்,
  • தாகம் ,
  • உஷ்ணபேதி நீங்கும் .
  • அக்கினிமந்தம்,
  • சந்நிபாதம் ,
  • இருமல் ,
  • வயிற்றுப்பிசம் விருத்தியாகும். 

வெங்காயப்பூ.(மூலிகை எண்.775.).


  • நாட்டுவெங்காயப்பூவானது சாமான்ய வாத முதலிய மூன்று குன்ம ரோகங்களையும் ,
  • குடலை பற்றிய வாதநோயையும்,போக்கும்.