சனி, 28 மார்ச், 2015

கீழ்வாய்நெல்லி.(மூலிகை எண்:200)



  • கீழ்வாய்நெல்லிக்கு ஆமக்கட்டு,
  • அக்கினி  கீடவிஷம்.
  • நேத்திர ரோகம்,
  • பூத முதலிய சங்கைதோஷம்,, 
  • ரத்தாதிசாரம் .
  • மதுப்பிரமேகமூத்திரம்.
  • காமாலை .
  • சப்த தாதுகதசுரம்   
  • சரும தாது வெப்பம்.
  • நாட்பட்ட மேகப் புண்.

வெள்ளி, 27 மார்ச், 2015

கீரைத்தண்டு.(மூலிகை எண்:199.)



  • கீரைத்தண்டால் பித்தக் கிரிச்சரம்.
  • பிரமேகச் சூடு 
  • வயிற்று கடுப்பு 
  • இரத்த பேதி  முதலிய நோய்கள் போகும்.
வெண்கீரைத்தண்டு, செங்கீரைத்தண்டு முதலிய இரு வகைகள் உள்ளன.  

வெண்கீரைத்தண்டு, :
  • நோயற்றற நல்ல வெண்கீரைத்தண்டினால்,வெப்பமும்,
  • வெளி மூல ரோகமும்.
  • பித்த எரிச்சலும் நீங்கும்.
செங்கீரைத்தண்டு:

  • பெருங்கறியாகிய செங்கீரைத் தண்டு தீராத பித்த நோய்யையும்,
  • பெரும்பாட்டையும்.
  • தேக வெப்பத்தையும் நீக்கும்.

கீரிப் பூண்டு.(மூலிகை எண்:198.)



  • கீரிப் பூண்டால் பாம்பின் விஷம் நீங்கும்.
  • பேதியாகும்.
  • பலம் கொடுக்கும்.
  • உறக்கத்தை உண்டாக்கும்.

கிளியூரம்பட்டை(மூலிகை எண்:197.)


  •  கிளியூரம்பட்டையால் சுர ரோகம்,
  • தேக கொதிப்பும் நீங்கும்.
  • பரிமள வர்க்கங்களில் சேர்த்து உபயோகப்படும்.
  • கூந்தல் தைலங்களில் சேர்க்க வாசனை உண்டாக்கும்.

கிரந்தி நாயகம்.(மூலிகை எண்:196.)



  •  கிரந்தி நாயகத்தால் சீதளம்.
  • சர்ப்ப விஷம் 
  • கண்நோய் 
  • பைசாசம் சங்கை தோஷம் 
  • விரணம் 
  • சிரங்கு முதலியவை நீங்கும்.

கிரந்தி தகரம்.(மூலிகை எண்:195)


  • கிரந்தி தகரத்தால் பயித்திய ரோகம் .
  • சுவாச ரோகம்.
  • வட்ட வட்டமாக எழும் படைகள்,புண்கள் ஒழியும்.

கிட்டி கிழங்கு.(மூலிகை எண்:194.)





  • கிட்டி கிழங்கால் நாட்பட்ட பிரமேகம் போகும்.
  • கப நோய்களும் போகும்.
  • மிகு பசியும் பித்தசாந்தியும் உண்டாகும் என்க.

ஞாயிறு, 22 மார்ச், 2015

கிச்சிலி க் கிழங்கு (பூலா,பூலாங்கிழங்கு,கச்சோலம்,கச்சோரம்,கர்ச்சூரம்)(மூலிகை எண்:193.)






  • கிச்சிலி க் கிழங்குக்கு சிலேத்தும நோயும்,கீழ் பிடிப்பும்,
  • விரணமும் நீங்கும்.
  • கை கால் கீல்களில் முடக்கு,
  • வாய் நாற்றம்,
  • ஈரல் நோய்கள்,
  • இருமல், 
  • குன்மம்,
  • காமாலை முதலிய நோய்களை நீக்கும்.

கிச்சிலிக்காய் (கொழுஞ்சிப் பழம்,போஜன கஸ்துரி,)(மூலிகை எண்:192.)




  • கிச்சிலிக்காயால் வாந்தி,
  • மயக்கம்,
  • வயிற்றிலுள்ள கிருமிகள் முதலியவைகள் போகும்.
குறிப்பு :
கடார நாரத்தை,துருஞ்சி நாரத்தை ,பப்பிளி மாசு,கமலா,சாத்துக்குடி என பிரிவுகளும் உண்டு.

கானாம் வாழை.(மூலிகை எண்:191.)






  • கானாம் வாழைக்கு ஸ்தன விருத்திரிதி,
  • வெப்பசுரம்,
  • இரத்த பேதி இவை நீங்கும்.
  • சுக்கில விருத்தியாகும்,
  • கப பெருக்கம் உண்டாகும்.

காறும் கருணைக் கிழங்கு.(மூலிகை எண்:190.)








  • காறும் கருணைக் கிழங்கால் கரப்பான், 
  • பொடி ச் சிரங்கு,
  • சொறி, 
  • உட்கிரந்தி ,
  • மந்தக்கினி, 
  • கபக்கோழை ,
  • நமைச்சல் ஆகியவற்றை உண்டாகும்.
  • மூல ரோகத்தை நீக்கும்.

காறாக் கருணைக் கிழங்கு (மூலிகை எண்:189.)



  • சிலேத்தும ரோகம்,
  • வாத நோய்,
  • ரத்த மூலவளை,
  • அக்கினி மந்தம் இவைகள் நீங்கும்.
  •  மிகுந்த பசி யுண்டாகும்.

காவட்டம்புல் (மூலிகை எண்:188.)



  • காவட்டம்புல்லால் பேதி ,
  • வயிற்று உப்பிசம்,
  • குழந்தைகளுக்கு  காணும் மாந்தம்,
  • உள் சுரம் ,
  • கப மிகுதி முதலியவை நீங்கும்.
  • காவட்டம்புல்லெண்ணெயால் மாந்தம் ,அஜீரணக் கழிச்சல்,இருமல்,சுரம் இவைகள் போகும்.

கார்போக அரிசி (மூலிகை எண்:187.)



  • கார்போக அரிசியினால் கடுவன்,
  • விரணம்,
  • பயங்கரமான சர்ப்ப விஷம்,
  • தாவர விஷங்கள், 
  • வாத சிலேத்தும தொந்தம்,
  • தினவு,
  • யானை சொறி,
  • கிரந்தி ஆகியன நீங்கும்.
  • பித்தம் அதிகரிக்கும் என்பர்.

காரைப் பழம் (மூலிகை எண்:186.)










  • காரைப் பழத்தால் சீதரத்தக்கடுப்பும்,அதிசார பேதியும் போம்.
  • இப் பழத்தை தினம் ஒருவேளை அல்லது இருவேளை காலை ,மாலை சாப்பிட்டு வர சரீரம் குளிர்ச்சி பெறும்.
  • இதற்கு துவர்ப்பு குணமுண்டு.இந்த பழமானது குடலிற்கும்,இரைப்பைக்கும் வலுவைக் கொடுப்பதுடன் உள் வெப்பத்தை யாற்றித் தாது விருத்தியைச் செய்யும்.
  • காரை இலைக்குத் தக்கவாறு புளியைச் சிறிது அதிகமாகக்  கூட்டிக் கறி சமைத்து உண்பதினால் கடுப்பும்,ரத்தம் விழுதலும் குணமாகும். 

காய் வள்ளி கிழங்கு.(மூலிகை எண்:185.)




  •   காய் வள்ளி கிழங்கு வாத ரோகத்தையும் சருமத்தின் மீது பெரிய,சிறிய,விரணங்களையும் உண்டாக்கும்.
  •  உஷ்ணத்தை தணிக்கும்.

காய்ச்சுக் கட்டி (மூலிகை எண்:184.)




  • காய்ச்சுக் கட்டியினால் பற்கள் இறுகும்.
  • விரணங்களுக்கு இதைப் போட்டுவர ஆறும் .
  • இதை உட்கொண்டால் மலத்திலுள்ள கருப்புநிறமான கிருமிகள் ஒழியும்.

காப்பிக் கொட்டை(மூலிகை எண்:183.)







  • காப்பிக் கொட்டை முதலில் உற்சாகம்,தேக வலுவு,பித்தம்,இவற்றை உண்டாக்கும்.
  • சிறுது பழக்கபடின் பசிதீபனத்தை நாளுக்கு நாள் குறைத்து தேஜசை மாறுபடச் செய்யும் .
  • இது பேதி,நீர்க்கட்டு,காசம் ,சுரம் ,முதலிய ரோகங்களை கண்டவர்களுக்கு அதிக நன்மையுண்டாக்கும்.

காட்டு முருங்கை.(மூலிகை எண்:182.)



  • கைப்புள்ள காட்டு முருங்கை வேர் மகா விஷத்தை நீக்கும்.
  • காட்டு முருங்கை பூ கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.
  • இலை ,காய் ,பிசின், பிஞ்சு இவைகள் சிலேத்தும ரோகங்களை நிவர்த்தி செய்யும் .

வெள்ளி, 20 மார்ச், 2015

காட்டு மிளகு.(மூலிகை எண்:181.)



  •  காட்டு மிளகினால் பித்தமும் பசியும் அதிகரிக்கும்.
  • கப ரோகத்தை கண்டிக்கும்.
  • கர்பத்தை கெடுக்கும்.