- இஸ்போகல் வித்தால் மலபந்தம்,சீத பேதி,வெள்ளை,வயிற்று வலி ,உஷ்ண இருமல்,நீர்க்கட்டு,முதலியவை குணமாகும்.
திங்கள், 16 செப்டம்பர், 2013
70.இஸ்போகல் வித்து
69.இன்புறா
- இன்புறா வேருக்கு கப ஆதிக்கம்,பித்த கோபம்,காசம்,ஈளை,பித்த சுரம்,வயிற்று இரைச்சல் விக்கல் இவைகள் நீங்கும்.
- இருமலுக்கு சஞ்சீவி மூலிகை இதுவாகும்.
68.இளநீர்
- இளநீரை முறையாக பருகினால் வாதகோபம்,பித்த தோஷம்,வெப்பம்,தேக பாரிப்பு,கபாதிக்கம்,பையித்திய கோபம்,வமனம்,அதிசாரம்,ஆகியவை நீங்கும்.
- மனத்தெளிவு,பார்வைத் தெளிவு,குளிர்ச்சி,மூத்திரப்பெருக்கம்,மலப்போக்கு,ஆகியவை உண்டாகும்.இது உஷ்ண சீதளத்தை உடையது.
- குறிப்பு :
- வழுக்கையாக உள்ள புதிய இளநீரை அருந்த பித்த பிர கோபம் தீரும்.
- பழைய இளநீராக இருப்பின் சலதோசத்தையும்,சீதள சம்பந்தமான பல ரோகங்களை உண்டாக்கும்.
- காலை சாப்பாடுக்க்கு முன் இளநீரை உண்டால் பசி தீபனத்தை குறைக்கும்.இப்படி பல நாட்கள் குடித்து வந்தால் வயறு நோயை உண்டாக்கும்.
- சாப்பிட்டபின் குடித்தால் வாத பித்த கோபம் தணியும்,தனி பித்த தோஷம் தணியும்.
- மாலையில் குடித்தால் எரி கிருமிகள் ஒழியும்.
- இன்னும் இதனால் நல்ல தேஜசும்,பசி தீபனம் உண்டாகும்.மலம் கிரமமாக போகும்.
67.இளங்கொட்டைபாக்கு
- இளங் கொட்டைபாக்கை திண்பவர்க்கு அப்போது மட்டும் தொண்டைக்குள் கோழையடைக்கும்.வாதத்தையும்,நீங்காத கபத்தையும் விலக்கும்.
- அருசி போக்கும்,பசி விலகாது.
66.இலைக்கள்ளி
- இலைக்கள்ளியால் காதுவலி,பாலுண்ணி,மறுவு,விஷ பூச்சிகளின் விஷம்,சுவாச காசம்,ஈளை,சொறி,சிரங்கு,முதலியவை நீங்கும்.
- இலைக் கள்ளிப்பால்,செங்கரப்பான்,கர்ண சூலை ,வாத விகாரம்,சூலை,விசர்ப்பிக் கிரந்தி,உள் விரணம்,இவற்றை நீக்கும்.
65.இலுப்பை
- இலுப்பை நெய்யால் கரப்பான்,கடிவிஷம்,சிரங்கு,விரணம்,வன்மை,பொருந்திய இடுப்பு வலி,இவைகள் போகும்.இன்னும் நரம்புகளுக்கு வலிமை கொடுக்கும்.
- இலுப்பை பிண்ணாக்கால் கடுவன்,விரணம்,கரப்பான் பீஜ வீக்கம்,திரிதோஷம்,எண்ணை சிக்கு இவைகள் போகும்.
- இலுப்பை பூவால் பித்த சுரமும்,தாகரோகமும் நீங்கும்,இதனால் அதி பித்தமும்,பிரமையும் உண்டாக்கும்.
- பார்வைக்கு அழகாக இருக்கும் இலுப்பை வித்தினால் அந்தர வாய்வு போகும்.இன்னும் மந்திரமில்லாமலே இந்த வித்தின் உபயோகத்தால் பல பூச்சிக்கடி விஷங்கள் நீங்கும்.
- துவர்பாகிய இலுப்பை வேரால் விரணம்,புரை,வயிற்றுக்கடுப்பு,அதிமூத்திரம்,இரத்த கிராணி,அக்னி மந்தம்,அருசி,வாத சூலை,சகல சுரம், விந்து நஷ்டம், தாகம் தேக அயர்வு,நீங்கும்.தலைரோமங்களுக்கு ஆகாது ,உஷ்ணகாரி ஆகும்.
செவ்வாய், 10 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)