திங்கள், 16 செப்டம்பர், 2013

68.இளநீர்








  • இளநீரை முறையாக பருகினால் வாதகோபம்,பித்த தோஷம்,வெப்பம்,தேக பாரிப்பு,கபாதிக்கம்,பையித்திய கோபம்,வமனம்,அதிசாரம்,ஆகியவை நீங்கும்.
  • மனத்தெளிவு,பார்வைத் தெளிவு,குளிர்ச்சி,மூத்திரப்பெருக்கம்,மலப்போக்கு,ஆகியவை உண்டாகும்.இது உஷ்ண சீதளத்தை உடையது.
  • குறிப்பு :

  • வழுக்கையாக உள்ள புதிய இளநீரை அருந்த பித்த பிர கோபம்  தீரும்.
  • பழைய இளநீராக இருப்பின் சலதோசத்தையும்,சீதள சம்பந்தமான பல ரோகங்களை உண்டாக்கும்.
  • காலை சாப்பாடுக்க்கு முன் இளநீரை உண்டால் பசி தீபனத்தை குறைக்கும்.இப்படி பல நாட்கள் குடித்து வந்தால் வயறு நோயை உண்டாக்கும்.
  • சாப்பிட்டபின் குடித்தால் வாத பித்த கோபம் தணியும்,தனி பித்த தோஷம் தணியும்.
  • மாலையில் குடித்தால் எரி கிருமிகள் ஒழியும்.
  • இன்னும் இதனால் நல்ல தேஜசும்,பசி தீபனம் உண்டாகும்.மலம் கிரமமாக போகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக