- வேர்க்கடலையால் ரத்தமூலம் போகும்.,
- தாதுபுஷ்டி உண்டாகும்.,
- தேகம் பெருக்கும் ,
- பித்தவாயுவை உண்டாக்கும்.
- வேப்பம் இலையால் மாந்தம் ,
- பொருமல் ,
- பேதி ,
- கிராணி ,
- கீல்களில் வீக்கம் ,
- வயிற்றிலுண்டான கிருமிகள் ஒழியும்.
- வேப்பம் வித்தினால் குட்டம் ,
- சர்ப்ப விஷங்கள்,
- சந்நி ,
- சொறி ,
- சிரங்கு ,
- மூலம் ,
- ஏப்பம் ,
- மலத்திலுள்ள கிருமி முதலியவை போகும்.
- நாட்சென்ற வேப்பம்பூவுக்குச் சந்நி ,
- மூர்ச்சை ,
- ஜிம்மக தோசம் ,
- வாந்தி ,
- அரோசிகம் ,
- நீடித்தவாதம் ,
- ஏப்பம் ,
- மலக்கிருமி போகும் .
- வேப்பம் பிண்ணாக்கினால் சந்நிபாதம் ,
- வாத சிரஸ்தாபம் ,
- வாதரோகம் ,
- திரிதோஷம் ,
- கபாதிக்கம் போகும்.
- வேப்பமரத்திற்கு (பட்டைக்கு )ரூட்சை ,
- வாதகோபம் ,
- மூலக்கணமாந்தம் ,
- எரிகிருமி ,
- வயிற்றுநோய் ,
- சிதறுகின்ற மலப்பேதி நீங்கும்.
- வேப்பஎண்ணெய் என்கிற வேப்பநெய்க்கு மகாவாதரோகம் ,
- கிரந்தி ,
- கரப்பான் ,
- சிரங்கு ,
- ஆகிர்ஷ்ணஸ்தம்பன வாதம் ,
- சுரம் ,
- சந்நி நீங்கும்.
- பித்தம் கூடும் .
வேப்பநெய்யால் தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவர ,
- சந்நி ,
- கழுத்துநரம்பு இசிவு ,
- நீர்ப்பீனிசம் ,
- வாதரோகங்கள் போகும் .,
- மற்றும் ஆறாத ரணங்களும் ஆறும் .
- வேங்கைமரத்தால் பொடிஇருமல் ,
- வெள்ளைவீழல் ,
- உள்மாந்தை ,
- விரணம் ,
- காசம் ,
- சீழ்ப்பிரமேகம் ,முதலியவை நீங்கும்.
- கண்ணுக்கு ஒளி உண்டாகும்.
- மலவிரேசனம் உண்டாகும்.
- காரமுள்ள வெற்றிலையின் ரசத்தை பருகில் கபம் ,
- சீதளம் ,
- காணாக்கடியின் துர்க்குணம் ,
- திரிதோஷ கோபம் ,இவைகள் போகும்.
- வெள்ளை மிளகுகினால் கிராணி ,
- சிலேத்துமவாதம் ,
- ரூட்சை ,
- சீழ்ப்பிரமேகம் இவைகள் நீங்கும்.
- ஜடராக்கினி அதிகரிக்கும்.
- வெள்ளைப்பூண்டால் சந்நி,
- வாதரோகம்,
- தலைவலி ,
- நீர்க்கோவை,
- மூலரோகம் ,
- சீதபேதி ,
- வாய்ப்பூட்டு ரோகம் ,
- அரசம் முதலியன நீங்கும்.
- வெள்ளை நாவற்பழத்தால் ரத்ததாதுவும் ,
- சுக்கிலத்தாதுவும் பெருகும் .
- உள்வெப்பத்தை நீக்கும்.
- சாதாரண நாவல் பழத்தை விட வெள்ளை நாவல் பழத்திற்கே குணமதிகம்.
- வெள்ளைத் தாமரைப்பூவால் ஈரலில் அதிகரிக்கின்ற உஷ்ணமும் ,
- வெப்பமுள்ள மருந்துகளால் உண்டான வீறும்,
- உட்சூடும் நீங்கும்.
- வெள்ளைச்சாறடைக் கிழங்கால் சீதளம் ,
- நீரேற்றம் ,
- தேமல் ,
- தடிப்பு ,
- குன்மம் ,
- வாதவலி ,
- சிறு சிரங்கு ,
- பிரமேகம் ,
- இருமல் ,ஆகியன போகும்.
- விருச்சிகம் என்கிற வெள்ளைச் சாறடையால் வித்திரிதிக்கட்டி ,
- மூலவாயு,
- கண்படல ரோகம் ,
- நெஞ்சுநோய் ,
- சுவாசரோகம் ,
- கர்ப்பத்தை சின்னப்படுத்துகிற சூதிகாவாதம் போகும்.
- வெள்ளை அல்லிவித்து ஈரல் ,பீலிகம் இவற்றிற்கு பலம் கொடுக்கும்.
- மதுமேகத்தை நீக்கும்.
- வெள்ளை எருக்கம் பாலால் ஐவகை வலியின் வன்மை ,
- சுளுக்கு ,
- மகாவாதம் ,
- சந்நிபாதம் ,
- எலிவிஷம் ,
- குளிர்சுரம் முதலியவை நீங்கும் .
- வெள்ளிலோத்திரத்தினால் விஷ விருட்ஷங்களின் நஞ்சு ,
- எலும்புருக்கி ,
- பெருவயிறு ,
- குரற்கம்மல் ,
- வியங்க ரோகம் ,
- உதாவர்த்தம் முதலியவை நீங்கும்.
- வெள்ளறுகினால் குன்மம் ,
- வாதப்பிணி ,
- வாதக்குடல் விருத்தி ,
- கீல்பிடிப்பு ,
- நரம்புகளை பற்றிய கிரந்தி ,
- தினவு ,
- சிறு சிரங்கு முதலியவை போகும்.
- வெள்ளரி வித்துக்கு கட்டுகின்ற நீரடைப்பு ,
- கல்லடைப்பு ,
- நீர்த்துவார வெடிப்பு ,
- சதையடைப்பு ,
- பிரமேகம் ,
- கிரிச்சரம் முதலியவை நீங்கும்.
- வெள்ளரிப்பழத்தை உண்ணத்தாகம் அடங்கும்.
- இது நல்ல பசியையும் ,
- கபத்தையும் உண்டுபண்ணும்.
- வெள்ளரிக்காயால் கரப்பான்,
- நீர்த் துவாரத்தினவு ,
- நீர்ச்சுருக்கு ,இவற்றை நீக்கும்.
- ஆகாரத்திற்குப் பின் உண்ண பசிக்கும் .
- இது மருந்தை முறிக்கும்.
- வெள்வேல மரத்திற்குப் பித்தமயக்கம்,
- வாதசுரம் ,
- இடுப்புவலி ,
- சர்வாங்கவாதரோகம் நீங்கும்.
- வெந்தயமானது கணமாந்தம் ,
- அஷ்திசுரம் ,
- பிரமேகம் ,
- சயம் ,
- சீதக்கழிச்சல் ,
- பேதி ,
- ரத்தபித்தம் ,
- காசம் ,
- உட்சூடு ,முதலிய பிணிகளை நீக்கும்.
- நிரந்திரமாகக் சுக்கிலத்தை விளைவிக்கும் .
- வெந்தையக்கீரையால் வயிற்றுப்பிசம் ,
- அக்கினி மந்தம் ,
- வாதகோபம் ,
- சிலேத்துமதோஷம் ,
- காசம் ,
- அரோசகம் முதலியவை நீங்கும்.
- வெண்பயற்றால் நித்திரையில் திடீரென எழுப்பும் வாயு ,
- ஓடியோடிக் கட்டுகின்ற வாதமும் விலகும்.
- வற்றலுக்குதவியான வெண்டுக்காய்க்குக் கிராணி ,
- பேதி ,
- சீதரத்தாதி சாரம் ,
- சிலேஷ்ம வாதம் ,
- நாவுக்குரிசை உண்டாம்.
- வெண்குன்றி விதை சுக்கிலத்தை விருத்திக்கும்,
- வெண்குன்றி வேர் தாகத்தை நீக்கும் .,
- வெண்குன்றி இலை பூத பைசாசங்களை நீக்கும்.
- கசப்புள்ள வெண்காலி மரவேருக்குப் பெருவயிறு ,
- ஏருபித்தம்,
- கிருஷ்ண ஜிம்மகதோடம்,
- கருமேகம் நீங்கும்.
- வெட்பாலை யரிசியால் பித்தவாத தொந்தம் ,
- கடுவன் ,
- குடல் சம்பந்தமான ரோகம் ,
- வயிற்று பொருமல் நீங்கும்.