புதன், 14 நவம்பர், 2018

வாழைநீர்.(மூலிகை எண்.743.).


  • வாழைக்கிழங்கு குழிநீர் சீதோஷ்ண நீராகும் இதனால் பெருவயிறு ,
  • ரத்தக்கிரிச்சரம்,
  • எரிமூத்திரம் ,
  • அற்ப விரணம் ,
  • சோமரோகம் ,
  • அயர்வு ,
  • உழலை நோய் ,
  • பாண்டு ,
  • அஸ்தி சிராவம் ,ஆகியன நீங்கும்.
  • தேகத்திற்கு வன்மையை உண்டாக்கும்.
  • குறிப்பு :
  • வாழை மரம் வெட்டிய பின்னர் அதன் தண்டும் ,அதன்கீழுள்ள கிழங்கும் சேரும் இடத்தை நடுவே குழம்பு கரண்டியால் குடைந்து குழிசெய்து  விட்டு மறுநாள் சென்று பார்க்க குழி நிரம்ப தண்ணீர் நிறைந்து இருக்கும் இதுவே வாழைநீர்.இதற்கே மேற்சொன்னவை பொருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக