ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

நல்வேளை வித்து.(மூலிகை எண்.440.)


  • நல்வேளை வித்தினால் வயிற்றுவலி ,
  • வயிற்று பொருமலுடன் இரைச்சல் ,
  • வயிற்றிலுண்டான கிருமி சேர்க்கை முதலியன நீங்கும் .

நல்வேளைப்பூ.(மூலிகை எண்.439.)


  • நல்வேளைப்பூவினால் மாந்தகணம் ,
  • வாதகோபம் ,
  • ஜலதோஷம் ,
  • மார்புச்சளி ,
  • மாந்தசுரம் முதலியவை நீங்கும் .
  • தீபனம் உண்டாகும் .

நல்வேளை.(மூலிகை எண்.438.)


  • நல்வேளையினால் சிரஸ்தபாரோகம் ,.
  • சரீர நோவு ,
  • குடைச்சல் ,
  • சீதளம் ,
  • மார்புவலி ,
  • வாததோஷம் ,
  • கபகோபம் ,
  • வீக்கம் ,முதலியவை போகும் ,
  • பசியும் ,
  • சூடும் ,
  • பித்தாதிக்கமும்,
  • ஜிக்வாகண்டக ரோகமும் உண்டாகும் . 

நல்லவெல்லம்.(மூலிகை எண்.437.)


  • நல்லவெல்லம் பித்த குன்மத்தை நீக்கும்.
  • நெஞ்சிற் கபக்கட்டு ,
  • மலாசயக்கிருமி ,
  • மதுமேகம் முதலியவற்றை உண்டாக்கும் .

நல்லநெருஞ்சில் வித்து.(மூலிகை எண்.436.)


  • நல்லநெருஞ்சில் வித்துக்கு மூத்திரக்கட்டு ,
  • சதையடைப்பு ,
  • கல்லடைப்பு ,
  • மேக அனல் ,
  • நீர்க்கட்டு,
  • இணைவிழைச்சில் புத்தி அதிகமாக செல்லும்.

நல்ல நெருஞ்சில்.(மூலிகை எண்.435.)


  • நல்ல நெருஞ்சிலால் சொட்டு மூத்திரம் ,
  • சுர வெப்பம் ,
  • அஸ்மரிரோகம்,
  • நீரடைப்பு ,
  • முடவாதம் ,
  • பிரமேகவெள்ளை ,
  • மூத்திரகிரிச்சரம் ,
  • திரிதோஷகோபம் ,
  • விரணம் ,
  • சுரதாகம்,
  • உஷ்ணம் இவற்றை நீக்கும். 

நந்தியாவட்டைப்பூ.(மூலிகை எண்.434.)


  • நந்தியாவட்டைப்பூவானது நேத்திரகாசம்,
  • கண் படலம், 
  • லிங்கநாச தோஷங்கள்,
  • சிரஸ்தாபரோகம் ,ஆகியவற்றை விலக்கும் .

நத்தைச்சூரி(குழிமீட்டான்).(மூலிகை எண்.433.)


  • நத்தைச்சூரி(குழிமீட்டான்) பூண்டால் தேகத்திலுள்ள பல பிணிகள் நீங்கும் .
  • கண மந்ததையும்,
  • உள்வெப்பத்தையும் போக்கும் .
  • முலைப்பாலைச் சுரக்கும்படிச் செய்யும் .
  • வித்தினால் உஷ்ணபேதி,
  • சீதபேதி நீங்கும் .

நஞ்சறுப்பான்பூண்டு.(மூலிகை எண்.432.)


  • நஞ்சறுப்பான்பூண்டினால் கீடசர்ப்ப தீண்டலாலும் ,
  • தானே நுகரலாலும் ,
  • இடுமருந்துக்களினாலும் ,
  • பாஷாணங்களினாலும் ,
  • வியாபித்த விஷம் தீரும் .

தொட்டாற்சுருங்கி.(மூலிகை எண்.431.)


  • தொட்டாற்சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும் .
  • பெண்வசியம் செய்யும் ,
  • உடலில் ஓடிக் கட்டுகின்ற வாதத் தடிப்பைக்கரைக்கும் .

தேற்றான்பழம்.(மூலிகை எண்.430.)


  • தேற்றான்பழத்தால் வாத இருமல் ,
  • இரைப்பு ,
  • மலக்கட்டு ,
  • திரிதோஷரோகங்கள் ,ஆகியன போகும் .
  • வாந்தி உண்டாகும்.

தேற்றாங்கொட்டை.(மூலிகை எண்.429.)


  • தேற்றாங் கொட்டைக்கு பிரமேகம் ,
  • வெட்டை ,
  • உட்சுடு ,
  • ஜடராக்கினி ,
  • வயிற்றுக்கடுப்பு ,
  • எரிகின்ற மூத்திரக்கிரிச்சரம்,
  • உள் விரணம் நீங்கும் ,
  • மாந்தம் உண்டாகும்.
  • அது கண்களுக்கு மருந்தாகும் .

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தேவதாரு.(மூலிகை எண்.428.)



  • தேவதாருக்கட்டையால் நாசிகாரோகம் ,
  • புராண சுரம்,
  • ஜலதோஷம்,
  • சரீர வெப்பம் ஆகியவற்றை நீக்கும் .

தேயிலை.(மூலிகை எண்.427.)


  • உலர்ந்த தேயிலை மனதிற்கு உற்சாகம்,
  • நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்,
  • ஆனால் நித்திரை பங்கம் உண்டாக்கும் ,
  • நீடித்து உபயோகப்படுத்துகின்றவர்களுக்குக் குன்மமும்,பித்தமும் உண்டாகும் .

தேட்கொடுக்குச்செடி.(மூலிகை எண்.426.)


  • தேட்கொடுக்குச்செடியால் நமைச்சல் ,
  • பழைய விரணம் ,
  • கடுவன் ,
  • கணமாந்தம் ,
  • அற்ப வீரிய விஷம்,ஆகியன விலகும் .

தென்னம் பிண்ணாக்கு.(தேங்காய் பிண்ணாக்கு)(மூலிகை எண்.425.)


  • தென்னம் பிண்ணாக்கால்,.(தேங்காய் பிண்ணாக்கு)நமைச்சல்,
  • சிரங்கு ,
  • விரணம் ,
  • நீங்காத கரப்பான் ,
  • மறு ,
  • மலாசயக்கிருமிகள்,முதலியன உண்டாகும்.

தென்னம் பால்.(தேங்காய்ப்பால்).(மூலிகை எண்.424.)


  • தென்னம் பால்.(தேங்காய்ப்பால்) ஆல் மிகுமதுரத்துடன் உணவை உட்கொள்ளச்செய்யும் ,
  • வாத விகாரத்தையும்,
  • பித்தவாதிக்கத்தையும் ,
  • கரப்பானையும் ,
  • சுக்கில விருத்தியும் உண்டாக்கும்.

தென்னம் நெய்(தேங்காய் எண்ணெய் ).(மூலிகை எண்.423.)


  • தென்னம் நெய்யால்,(தேங்காய் எண்ணெய் ) சத்தியோவிரணம்,
  • தந்தமூலரோகம்,
  • படர்தாமரை ,
  • சிரங்கு ,ஆகியன போகும் .
  • மயிர் வளரும்.

தென்னம் பூ.(மூலிகை எண்.422.)


  • தென்னம் இளம்பாளைப்பூவால் பிரமேகம்,
  • உட்காய்ச்சல் ,
  • ரத்தபித்தம் ,
  • அசிர்க்கரம் ,
  • ஒழுக்கு பிரமியம்,
  • விஷபாக நோய்கள் இவைகள் நீங்கும் .

தெங்கின் வெல்லம்.(மூலிகை எண்.421.)


  • தெங்கின் வெல்லத்தால் வீக்கம் ,
  • தேக காந்தல் ,
  • நீரேற்றம் ,
  • அஜீரணம் ,
  • நித்திரையின்மை இவற்றை உண்டாக்கும்  
  • இதை உபயோகப்படுத்தாமலிருப்பதே உத்தமம் .

தெங்கின் மது.(மூலிகை எண்.420.)


  • தெங்கின் மது என்னும் தென்னங்களினால் ஆணுக்கு சுக்கிலமும்,பெண்ணுக்கு சோணிதமும் பெருகும்,
  • பாண்டுரோகமும் ,
  • வீக்கமும் ,
  • வாதபித்த தொந்தமும் ,
  • ரத்த கழிச்சலும்,
  • கரப்பானும் ,
  • அதிசாரமும் ,
  • பிரமேகமும்  உண்டாக்கும் ,
  • அறிவும் கெடும்.

தெங்கின் குருத்து.(மூலிகை எண்.419.)


  • தெங்கின் குருத்து,(தென்னங்குருத்து )ரத்த மூலம் ,
  • கணச்சூடு ,
  • பெரும்பாடு நீங்கும் .

தெங்கின் கற்கண்டு.(மூலிகை எண்.418.)


  • தெங்கின் கற்கண்டினால் தொண்டைக்குள் திமிர் ,
  • உதிரத்திலழுக்கு ,
  • சொறி ,
  • மேகம் ,
  • சிலேஷ்ம வாததொந்தம் ,
  • வாதகோபம் ,
  • தளர்ந்த தேகிகளுக்கு ஆயாசம் ,
  • மந்தபுத்தி முதலியவற்றை உண்டாகும்.

ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

தூதுளையிலை.(மூலிகை எண்.417.)


  • தூதுளையிலையால் பாதிரியவாதம் ,
  • சிலேத்தும கர்ணசூலை ,
  • இருமல் ,
  • நமைச்சல் ,
  • மதரோகம் ,
  • அக்கினிமந்தம் ,
  • திரிதோஷம் ,
  • உட்குத்தல் ,
  • விந்துநஷ்டம் ,
  • மேலுளைப்பு ஆகியன நீங்கும்.

தூதுளம்பூ.(மூலிகை எண்.416.)


  • தூதுளம்பூவால் தேகபுஷ்டி ,
  • சுக்கிலத்தாது விருத்தி ,
  • வனப்பு ,
  • சரீர பலம் ,
  • ஸ்ரீவசியம் முதலியவை உண்டாகும் .

தூதுளம்பழம்.(மூலிகை எண்.415.).


  • தூதுளம்பழத்தினால் இறுகிய மார்பு சளி ,
  • க்ஷயம் ,
  • வாத,பித்த ,கப தோஷங்கள்,
  • ஜலதோஷம் ,
  • சர்ப்பவிஷம்  முதலியவை நீங்கும் .

தூதுளங்காய்.(மூலிகை எண்.414.)

  • தூதுளங்காயால் கபரோகங்கள் ,
  • பித்த தோஷங்கள் ,
  • அருசி ,
  • ரக்தசயவாயு,
  • ஆந்திர பித்த வாதம் ,மற்றும் 
  • மலபந்தம் விலகும் .

நாய்த்துளசி.(மூலிகை எண்.413.)


  • நாய்த்துளசி என்னும் கஞ்சாங்கோரையால் மாந்தபேதி ,
  • அக்கினிமந்தம்,
  • சுரம் ,
  • கணச்சூடு,
  • ஆசன நமைச்சல் ,
  • பிரமேகம் ,
  • காசம் ,
  • கோழை ,
  • பொடிஇருமல் ,முதலியவற்றை போக்கும் ,
  • சரீரத்தை  போஷிக்கும்.  

முள்துளசி.(மூலிகை எண்.412.)


  • முள்துளசியால் எலிவிஷம் ,
  • வெட்டுப்புண் ,
  • அற்ப விஷம் போகும்.

கல்துளசி.(மூலிகை எண்.411.)


  • கல்துளசியால் தீச்சுரம் ,
  • வித்திரிக்கட்டி ,
  • நீர்வண்டு முதலிய சில விஷக்கடிகள் ,
  • கோழையைத் தள்ளுகின்ற கபகாசம் போகும் .

நிலத்துளசி.(மூலிகை எண்.410.)


  • நிலத்துளசி முலைப்பாலால் வரும் மாந்தம் ,
  • வாதசுரம் ,
  • பலவித பித்தநோய்கள் ,
  • கணச்சூடு,
  • மந்தம் ,
  • பித்தரூட்சம்,
  • குளிர் சுரம் இவற்றை நீக்கும் .

செந்துளசி.(மூலிகை எண்.409.)


  • செந்துளசியால்,(சிவப்புத் துளசி)நஞ்சு ,
  • கபாதிக்கம் ,
  • அக்கினிகீடவிஷம்,
  • திரிதோஷத்தால் சனிக்கின்ற பற்பல ரோகங்களை விலக்கும். 

கருந்துளசி.(மூலிகை எண்.408.)


  • கருந்துளசியினால் காசம் ,
  • தொண்டைக்குள் குறுகுறு என்னும் ஒரு சத்தம்,
  • இரைப்பு ,
  • கிருமி ,
  • நீர்க்கோவை ,
  • இருமல் வரும் கேவல் ,
  • மார்புசளி  ,
  • சுரம் ,
  • குத்தல் ,
  • விஷம்,
  • சந்நிபாதம் ஆகியன நீங்கும்.

துளசிவித்து.(மூலிகை எண்.407.)


  • துளசிவித்தால் நீர் எரிச்சல் ,
  • சீதபேதி ,
  • உட்காங்கை முதலியவை போகும்.

துளசி.(மூலிகை எண்.406.)

  • கார்ப்பும் ,வெப்பமும் உள்ள துளசியினால் கபதோஷம் ,
  • வயிறுளைதல் ,
  • அஸ்திதாதுகதசுரம் ,
  • தாகம்,
  • மாந்தசுரம்,
  • அருசி இவைகள் போகும் .

துவரை.(மூலிகை எண்.405.)

  • நறுந்துவரை,லங்கண முடிவிற் சேர்க்கிற பஞ்சமுடித் தாரகபத்தியத்திற்கும்,
  •  சுரத்திற்கும் ,
  • சந்நிக்கும் ,
  • பஞ்சணையே  கிடையாக எழுந்திருக்கச் சக்திஇல்லாமல் மிக மெலிந்தவர்களுக்கும் உதவும்.

துவரம் பருப்பு.(மூலிகை எண்.404.)

  • சீதமுள்ள மலைநாட்டு துவரம்பருப்பை வெந்நீரிலிட்டுச் சமைத்துப் போசன முதலில் பசுவின் நெய்யுடன் அன்னத்திற் கலந்து உண்ணில் ஒரு பிடி அன்னத்திற்கு ஒரு பிடிசதை வளரும்.
  • குறிஞ்சி நில வஸ்துக்கள் மிகு வன்மையுள்ளவையாதலால் அந்நிலத்துத் துவரையேப் பெருமைபடுத்தி கூறலாயினர்.

சனி, 22 செப்டம்பர், 2018

துலுக்கப்பயறு.(மூலிகை எண்.403.)


  • துலுக்கப் பயற்றினால் மிகுதிப்பட்ட பித்தம் அடங்கும் ,
  • இன்னும் வாதத்தோடு சம்பந்தப்பட்ட கபம் நீங்கும் ,
  • தேகம் கொழுமை பெறும்.

துயிலிக்கீரை.(மூலிகை எண்.402.)


  • துயிலிக்கீரைக்கு ஆமமும் ,
  • நமட்டு சிரங்குகளும் ,
  • விரணமும்  உண்டாகும் .
  • பழமலக்கட்டும் ,
  • பிரமேக வெள்ளையும் நீங்கும் .

தும்பையிலை.(மூலிகை எண்.401.)


  • தும்பையிலையால் சர்ப்பகிரீட விஷங்கள் ,
  • வாத நோய்கள் ,
  • தலைவலி ,
  • கபதோஷம் ,
  • அக்கினிமந்தம் ,
  • சிலேத்தும சந்நி ,இவைகள் நீங்கும் ,
  • இதைப்புளியிட்டு கடைந்து உணவோடருந்தில் பிரமேகம் ,
  • நேத்திரப்புகை ,
  • கைகால்களின் அசதி ,
  • தாகம் ,
  • சோம்பல் இவைகள் உண்டாகும் .

தும்பைப்பூ.(மூலிகை எண்.400.).


  • தும்பைப்பூவினால் தாகரோகமும்,
  • சன்னி பாதசுரங்களும்,
  • நேத்திரத்தை பற்றிய தோஷங்களும் நீங்கும். 

துத்திவிதை.(மூலிகை எண்.399.)


  • துத்திவிதையால் கைகால்களில் உண்டாகும் கருமேகமும் ,
  • குஷ்ட ரோகமும் ,
  • உட்சூடும் நீங்கும் .

நிலத்துத்தி(மூலிகை எண்.398.).

  • நிலத்துத்தியால் ஆரம்ப மூல ரோகத்தையும் ,
  • விரித்திக் கட்டிகளையும் ,போக்கும் ,
  • கருவங்கத்தை பஸ்பம் செய்யும்.

சிறுதுத்தி.(மூலிகை எண்.397.)


  • சிறுதுத்தியால் மலபந்தம் போகும் ,
  • கரப்பான் ,
  • அற்ப விஷங்களைவுடைய பூச்சிக்கடி ,
  • நீர்  எரிச்சல்,முதலியன போகும் . 

கருந்துத்தி.(மூலிகை எண்.396.)


  • கருந்துத்தியைப் பாகப்படி உபயோகிக்க  நீர் எரிச்சல் ,
  • முளை மூலம்,
  • புண்கிருமிக்கூட்டம் ,இவைகள் போகும் .

துத்திஇலை(மூலிகை எண்.395.)


  • துத்திஇலையை  ஆமணக்கு நெய்யால் வதக்கி கட்ட மூலரோகமும் ,
  • கட்டிகளும் ,
  • வீரண முளைகளும்,
  • கிருமி விரணங்களும் போகும்,
  • இதை எந்தவகையிலும் பாகம் செய்து  சாப்பிட்டால் சகல ரோகங்களும் போகும் .

துத்திப்பூ.(மூலிகை எண்.394.)


  • துத்திப்பூவால் ரத்த வாந்தியும் ,
  • காசரோகமும் ,நீங்கும் .
  • சுக்கிலவிருத்தியும் ,
  • தேக குளிர்ச்சியும் உண்டாகும் .

துடைப்பம்.(மூலிகை எண்.393.)


  • துடைப்பத்தினால் தேகத்தில் கட்டப்பட்ட சிறுநீர் வெளியாகும்,
  • கபம் நீங்கும் ,
  • ரத்த தாதுவில் நீர்க்கோவை உண்டாகி அதனால் கண்டா வீக்கம், 
  • மகோதரம் முதலியவை குணமாகும்