வெள்ளி, 9 நவம்பர், 2018

மிதிபாகற்காய்.(மூலிகை எண்.673.).



  • காரவல்லி என்கிற மிதிபாகற்காய் பித்தவாத கோபங்களையும்,
  • கரப்பானையும் உண்டாக்கும் .,
  • பாதரசம் ,அரிதாரம் ,பாஷாணம் முதலிய வேகங்களை முறிக்கும்.
  • இது கேரள தேசத்துப் பத்திய கறியாகும்.
  • இதில் பச்சை நிறம் ,வெள்ளை நிறம் என இருவகை உண்டு.
  • பச்சை நிறமுடைய மிதிபாகற்காய்:
  1. இது சமைத்துண்ண உஷ்ண வாயுவைக் கண்டிக்கும்,
  2. இரைப்பையிலுள்ள கிருமிகளை கொல்லும்.
  3. குடலுக்கு பலத்தை கொடுக்கும்.
  • வெண்மை நிறமுடைய மிதிபாகற்காய் :
  1. மேற்கண்ட அனைத்து குணங்களும் இருந்தாலும் ,பாஷாணங்களின் வீறை அடக்கும் படியான ஓர் பெருங்குணமுண்டு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக