திங்கள், 24 பிப்ரவரி, 2014

103.கக்கரிக்காய்



கக்கரிக்காய் பித்ததோஷம்,
மூலச்சூடு,
ரத்த பித்தம்,
இவற்றைநீக்கும்.
கோழையையும்,
குளிர்ச்சியையும் உண்டாக்கும். 

102.ஓரிலைத் தாமரை.



ஓரிலைத் தாமரையை அரைத்துப் பசுவின் மோரில் கலக்கி ஸ்திரிகள் உட்கொள்ளப் பால் சுரப்பு உண்டாகும்.கடுமையான மேக ரோகங்கள் போகும். 

101.ஓரிதழ்த்தாமரை.



ஓரிதழ்த்தாமரை சுக்கிலத்தையும்,சௌந்தரியத்தையும்,உண்டாக்கும்.மேக ரோகங்களையும்,   கிராணியையும் நீக்கும்.

100.ஓமவள்ளி


ஓமவள்ளியால் குழந்தைகளுக்கு உண்டாகின்ற மாந்தம்,தொண்டை,மார்பு,முதலிய ஸ்தானங்களில் சேர்ந்துள்ள கபக்கட்டு,சுரம் முதலியன நீங்கும். 

99.ஓமம்







ஓமத்தினால் குளிர்சுரம்,
இருமல்,
அசீரணம்,
வயிற்று உப்பிசம்,
அதிசாரம்,
குடலிரைச்சல்,
ஆசனக்கடுப்பு,
சீத பேதி,
சுவாச காசம்,
தந்த ரோகம்,
பல் வேரில் வலி,
குய்ய ரோகம் முதலியவைகள் தீரும்.

98.ஐவேலி.






ஐவேலியினால் தாது பலவீனம்,
மலடு,
வீக்கம்,
வயிற்றில் உள்ள கிருமிகள்,
மேக வாயு,
பிடிப்பு,
சிரங்கு,
கரப்பான் முதலியன குணமாகும்.

97.ஏழிலைப் பாலை




ஏழிலைப் பாலையால் 
சீத பேதி 
காது வலி 
காதில் சீழ் வடிதல்,
கணுச் சூலை,
சிரங்கு முதலியவை நீங்கும்.