குழிப்பறங்கிக்காய்க்கு
- வாதக்கடுப்பு,
- கப விருத்தி,
- வாதசூலை,
- அக்கினி மந்தம் இவைகள் உண்டாகும்.
- இது குளிர்ச்சியானது.
குரோசானி ஓமத்தால்
- அதிமூத்திரம்,
- வாதாதிக்கம்,
- விந்து நட்டம்,
- விரணம்,
- வாதாதிசாரம்,
- உடற்கடுப்பு,
- கரப்பான்,
- நீங்கா கப நிறைவு,ஆகியன நீங்கும்.
- அதிக மயக்கத்தை உண்டாக்கும்.
குருவிச்சிப்பூண்டினால்
- பெரும் வியாதி
- மலடு
- சிலேத்தும மேகம்,
- கரப்பான்,
- விஷ மாந்தம்,
- சீதரத்தக்கிரகணி முதலியவை தீரும்.
நாறும் கற்றாழைக்கு
- வாத மேகம்.
- கபகோபம்,
- கிருமிக்குத்தல்,
- பெரும் வியாதி,
- மூலம்,
- உன்மாதம்,
- பகந்தரம்,
- வயிற்றுநோய்,
- தினவுள்ள பித்த கிரிச்சரம் ஆகியன போகும்.
குப்பை மேனி இலையால்
- தந்த மூலரோகம்,
- தீச்சுட்ட புண்,
- தவர சங்கம விஷங்கள்,
- வயிற்று வலி,
- வாத ரோகம்,
- ரத்த மூலம்,
- நமைச்சல்,
- குத்தல்,
- இரைப்பு ,
- பீனிசம்,
- கபாதிக்கம்,ஆகியவை நீங்கும்.
குந்திரிக்கதினால்
- இருமல் ,
- இரைப்பு ,
- கிருஷ்ண குட்டம்,
- மேக கட்டி,
- தினவுடன் படருகின்ற படை,
- சிரங்கு,
- நீடித்த ரணங்கள் யாவும் நீங்கும்.
பச்சையாய் உள்ள குத்துக்காற்சம்மட்டி வேரினால்
- மகா வாதம் 24 ம்
- மேக கட்டிகளும்,
- திமிர் வாதமும்,
- மூர்ச்சையின் அயர்வும் போகும்.