- சாமை அரிசிக்குத் தாகசுரம்,
- பிரமேகம்,
- மகாவாதம்,
- சோபாரோகம்,இவைகள் நீங்கும்.
- தேக புஷ்டியுண்டாகும்.
- சாத்துக்குடிப் பழம் எல்லா நோயாளிகளும் உபயோகப்படுத்தலாம்.
- இதயம் பலமாகும்.
- சுத்த ரத்தம் உண்டாகும்,
- நாவின் ருசி முதலியன உண்டாகும்.
- சாதிப்பூவுக்கு திரிதோஷம்,
- தலைநோய்,
- தேக உஷ்ணம்,
- கண் படலம்,இவைகள் நீங்கும்.
- நீங்காத ஒளியும்,
- மணமும் உண்டாகும்.
- சாதிப்பத்திரிக்கு அழற்சுரம்,
- கிரகணி,
- சலமந்த பேதி,இவைகள் நீங்கும்.
- பித்தமும்,
- சுக்கில பெருக்கமுண்டாகும்.
- சாதிநார்த்தம்பழத்தால் தாகம்,
- வாய்க்கசப்பு,நீங்கும்.
- உப்பிட்ட காயால் வாதரோகங்கள் போகும்.
- சாதிக்காய்க்கு விந்து நஷ்டம் ,
- அதிசாரம் ,
- வாதங்கள் ,
- தலைநோய்,
- இரைப்பு,
- இருமல்,
- உஷ்ணவாதகிரகணி,முதலியன விலகும்.
- மயக்கமும்,பித்தமும் அதிகரிக்கும்.
- சன்ன லவங்கப்பட்டை,
- இரத்தக்கிராணி,
- வயிற்றுப் பிடுங்கல்,
- மூன்றாம்வலைய மூலவிரணம்.இவற்றை நீக்கும்.
- தேகத்திற்கு குளிர்ச்சியைத் தரும்.