- இலவங்கப் பூவிற்குப் பித்தகோபம்,அதிசாரம்,சர்த்தி,உதிரக்கிராணி,ஆசனப்பிடுங்கல்,விந்து நட்டம் செவி நோய்,சிவந்த கருத்த மச்சங்கள்,விவுர்தம்,சம்விவுர்தம்,என்கிற ஆசிய வாதங்கள்,கண்ணில் பூப் படருதல்,மலக்கட்டும்,சௌக்கியம் உண்டாகும்.
- லவங்கப் பத்திரி பிரமேகம் ,சுரம்,குளிர் சுரம்,வெள்ளை,இரைப்பு,இருமல் ,பித்ததாகம்,வமனம்,விவுர்தசியம்,சம்விதார்சியம்,மேக பிடிப்பு,சுக்கில நட்டம்,வாய் கசப்பு,அரோசகம் இவற்றை நீக்கும்.

- இலவங்கப்பட்டையானது சுக்கில நஷ்டம்,அதிசாரம்,பற்பல விஷங்கள்,வாயை யநுசரித்த வாதம்,தேவபூதமாகிய கிரகங்கள்,சிலந்தி விஷம்,பாம்பு விஷம்,சுவாஷா காசம்,தீர்க்கும்.

- இலந்தை பழத்தால் பித்த மூர்ச்சை,அரோசகம்,திரிதோஷவாந்தி,வலிவாதம்,பசிக்கும் போது இதை சாப்பிட்டால் வயிறு எரிச்சல் உண்டாகும்.
- இலந்தை மர வேர்,அயர்ச்சி நீக்கும்.தீபாக்கினியை உண்டாக்கும்.
- இந்த இலைக்கு சீல்மூலம்,ரத்தாதிசாரம்,தேக எரிச்சல்,வயிற்றுக் கடுப்பு, பித்தமேகம் தீரும்.
- இது ஒரு பேதிக்கிழங்கு ,விரோசனம்,பித்தாதிக்கம்,குடற்சுத்தி,வீரிய விருத்தி இவற்றை உண்டாக்கும்.
- காட்டில் விளைகின்ற இருவியால் வாத சீதளத்தினால் வலி,மயக்கம்,தாளக்கூடாத தலைவலி,சந்நி,அடுத்துவரும் விக்கல் முதலியன போகும்.

- உஷ்ணமும் ,கார்ப்புச்சுவையும்,உள்ள இருவாச்சியால் நேத்திரம் பிரகாசமும் ,தேகத்தில்,சுபாவ வாசனையும் வனப்பும் உண்டாம்.
- தேகக்குத்தலும்,மூர்சரோகமும் போம்.