குப்பை மேனி இலையால்
- தந்த மூலரோகம்,
- தீச்சுட்ட புண்,
- தவர சங்கம விஷங்கள்,
- வயிற்று வலி,
- வாத ரோகம்,
- ரத்த மூலம்,
- நமைச்சல்,
- குத்தல்,
- இரைப்பு ,
- பீனிசம்,
- கபாதிக்கம்,ஆகியவை நீங்கும்.
குந்திரிக்கதினால்
- இருமல் ,
- இரைப்பு ,
- கிருஷ்ண குட்டம்,
- மேக கட்டி,
- தினவுடன் படருகின்ற படை,
- சிரங்கு,
- நீடித்த ரணங்கள் யாவும் நீங்கும்.
பச்சையாய் உள்ள குத்துக்காற்சம்மட்டி வேரினால்
- மகா வாதம் 24 ம்
- மேக கட்டிகளும்,
- திமிர் வாதமும்,
- மூர்ச்சையின் அயர்வும் போகும்.
குதிரைவாலியால்,
- மூலக்கடுப்பு ,
- அதிசாரம் ,
- சுர வேகத்தால் வந்த நாவறட்சி,
- சகனா விருத வாதம்,
- வாதநோய்,
- பிரமேகம்,
- இருமல்,
- கட்டி,
- படுவன்,
- நேத்திர மங்கல்,
- கோழை,
- அக்னிமந்தம்,
- வாத கப தொந்தம்,
- தினவு,ஆகியவை போம்.
குதிரைக்குளம்படி இலையால்
- அசுவ வாதம்,
- சன்னி,
- தினவு,முதலியன நீங்கும்.
குசும்பாச் செடியினால்
- சிறு நீர்க்கட்டு,
- சொறி ,
- வீக்கம் ,
- சூலை ,
- பிடிப்பு இவைகள் போகும்.
குங்குமப்பூவினால்
- தாது நட்டம்,
- நாவறட்சி,
- குடல் வாதம்,
- மேகநீர்,
- கீழ் பிடிப்பு,
- கபாதிக்கம்,
- அதிக சுரம்,
- பத்தியம்,
- விகுண வாதம்,
- மண்டைவலி,
- கரு விழியில் படருகின்ற பூ,
- கண்நோய்,
- வாந்தி,
- சலபீனிசம்,
- காது மந்தம்,
- நீர் ஏற்றம்,
- வாயினிப்பு,
- பிரசவ மலினம்,ஆகியவை நீங்கும்.