- கொளுஞ்சி நாரத்தங்காயால் இருமல் ,
- ஆம தோஷம்,
- வாதவிகுணம்,
- கபாதிக்கம் ,
- தாகம் இவற்றை நீக்கும் .
- கொழுக்கட்டை மரத்தினால் அர்ச்சிக்கரமும்,
- வாதத்தினால் மூலாக்கினி தள்ள விழா நின்ற ரத்த சீதமும் நீங்கும்.
- ரத்த மூலமும்,பெரும்பாடு இதன் பட்டை (துவர்ப்பு சுவை பட்டையால் )சூரணம் ,அல்லது குடிநீரால் குணமாகும் .
- கொய்யாப் பழத்தினால் முத்தோஷம்,
- தலை மயக்கம்,
- அருசி
- மந்தம்
- வயிற்று உப்பிசம் ,
- கரப்பான் ,
- வீரியம் இவைகள் உண்டாம்,
- நன்றாக மலம் கழியும்.
- சிவப்பு ,வெள்ளை இரு நிறங்களுடைய பழத்திற்கும் ஒரே பலன்தான் .
- கொம்புப் பாகாயானது பத்தியத்திற்கு ஆகாது.
- நல்ல மருந்துகளை முறிக்கும்.
- வாதம், பித்தங்களை கூட்டும்.
- கொமட்டிமாதுளம் பழத்தினால் அரோசகம் ,
- பித்த கோபம் ,
- சிலேத்தும தோஷம் ,இவைகள் நீங்கும் .
- உருசியையுண்டாக்கும் .
- இதை உப்பிட்டு ஊறுகாய் செய்து அன்னத்துடன் உட்கொள்ளவது வழக்கம்.
- பத்தியத்திற்கு ஆகாது .
- கபம் ,
- வாத கடுப்பை உண்டாக்கும் .
- வயிற்றில் வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் ,
- பித்தவாயு ,மார்பு வலியை உண்டாக்கும்.
- மருந்தை முறிக்கும் .
- கொத்தமல்லி விதையால் உட்சூடு,
- நளிர் சுரம் ,
- பைத்திய வேகம்.
- அசீரணம்,
- வாந்தி,
- விக்கல்,
- நாவறட்சி ,
- சுக்கில பலவீனம்,
- பெரும் ஏப்பம் ,
- கறுத்த விரணம் போகும்.