செவ்வாய், 18 செப்டம்பர், 2018

சீமை காசரைக்கீரை.(புளிச்சிறுக்கீரை)(மூலிகை எண்.345.).


  • சிவப்பு நிறத்தையுடைய சீமை காசரைக்கீரையினால் பித்தம் நீங்கும் .
  • தீபனம் உண்டாகும் ,
  • தாதுபலம் உண்டாகும் ,
  • தேகத்தில் உஷ்ணம் குறையும் .

செடிக்காசரைக்கீரை.(புளிச்சிறுக்கீரை).(மூலிகை எண்.344.).




  • செடிக்காசரைக்கீரையினால் கபம் ஒழியும் .
  • இது பித்தத்தால் ஏற்பட்ட அரோசிக்கத்தையும்,மயக்கத்தையும் நீக்கும் .
  • புளிச்சிறுக்கீரையினால் (சீமைக்காசரை)சிணுக்கிருமல்,அஜீரணம் ஒழியும் .
  • காயசித்தியும் ,புணர்ச்சியில் விருப்பம் உண்டாக்கும்.
  • இதில் சீமைக்காசரை(சிவப்புக்காசரை) ,கொடிக்காசரை என இரு வகைகள் உண்டு.அதில் சீமைக்காசரைக் கீரையே அதிகம் உயர்ந்தது.
  • இது வேலூரில் கிடைக்கும் .

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

வியாழன், 4 ஜனவரி, 2018

செங்கற்றாழை.(மூலிகை எண்.342.).


  • செங்கற்றாழையினால் உட்சூடு அகலும்.
  • நித்திரை பங்கம் நீங்கும்.
  • நல்ல தேஐசை உண்டாக்கும்.
  • இரும்பை தங்கமாக்கும்.(இரும்பு ஊசி சொருகி வைத்து மறுநாள் எடுத்து பார்க்க தங்க மூலாம் பூசியது போல தங்க வர்ணமாய் இருக்கும்).
  • குறிப்பு :சாதாரண கற்றாழையை சாயத்தில் ஊறவைத்து ஏமாற்றுக்காரர்கள் விற்கிறார்கள்.அசல் மூலிகை பெற வேண்டின் அது இருக்கும் மலைகளில் சென்று நேரடியாக எடுத்துக்கொள்ள நன்மையாம்.

செங்கழுநீர்க்கிழங்கு.(மூலிகை எண்.341.).


  • செங்கழுநீர்க்கிழங்கால் இருமல்,
  • பித்தநோய்,
  • சர்வ மேகம்,
  • புணர்ச்சியின் வெப்பம்,
  • தாகரோகம்,
  • சிலேத்தும அரோசகம் இவைகள் நீங்கும்.
  • விழிக்கும் ,உடலுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும்.

புதன், 3 ஜனவரி, 2018

செங்கத்தாரி வேர்ப்பட்டை.(மூலிகை எண்.340.).






  • செங்கத்தாரி வேர் பிரமேகநீர்,
  • ஓட்டுப்புண் (கிரந்தி),
  • புண் புரைகள்,
  • கீல்களில் வீங்கச் செய்கின்ற கப மகா வாதம் இவைகள் போகும். 

சூரைப்பழம்.(மூலிகை எண்.339.).

சூரைப்பழம்.(மூலிகை எண்.339.).


  • காரைப் பழத்தின் ஓர் இனமாகிய சூரைப்பழத்திற்கு அதிமந்தமும்,
  • கப தோஷமும் ,
  • குடல் நோயும் உண்டாகும்.