செவ்வாய், 18 செப்டம்பர், 2018

செப்பு நெருஞ்சில்.(மூலிகை எண்.352.).



  • செப்பு நெருஞ்சில் திரிதோஷம் ,
  • சுரம் முதலிய நோய்கள் ,
  • சுக்ர மேகம் (சுக்கில மேகம் ),
  • நீடித்த உடல்சூடு ,முதலியன நீங்கும் .
  • செந்நாயுருவிச்சமூலம்.(மூலிகை எண்.351.).

    • கார்ப்புங்  கைப்புமுள்ள செந்நாயுருவிச்சமூலத்தால் ஏறுவீக்கம் ,
    • பாண்டு ,
    • காமிலம் ,இவற்றை நீக்கும் .
    • மாதர்களின் ருதுவான சோணித்ததை வழக்கப்படி உண்டாக்கும்.

    செந்தாழம்பூ.(மூலிகை எண்.350.).


    • உஷ்ண மணம் பொருந்திய செந்தாழம்பூவினால் சிரஸ்தாபரோகம் ,
    • நீரேற்றம் ,
    • நெஞ்சில் கபாதிக்கம்,
    • இருமல் ,
    • சலிக்கின்ற வாதகோபம் இவற்றை போக்கும் .
    • சரீரத்தில் மினுமினுப்பை உண்டாக்கும் .

    செந்தராயிலை (மூலிகை எண்.349.).

    • செந்தராயிலைக்கு வாதநோய் ,
    • முளை மூலம் ,
    • அருசி ,
    • நீர்த்தாரைச்சூடு ,
    • ஆயாசம் முதலிய தனித்தனி தோசங்கள் தீரும்.
    • தீபனமுன்டாகும் .

    கொடிக்காசரைக்கீரைவித்து.(மூலிகை எண்.348.).


    • கொடிக்காசரைக்கீரையின்  வித்தை(விதையை )பாலில் அரைத்து ஸ்திரிகளுக்குக் கொடுக்க சிக்குப்பட்டுள்ள சூதகத்தை வெளியாக்கும்.
    • கருவையும் அழிக்கும் .  

    செடிக்காசரை வித்து.(மூலிகை எண்.347.).


    • செடிக்காசரைக்கீரையின்  வித்தை(விதையை )பாலில் அரைத்து ஸ்திரிகளுக்குக் கொடுக்க சிக்குப்பட்டுள்ள சூதகத்தை வெளியாக்கும்.
    • கருவையும் அழிக்கும் .  

    கொடிக்காசரைக்கீரை.(மூலிகை எண்.346.).


    • கொடிக்காசரைக்கீரையினால் அதிகரித்த பித்தமடங்கும்.
    • நீற்றுப்போன விந்து தடிப்பேறி போகத்தில் இச்சையுண்டாகும் .