வியாழன், 20 செப்டம்பர், 2018

செவ்வந்திப்பூ.(மூலிகை எண்.359.).

  • வாசனையுள்ள செவ்வந்திப்பூவால் மூர்ச்சையும் ,
  • தலைச்சுற்றலும் நீங்கும் .,
  • கண்ணுக்கு ஒளியையும் ,
  • ரோமச்செழிப்பையும் தரும் .
  • செவ்வகத்தி இலை,கபதோஷத்தை உண்டாக்கும்.
  • பற்பல செந்தூரங்கள் செய்யவும் ,
  • நவநீத பற்பம் செய்யவும்,
  • தாளகம் சுத்திசெய்வதற்கு உதவும்.

செவ்வகத்திப்பூ.(மூலிகை எண்.357.).



  • செவ்வகத்திப்பூ பார்க்கிற்  பயங்கரத்தைக் கொடுக்கின்ற நாசியால் வருகின்ற ரத்தப்பெருக்கை விரைவில் நிறுத்தும்.
  • உள்வெப்பத்தையும் நீக்கும் .

செருப்படை .(மூலிகை எண்.356.).


  • செருப்படைக்கு வாதகோபம் ,
  • மந்தாக்கினி ,
  • வெள்ளைவவீழ்தல் ,
  • ஆகிருஷ்ணஸ்தம்பனவாதம்,
  • சூலை ,
  • குன்மம் ,இவைகள் நீங்கும்.

செம்முள்ளி.(மூலிகை எண்.355.).


  • செம்முள்ளியினால் கபப்பெருக்கம் ,
  • கணமாந்தம் ,
  • சுவாசம் ,
  • குழந்தைகளுக்குண்டாகின்ற சுர தோஷம் இவைகள் போகும் .

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

செம்பருத்திப்பூ.(மூலிகை எண்.354.).

  • செம்பருத்திப்பூ தேக அழற்சி ,
  • ரத்தபித்தரோகம் ,
  • உத்திரக்கடுப்பு ,
  • சலமேகம் ,
  • வெள்ளை ,
  • விசூரி ,( ஒரு வகை பேதி )
  • தாகம் இவற்றை நீக்கும் .

செம்பரத்தம்பூ.(மூலிகை எண்.353.).

  • செம்பரத்தம்பூவால் மேக வெள்ளை ,
  • பிரமிய மேகம் ,
  • ரத்த பிரமேகம் ,
  • பெரும்பாடு ,
  • அசிக்கிரவருக்கம் இவற்றை நீக்கும் .