- பெருங்குமிழ மரத்தினால் மதுமேக எரிச்சல் ,
- வெள்ளை வீழலிற் கடுத்தல் ,
- பித்தசுரம் ,
- வாதசுரம் ,
- திரிதோஷ கோபம் ,முதலியவை போகும் .
- மணமுள்ள பெருங்காயத்தால் தந்த ரோகம்,
- தந்த மூலரோகம் ,
- சகல சர்ப்ப விஷம்,
- தேள் விஷம் ,
- கிருமி ,
- அசீரணம் ,
- வாதாதிக்கம் ,
- உதாவர்த்தா வாதம் ,
- யோனிரோகம் ,
- இருத்வாயு,
- எட்டு வகை குன்மம் ,
- உதர ரோகம் .
- கருப்ப விரித்திகட்டி,
- சூலை ,
- ரத்தக்கிருமி ,
- கபநோய் ,
- குடைச்சல் இவைகள் போகும் .
- பெருங்கட்டுக்கொடிக்கு பெரும்பாடு ,
- நாவறட்சி ,
- பித்தத்தினால் கைகால் எரிதல் முதலியன நீங்கும்.
- பெரியாநங்கையிலைக்கு பித்தரோகங்களும்,
- மலபந்தமும் நீங்கும் ,
- இந்த மூலிகை பலவித பஸ்பங்கள் செய்வதற்க்கு பயன்படும்.
- கருமைநிறப் பூனைக்காலி விதையினால் கற்றாழை நாற்றமும்,
- இரத்தக் கிரகணியும் ,
- கரப்பானும் , நீங்கும்,
- தாதுபுஷ்டி உண்டாகும்.
- பூனைக்கண் குங்கிலியத்தால் பல்வலி ,
- தேக துர்ப்பலம் ,
- தாது நட்டம் ,
- பேதி இவைகள் போகும் .
- நூறு வருடம் சென்ற பூவரசம்வேர் நாட்பட்ட குஷ்டம் நீக்கும்.
- பூவரசு சமூலம் (பழுப்பிலை,விதை ,பூ ,பட்டை ,காய் ,இலை ) நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொடுக்க கிருமிரணம் ,
- பேதி ,
- பெருவியாதி ,
- காணாக்கடி ,
- குத்தல் ,
- விஷபாகம் ,
- பெருவயிறு வீக்கம் ,
- கரப்பான் ,
- சிரங்கு ,
- சலப்பிரமேகம் இவற்றை போக்கும் .