செவ்வாய், 10 செப்டம்பர், 2013

55.இராம சீத்தாப்பழம்








  • இராம சீத்தாப்பழம் சாப்பிட ஜீவாக்கினியைக் குறைத்து அஜீரணத்தை உண்டாக்கும்.இன்னும் தலைவலயை உண்டாக்குவதுடன் கபத்தை அதிகமாக உண்டாக்கும்.

54.இராக்காசிமடல்





  • இராக்காசிமடல் செடியால்,வெட்டு காயம்,வீக்கம்,பல்வலி ,வெள்ளைக்கட்டி ,மேக வாய்வினால் உண்டான பிடிப்பு முதலியவை குணமாகும்.

53.இரத்த போளம்





  • இரத்த போளத்தினால்,விழுந்து  ரத்தம் கட்டி,அதன் மேலதிகரித்த நோவுடன் வீங்கு கின்ற வீக்கம்,எழுந்து நிமிர்ந்து நிற்கவொட்டாத பக்க நோயும் மார்பின் உபத்திரமும் நீங்கும்.    

51.இண்டு






  • இண்டின்  கொடியால் பீநிசம், சலதோஷம் ,கபாலக் குடைச்சல்,முக சந்நிபாதம் போகும். 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

52.இத்திக்காய்


  • இத்திக்காய் வாத மலபந்தத்தைப் போக்கும்,இதன் பிஞ்சு,அதிசாரம்,பெரும்பாடு,உட்சூடினால் பிறக்கின்ற பல ரோகங்களை போக்கும்.
  • பால் நிறைந்துள்ள இத்திப்பிஞ்சுகளைக் காலையில் 20 gm முதல் 40 gm ,சாப்பிட்டு வர அதிசாரம்,பேதி,கிராணி,உள்ளுறுப்பில் கண்ட விரணங்கள் போம்.
  • நன்றாக பழுத்த பழங்களின் விதைகளை லேகியங்களில் சேர்த்து சாப்பிடத் தாது விருத்தி உண்டாக்கும்.

சனி, 7 செப்டம்பர், 2013

50.இடிகொள்ளு


  • கொள்ளால் படர்தாமரை,ஆண்குறியில் உண்டாகிற விரணம்,கண் நோய்,மலக்கட்டு,முதலியவை போகும்.

49.இஞ்சி


  • இஞ்சிக்கு காசம் ,கபம் ,வெள்ளோக்காளம்,சந்நிபாதசுரம்,பேதி வாதசூலை, வாத கோபம் இவைகள் போம்.பசி தீபனம் உண்டாகும்.