ஞாயிறு, 22 மார்ச், 2015

காய்ச்சுக் கட்டி (மூலிகை எண்:184.)




  • காய்ச்சுக் கட்டியினால் பற்கள் இறுகும்.
  • விரணங்களுக்கு இதைப் போட்டுவர ஆறும் .
  • இதை உட்கொண்டால் மலத்திலுள்ள கருப்புநிறமான கிருமிகள் ஒழியும்.

காப்பிக் கொட்டை(மூலிகை எண்:183.)







  • காப்பிக் கொட்டை முதலில் உற்சாகம்,தேக வலுவு,பித்தம்,இவற்றை உண்டாக்கும்.
  • சிறுது பழக்கபடின் பசிதீபனத்தை நாளுக்கு நாள் குறைத்து தேஜசை மாறுபடச் செய்யும் .
  • இது பேதி,நீர்க்கட்டு,காசம் ,சுரம் ,முதலிய ரோகங்களை கண்டவர்களுக்கு அதிக நன்மையுண்டாக்கும்.

காட்டு முருங்கை.(மூலிகை எண்:182.)



  • கைப்புள்ள காட்டு முருங்கை வேர் மகா விஷத்தை நீக்கும்.
  • காட்டு முருங்கை பூ கண்ணுக்கு குளிர்ச்சி தரும்.
  • இலை ,காய் ,பிசின், பிஞ்சு இவைகள் சிலேத்தும ரோகங்களை நிவர்த்தி செய்யும் .

வெள்ளி, 20 மார்ச், 2015

காட்டு மிளகு.(மூலிகை எண்:181.)



  •  காட்டு மிளகினால் பித்தமும் பசியும் அதிகரிக்கும்.
  • கப ரோகத்தை கண்டிக்கும்.
  • கர்பத்தை கெடுக்கும்.

வியாழன், 1 ஜனவரி, 2015

காட்டுமாமரம்.(மூலிகை எண்:180.)



  • காட்டுமாமரத்தால் வயிற்றுவலி,
  • வாய்க்குமட்டல்,
  • ருசியின்மை 
  • பித்த வாயு முதலியன குணமாகும். 

காட்டு மல்லிகை வேர் (மூலிகை எண்:179.)

காட்டு மல்லிகை வேரினால் சர்வசுரம்,நாவறட்சி,அக்கினிமந்தம்,அதிசாரம்,விதாகம்,ஆகியன போகும்.இதன் வேர் அதிக கசப்பு சுவையை உடையது.

காட்டுப்பழுபாகல்.(மூலிகை எண்:178.)





  • மலையடுத்த காட்டுப்பழுபாகல் காய்க்கு அன்னமிறங்களும்,
  • நல்ல பசியும் உண்டாகும்,
  • பித்த காசமும்,
  • வாதம் முதலியன நீங்கும்.