- செவ்வகத்திப்பூ பார்க்கிற் பயங்கரத்தைக் கொடுக்கின்ற நாசியால் வருகின்ற ரத்தப்பெருக்கை விரைவில் நிறுத்தும்.
- உள்வெப்பத்தையும் நீக்கும் .
- செருப்படைக்கு வாதகோபம் ,
- மந்தாக்கினி ,
- வெள்ளைவவீழ்தல் ,
- ஆகிருஷ்ணஸ்தம்பனவாதம்,
- சூலை ,
- குன்மம் ,இவைகள் நீங்கும்.
- செம்முள்ளியினால் கபப்பெருக்கம் ,
- கணமாந்தம் ,
- சுவாசம் ,
- குழந்தைகளுக்குண்டாகின்ற சுர தோஷம் இவைகள் போகும் .
- செம்பருத்திப்பூ தேக அழற்சி ,
- ரத்தபித்தரோகம் ,
- உத்திரக்கடுப்பு ,
- சலமேகம் ,
- வெள்ளை ,
- விசூரி ,( ஒரு வகை பேதி )
- தாகம் இவற்றை நீக்கும் .
- செம்பரத்தம்பூவால் மேக வெள்ளை ,
- பிரமிய மேகம் ,
- ரத்த பிரமேகம் ,
- பெரும்பாடு ,
- அசிக்கிரவருக்கம் இவற்றை நீக்கும் .
செப்பு நெருஞ்சில் திரிதோஷம் ,
சுரம் முதலிய நோய்கள் ,
சுக்ர மேகம் (சுக்கில மேகம் ),
நீடித்த உடல்சூடு ,முதலியன நீங்கும் .
- கார்ப்புங் கைப்புமுள்ள செந்நாயுருவிச்சமூலத்தால் ஏறுவீக்கம் ,
- பாண்டு ,
- காமிலம் ,இவற்றை நீக்கும் .
- மாதர்களின் ருதுவான சோணித்ததை வழக்கப்படி உண்டாக்கும்.