வியாழன், 13 பிப்ரவரி, 2014

82.உலர்ந்த திராட்சைப் பழம்


  • தேனில் பதமாக ஊறப்போட்ட திராட்சை பழம் சாப்பிட பழைய மலத்தை வெளியாக்கும்.

  • மேக அழலையை தணிக்கும்.

  • உதிரப்போக்கை உண்டாக்கும்.

  • இரப்பையையும்,குடலையும் சுத்தம் செய்யும்.

  • தாது விருத்தி உண்டாக்கும் .

  • நுரையீரளையும்,நீர்த்தாரையையும் பற்றிய விரணங்கள் ஆற்றும்.

  • வாயிலிட்டு சுவைத்து உமிழ்நீரை விழுங்க அரோசகம். 

புதன், 12 பிப்ரவரி, 2014

81.உரோஜாப்பூ

சிற்றாமரை என்னும் ரோசாப்பூ




  1. பித்த வாந்தி ,
  2. மலசிக்கல்,
  3. பெரும்பாடு,
  4. தாகம்,
  5. வாய் விரணம்,
  6. சுரம் ,
  7. ஒக்காளம்,
  8. ஆசன எரிச்சல்,
  9. ரத்த பிரமேகம்,
  10. வயிற்று இசிவு  முதலியவை போகும். 


80.உருளைக் கிழங்கு.


  1. உருளை கிழங்கால் தேக புஷ்டி உண்டாக்கும்.
  2. தும்மலை அடக்கும்.
  3. வெந்நீரால் உண்டான அழலையை ஆற்றும்,
  4. வாயுவை கண்டிக்கும் 
  5. ஜீரணம் மந்தப்படும்.



79.உருத்திராட்சம்


  1. அதிதாகம்,
  2. திரிதோஷம்,
  3. விக்கல் ரோகம் ,
  4. பித்த ரோகம்,
  5. பித்த கோபம்,
  6. சிலேத்தும ஆதிக்கம்,போகும்.


78.உருத்திர சடை



உருத்திர சடை என்கிற திருநீற்றுபச்சிலை 


கப வாந்தியை போக்கும்.

சுரத்தால் உண்டான ரத்த வாந்தியை நீக்கும்.

பித்த சுரம் போகும்.

அரோசிகம் நீங்கும்,

இந்த இலையை அரைத்து கட்டிகள் மேல் பூசிவர கரைந்து விடும் .

இந்த இலையை கசக்கி வாசத்தை முகர்வதால் இருதய நடுக்கம்.

காற்றில் உண்டான கெடுதல்,உஷ்ண தலைவலி தீரும்.

இதன் விதைக்கு சப்ஜா விதை என்று பெயர்.
இதை பாகப்படி சமைத்துண்ண  

மேக வெள்ளை,சீத பேதி,ரத்த மூலம் முதலியன நீங்கும்.



77.உப்பிலாங்க்கொடி.





  1. உப்பிலாங் கொடியினால் குழந்தைகளின் மாந்தமும்,
  2. சரீராதி சாராமும்,
  3. நீங்காத சுரமும் நீங்கும்.
  4. இதன் சாற்றால் தங்கத்தை அரைத்து 3 புடமிட செந்தூரமாகும்.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

76.உத்தாமணி




  • இந்த இலையால் பலவித நோய்களின் உபத்திரம்,
  • வாதநோய்,
  • விஷம்,
  • சன்னி,
  • திரிதோஷம்,
  • வாத குன்மம்,
  • சரீர குடைச்சல்.
  • குத்தல்,
  • நடுக்கல்,
  • நுநர் வாதம் 
  • சுவாசம் 
  • பலவித தடிப்பு ,
  • அக்னி மாந்தம் இவைகள் நீங்கும்.