புதன், 31 அக்டோபர், 2018

மக்காச்சோளம்.(மூலிகை எண்.624.).


  • மக்காச்சோளம் பசியை அடக்கும் .,
  • பலங்கொடுக்கும் ,
  • விந்து ஊறச்செய்யும் ,
  • பேதியை கட்டும் ,
  • சிலருக்கு வாயுவை உண்டாக்கும்.

மகிழம் வித்து.(மூலிகை எண்.623.).



  • மகிழம் வித்து கண்கலிக்கதிற்கு ஆகும் .,
  • தாதுவை விருத்தி செய்யும் ,
  • தேக வனப்பையும் ,பலத்தையும் அதிகப்படுத்தும்.,
  • உடல் சூட்டை தணிக்கும் ,
  • சுரம் போக்கும் ,
  • மலம் இளகுவாக போகும்.
  • சர்ப்பவிஷத்தை போக்கும் .

மகிழம்பூ.(மூலிகை எண்.622.).


  • மகிழம்பூவினால் தேக வெப்பமும் ,
  • புணர்ச்சியில் விருப்பமும் ,
  • இதனை முகர அரோசகரோகம் நீங்கும் .


பொன்னூமத்தை.(மூலிகை எண்.621.)


  • பொன்னூமத்தையினால் விரணக்கிரந்தி,
  • நாட்சென்ற கிரகணி ,
  • கருப்பாதிரசம் ,
  • பித்த விஷசுரங்கள் ,
  • தனிப்பேதி ,இவைகள் நீங்கும்.
  • குறிப்பு :
  • மஞ்சள் நிற பூக்களையுடையது ,இலைகள் சற்று பெரிதாக இருக்கும் .ஊமத்தையின் அனைத்து வகைகளும் விஷ தன்மையுடையது.சுத்தி செய்து ,தேக பலம் அறிந்து கொடுக்கவேண்டியது பண்டிதர்கள் கடமை.

பொன்னாங்கண்ணி.(மூலிகை எண்.620.)


  • பொன்னாங்கண்ணியினால் விழியைப்பற்றிய வாதசுரம் ,
  • காசம் ,
  • புகைச்சல் ,
  • கருவிழிநோய்,
  • தேகச்சூடு ,
  • பிலீகம் ,
  • மூலரோகம் இவைகள் போகும் .
  • சரீரத்தில் பொன்னிறம் உண்டாகும்.

பொன்முசுட்டை.(மூலிகை எண்.619.)




  • பொன்முசுட்டையால் வாதவலி ,
  • மயக்கம் ,
  • ஆமம் ,
  • நமைச்சல் ,
  • உட்சுடு ,
  • இவற்றை போக்கும், 
  • இதனால் உணவில் மணம் உண்டாகும்.,
  • பிரமேகநீர் ,
  • புடை ,
  • சொறி ,
  • சிரங்கு ,இவற்றை நீக்கும் .

பொற்றலைக்கையாந்தகரை.(மூலிகை எண்.618.)


  • பொற்றலைக்கையாந்தகரை தேகத்திற்கு பொற்சாயலையும் ,
  • விழிகளுக்கு ஒளியையும் ,
  • புத்திக்கு தெளிவையும் ,உண்டாகும் .
  • குன்மக்கட்டியை போக்கும் .
  • பலவித செந்தூரங்களை செய்ய உதவும்.

பொற்சீந்தில்கிழங்கு.(மூலிகை எண்.617.)



  • பொற்சீந்தில்கிழங்கானது  மதுநீர் ,
  • சயம் ,
  • இளைப்பு ,
  • சர்ப்பவிஷம் ,
  • ரத்தபித்தம் ,
  • விஷசுரம் இவற்றை நீக்கும் .
  • காயசித்தி உண்டாகும்.

பொடுதலை.(மூலிகை எண்.616.)


  • பொடுதலையால் சீதபேதி,
  • இருமல் ,
  • அதிசாரம் ,
  • சூலைநோய் ,
  • சிலேத்துமப்பிரமேகம் ,
  • வாதநோய் இவைகளை போக்கும் .
  • தேகம் பலக்கும்.

பேரீச்சங்குருத்து.(மூலிகை எண்.615.)




  • பேரீச்சங்குருத்தால் குன்மநோய் ,
  • வாந்தி ,
  • வயிற்றுவலி ,
  • வயிற்றுப்பொருமல் முதலியவை நீங்கும்.

பேராமுட்டிவேர்.(மூலிகை எண்.614.).



  • பேராமுட்டிவேரினால் வாதசுரம் ,
  • தாகரோகம் ,
  • மாந்தகணம் ,
  • நளிர்சுரம்,
  • பித்த ரோகம் ஆகியன போகும் . 

செவ்வாய், 30 அக்டோபர், 2018

பேரரத்தை.(மூலிகை எண்.613.).




  • பேரரத்தையினால் வாதநோய் ,
  • பின்னிசிவு ,
  • வலிப்பு ,
  • சந்நி பாதம்,
  • பித்தகபம் ,
  • நடுக்கற் சுரம் ,
  • கிளைகின்ற புண் ,
  • சிரசில் நீரேற்றம் ,
  • சர்வவிஷம் ,
  • ஸ்தீரிகள் ருது தோஷம் ,இவைகள் போகும் .,
  • ஒளியும் ,தேஜசும் உண்டாகும். 

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

பேய்மிரட்டியிலை.(மூலிகை எண்.612.).


  • வெதுப்படக்கி என்னும் பேய்மிரட்டியிலையானது வெளுப்பான பேதி ,
  • சிலேத்தும கிராணி ,
  • தாபம் ,
  • ரூட்சை ,
  • அள்ளுமாந்தம் ,
  • வாதாதிக்கம் ,
  • உட்சுரம் ,
  • ரத்த தாதுவிலுண்டாகின்ற மலினம் ஆகியவற்றை போக்கும் .

பேய்மிரட்டி.(மூலிகை எண்.611.).




  • பேய்மிரட்டியினால் கணமாந்தம் ,
  • பேதி ,
  • வயிற்றுநோய் ,
  • கரப்பான் ,
  • கோரசுரம்  முதலியவை போகும் .

பேய்ப்புடல்.(மூலிகை எண்.610.).


  • கசப்பான பேய்ப்புடலால் பித்தகபசுரங்கள் ,
  • காமாலை ,
  • மசூரிகை ,
  • தாகம் ,
  • தேகங் காய்ப்பேறும்படி தள்ளுகின்ற மயக்கம் இவைகள் போகும் .

பேய்ப்பீர்க்கு.(மூலிகை எண்.609.).


  • பேய்ப்பீர்க்கம் செடிக்குக் காலிற் தழும்பு ஏறும்படி கடித்த விஷங்கள் எல்லாம் நீங்கும் .(கசப்புச்சுவை உள்ளது )

பேய்ப்பாற்சொறிக்கீரை.(மூலிகை எண்.608.).


  • கசப்புள்ள (பேய்ப்)பாற்சொறிக்கீரையால் அதிசாரம் ,
  • உட்சூடு ,
  • ரத்தக்கிராணி ,
  • பித்த தோஷம் முதலியன போகும் .

பேய்ச்சுரைவேர்.(மூலிகை எண்.607.).







  • கசப்புள்ள பேய்ச்சுரைவேரினால் சர்ப்ப சப்தவேகம் ,
  • மகாவிஷம் ,
  • கோழை ,
  • காசம் முதலியவை நீங்கும் .,
  • வாந்தியை உண்டாக்கும் .

பேய்ச்சுரையிலை.(மூலிகை எண்.606.).


  • மலையில் முளைத்த பேய்ச்சுரையிலையானது முளை மூலரோகத்தையும் ,
  • கொடிய சர்ப்ப விஷத்தையும் நீக்கும் .

பேய்க்கற்றாழை.(மூலிகை எண்.605.).

  • பேய்க்கற்றாழையினால் அதிநீரும் ,
  • சரீர எரிவும் ,
  • சுரமும் போகும்.
  • இது அதிக கசப்பாக இருக்கும்.கிடைப்பது அரிது .

பேயாவாரை.(மூலிகை எண்.604.).


  • பேயாவாரை என்னும் பொன்னாவாரைச் செடியினால் சருமவெடிப்பு ,
  • சொறிந்தால் சருமத்தூள் சிந்துதல் ,
  • மேகப்புடைகள் ,
  • கண்டுகண்டாகத் தடித்தல் ,
  • நமைச்சல் ,
  • கானக்கடிவிஷம் போகும் .

பேயத்திப்பால்.(மூலிகை எண்.603.).


  • சுணையுடைய பேயத்திப்பால் பாதபேத ரோகம் ,
  • மேகச்சொறி,
  • குஷ்டரோகத் தடிப்பு ,
  • முளை விரணம் இவற்றை நீக்கும் .

பெரும்பீளைச்செடி.(மூலிகை எண்.602.).


  • பாஷாணபேதி என்கிற பெரும்பீளைச்செடிக்கு மிகுசோபையும் ,
  • பைசாச முதலிய சங்கை தோஷமும்,
  •  கல்லடைப்பும் ,
  • நீர்தாரையை பற்றிய பிணிகளும் நீங்கும்.

பெரும்பயறு.(மூலிகை எண்.601.).


  • பெரும் பயற்றை அதிகமாக தின்பவர்க்குத் தீபாக்கினி கெடுவதுமல்லாமல் ,
  • அசீரணம் ,
  • அதிசாரம் ,
  • கப ரோகம் ,
  • வாத பிடிப்பு உண்டாகும்.

பெருமரப்பட்டை.(மூலிகை எண்.600.).



  • பெருமரப்பட்டையால் அதிசாரம் ,
  • கிரகணி ,
  • உதிரநோய் ,
  • வாதாதிக்கம் நீங்கும் .,
  • சரீரத்தை போஷிக்கும் .

பெருந்தேட்கொடுக்கு.(மூலிகை எண்.599.).



  • சுடுகாடுமுட்டா என்கிற பெருந்தேட்கொடுக்கால் ரசதாதுவைப் பற்றிய அணுக்கிருமி ,
  • விரணக்கிரந்தி ,
  • மேகக்கட்டி ,
  • கருங்கிரந்தி இவைகள் போகும்.

பெருஞ்சின்னி.(மூலிகை எண்.598.).





  • பெருஞ்சின்னியிலைக்குக் காணாக்கடி விஷமும் ,
  • பார்க்கும் படிக்கு கடித்த பற்பல செந்து விஷங்களும் நீங்கும்.

பெருங்குமிழமரம்.(மூலிகை எண்.597.).



  • பெருங்குமிழ மரத்தினால் மதுமேக எரிச்சல் ,
  • வெள்ளை வீழலிற் கடுத்தல் ,
  • பித்தசுரம் ,
  • வாதசுரம் ,
  • திரிதோஷ கோபம் ,முதலியவை போகும் .

பெருங்காயம்.(மூலிகை எண்.596.).




  • மணமுள்ள பெருங்காயத்தால் தந்த ரோகம்,
  • தந்த மூலரோகம் ,
  • சகல சர்ப்ப விஷம்,
  • தேள் விஷம் ,
  • கிருமி ,
  • அசீரணம் ,
  • வாதாதிக்கம் ,
  • உதாவர்த்தா வாதம் ,
  • யோனிரோகம் ,
  • இருத்வாயு,
  • எட்டு வகை குன்மம் ,
  • உதர ரோகம் .
  • கருப்ப விரித்திகட்டி,
  • சூலை ,
  • ரத்தக்கிருமி ,
  • கபநோய் ,
  • குடைச்சல் இவைகள் போகும் . 

பெருங்கட்டுக்கொடி.(மூலிகை எண்.595.).


  • பெருங்கட்டுக்கொடிக்கு பெரும்பாடு ,
  • நாவறட்சி ,
  • பித்தத்தினால் கைகால் எரிதல் முதலியன நீங்கும்.

சனி, 27 அக்டோபர், 2018

பெரியாநங்கையிலை.(மூலிகை எண்.594.).


  • பெரியாநங்கையிலைக்கு பித்தரோகங்களும்,
  • மலபந்தமும் நீங்கும் ,
  • இந்த மூலிகை பலவித பஸ்பங்கள் செய்வதற்க்கு பயன்படும்.

பூனைக்காலி வித்து.(மூலிகை எண்.593.).


  • கருமைநிறப் பூனைக்காலி விதையினால் கற்றாழை நாற்றமும்,
  • இரத்தக் கிரகணியும் ,
  • கரப்பானும் , நீங்கும்,
  • தாதுபுஷ்டி  உண்டாகும்.

பூனைக்கண் குங்கிலியம்.(மூலிகை எண்.592.).



  • பூனைக்கண் குங்கிலியத்தால் பல்வலி ,
  • தேக துர்ப்பலம் ,
  • தாது நட்டம் ,
  • பேதி இவைகள் போகும் .

பூவரசு சமூலம்.(மூலிகை எண்.591.).






  • நூறு வருடம் சென்ற பூவரசம்வேர் நாட்பட்ட குஷ்டம் நீக்கும்.
  • பூவரசு சமூலம் (பழுப்பிலை,விதை ,பூ ,பட்டை ,காய் ,இலை ) நிழலில் உலர்த்தி சூரணம் செய்து கொடுக்க கிருமிரணம் ,
  • பேதி ,
  • பெருவியாதி ,
  • காணாக்கடி ,
  • குத்தல் ,
  • விஷபாகம் ,
  • பெருவயிறு வீக்கம் ,
  • கரப்பான் ,
  • சிரங்கு ,
  • சலப்பிரமேகம் இவற்றை போக்கும் .